
🍉🍉🍉 வைபோகம் தரும் வைகாசி விசாக விரதம் 🍓🍓🍓 ‘‘வைகாசி மாசத்ல வெயில் மண்டையைப் பிளக்கத்தான் செய்யும். இந்த மாசம் அக்னி நட்சத்திரம் வேறே வரும். கேட்கணுமா?’’ மாமி ஆரம்பித்தாள். ‘‘ஆனா இந்த வெயில் காலத்துலதான், முருகப் பெருமான் உஷ்ணாவதாரம் செய்தார்...’’ ‘‘அட, இந்த மாத ஸ்பெஷல் முருக அவதாரம் பற்றியா?’’ கிருத்திகா சூசகமாய் கேட்டாள். ‘‘ஆமாம், இந்த மாசம் அதாவது வைகாசி மாசம், விசாக நட்சத்திரத்திலேதான் முருகன் அவதாரம் பண்ணினார்.’’ ‘‘இந்த அவதாரத்தோட நோக்கம் என்ன மாமி?’’ தீபா கேட்டாள். ‘‘வேற என்ன, அசுரவதம்தான்’’ கிருத்திகா சொன்னாள். ‘‘கரெக்ட்’’ பவானி மாமி கிருத்திகாவை ஆமோதித்தாள். ‘‘அசுரர்களோட தொல்லை தாங்க முடியாம தேவர்களும் முனிவர்களும் மக்களும் ரொம்பவும் கஷ்டப்பட்டாங்க. துஷ்டனுக்குப் பதவியும் பராக்ரமும் வந்திட்டா கேட்கவா வேணும்? ‘கள்ளைக் குடிச்ச குரங்கைத் தேளும் கொட்டிச்சாம்’ அப்படீம்பாங்களே, அதுமாதிரி அரக்கர்களெல்லாம் அநியாயம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. கொஞ்சமும் தயங்காம கடுமையா தவம் இருந்து தேவையான வரமும் வாங்கிட்டதாலே, ரொம்பவும் அ...