💎 நாயனார் வள்ளிமலை யோகீஸ்வரர்
மேல புத்தேரி
யோக நிலையில் சிறந்து விளங்கிய இப்பகுதி மக்களால் கடவுளாகவே வணங்கப்பெறும் சிறப்புடையோர் நாயனார் வண்டிமலை யோகீஸ்வரர் வண்டி மலைஎன்பது சுவாமிகளின் இயற்பெயர் நாயனார் என்பது தலைவர் "குரு "எனும் பொருளை குறிக்கும் யோகீஸ்வரர் என்பது யோகத்தில் சிறந்திருந்ததைக் குறிக்கும்
சிறந்த முனிவராய் சாஸ்தாவை வழிபட்டு வந்த சாமிகள் ஒருநாள் யோக நிஷ்டையில் அமர்ந்து சமாதி கூடினார் அடியவர்கள் வந்து தினமும் யோகியை வணங்கி சென்றனர் நாட்கள் செல்ல செல்ல யோகியின்உடலைச் சுற்றிலும் புற்று வளா்ந்தது மூடியது .அப்புற்று 118 அடி உயரம் வரையில் வளர்ந்தது .மழையினால் பாதிக்கா வண்ணம் ஊர்மக்கள் சுற்றுப்புறத்தை சுற்றி செங்கல்களை அடுக்கி உயரமாக சுவர் போன்று கட்டி வைத்தனர் அமைப்பிலேயே இன்றளவும் சமாதி கோயில் விளங்குகிறது யோகீஸ்வரா் சமாதி நிலையில் இருந்தபோது அவரை சுற்றி புற்று எழுந்து ஏறி( உயா்ந்து ) வந்து ஏறி நின்றமையால் அப்பகுதி புற்றேறி என வழங்கப்படுகிறது . அப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக யோகீஸ்வரர் விளங்குகிறார் .
சமாதி கோயில் அமைந்துள்ள இடம்
Comments
Post a Comment