சர்க்கரைநோய்க்குமருந்து

#சர்க்கரைநோய்க்குமருந்து... #சிறுநீரகக்கற்களைத்தடுக்கும்... #வாழவைக்கும்வாழைத்தண்டுசாறு! சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு! வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத்தின் தண்டு பொரியல், கூட்டு செய்து சாப்பிடப் பயன்படுவது. ஆனால், வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். சிறுநீரகக்கோளாறுகளுக்கு பரவலாகப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான உணவு. அது மட்டும் அல்ல... இன்னும் எண்ணற்றப் பலன்களை வாரிக் கொடுக்கக்கூடியது வாழைத்தண்டு சாறு. அவை என்னென்ன? பார்க்கலாமா? ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்! உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும். ரத்தசோகையை குணப்படுத்தும்! வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்த...