ஒரு கண் பார்த்துக்கொண்டு இருக்கிறது

 ஒரு கண் பார்த்துக்கொண்டுஇருக்கிறது

அத்தியாயம் 4




மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்


மாடுநிற்கும் யோகமல்ல விததையாச்சு


சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்


சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்


அகத்தியர்


நம்மில் யாரும் பிரளயத்தை பார்த்ததில்லை. பிரளயம் குறித்த எந்த யோசனையும் நமக்கு கிடையாதாகையால் நம்மில் பலரும் உலகம் சாஸ்வதமான, நிரந்தரமான பாதுகாப்பான ஒன்று என்று மெத்தனமாக இருந்து வருகிறோம்


ஆனால், மிக சமீபகாலங்களில் ஒரு தொலைநோக்கு ஆராய்ச்சியை மேற்கொண்டு தீவிரமாக சிந்தித்து வருகிறார்கள் அது, இனி வரும் காலங்களில் உலகம் முழுவதுமாக அழிந்துவிட என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன என்பது குறித்தது!


உலகத்தில் உள்ள பல நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன உலகெங்கும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் பேராசை பிடித்தவர்கள் இருக்கிறார்கள், தீவிரவாதிகளிடம்


ஓம்..


பணம் இருக்கிறது. இவை எங்காவது தவறாக மாறி வேலை செய்ய ஆரம்பித்தால் பின் அணு ஆயுதப் போரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற ஓர் அச்சுறுத்தல் எல்லோருக்கும் புரிந்துதான் இருக்கிறது


ஆனால், அப்படி ஏதும் நடந்து விடாமல் இருக்க தொடர்ந்து அதை ஒரு கண் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது


பல நாடுகளில் உள்ள ராணுவங்கள் உபயோகிக்கும் ரோபோக்கள் மிகவும் சிக்கலானவை. அவற்றை அனுதினமும் மேம்படுத்திக்கொண்டே வருகிறார்கள் எதிர்காலத்தில் இத்தகைய ரோபோக்கள், சுயமாக தீர்மானிக்கும் திறனைப் பெறலாம். அது, எப்போதாவது ஒருசமயம் உலகத்தில் உயிர் வாழும் மனிதர்கள் அனைவரையும் கொள்றுவிடக்கூட "சுயமாக நினைக்கலாம். யாராவது அதன்மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையைப் போல தற்போது 2% மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஆனாலும் பசுமைப்புரட்சியால் ஏற்பட்ட அமோக


ஓம்..


விளைச்சலினால், பெருகியிருக்கும் மிகப்பெரிய ஜனத்தொகைக்குத் தேவையான உணவை தற்போது நாம் பெற்றிருக்கிறோம். மேலும், புதிய வகை பிராணிகளை உண்ணவும் கற்றுக்கொண்டோம்.


ஆனால், இன்னும் 50 வருடங்கள் கழித்து தற்போது இருக்கும் ஜனத்தொகையைப் போல மேலும் 2% மடங்கு அதிகமானால் அதற்கேற்ற உணவை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயப்புரட்சி" ஏதும் தற்போது நம்மிடம் இல்லை. 3 வருடங்கள் என்பது தொலைதூரத்தில் இல்லை. அந்த நேரங்களில் பலர் பட்டினியால் செத்து மடியலாம் உணவுக்காக மிகப்பெரிய யுத்தங்கள் நடக்கலாம் அல்லது உணவுப் பொருட்களின் விலை வானளாவிய அளவுக்கு உயரலாம். இவை எல்லாவற்றையும் யாராவது ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் முழு விழிப்புடன் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.


உலக வரலாற்றை அறிந்தவர்கள், உலகில் இதுவரை 12 முறைகளாவது உறைபனியுகம் (Ice Age) நடந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். தற்போதைய உலகத்தின் அத்தகைய உறைபனிக் காலம் தொடங்க இன்னும் 20,000 வருடங்கள் கூட எடுக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள் இரண்டு உறைபனி யுகங்களுக்கு நடுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்


உறைபனியுகம் ஆரம்பித்துவிட்டால், உலகத்தின் வடக்குப் பகுதி பெருமளவு அழித்துவிடும். இந்தியா போன்ற நாடுகளில் இது நிகழாது என்றாலும், பருவநிலை மாற்றங்களும் வானிலையும் வெகுவாக பாதிக்கப்படும்


உறைபனி என்றால், சாதாரணமாக தற்போது பெய்யும் ஒரு அடி இரண்டு அடி அல்ல! சென்ற உறைபனிகாலத்தில், நியூயார்க் நகரில் தற்போது உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் மூடிவிடும் அளவுக்கு பனி பல்லாண்டுகளாக உறைந்து கிடந்தது என ஆராய்ச்சியாளர்கள், தற்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது, சென்ற உறைபனி யுகத்தில் நியூயார்க் நகரை 1,500 அடி கனமுள்ள பனி மூடியிருந்ததாம்!


ஓம்..


தூங்கிக்கொண்டிருக்கும் எரிமலைகள் உலகின் பல பாகங்களில் இருக்கின்றன அதில் சில சூப்பர் எரிமலைகள் இவற்றின் சூடு நிரம்பிய நெருப்புக் குழம்பு பூமிக்குக் கீழே மிகப்பெரிய ஏரியைப் போன்ற பரப்பளவுக்கு மௌனமாக தற்போது உறங்கிக்கொண்டு இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம். அப்படி வெடிக்கும் போது ஏராளமான புகையையும், தூசியையும் கக்கி, வாயு மண்டலத்தில் பரப்பிவிடும். உலகமெங்கும் இது சூழ்ந்துகொள்ளும். பிறகு, பல நூறு வருடங்களுக்கு சூரிய ஒளியே பூமியின் மீது படாது. ஆகவே, பயிர்கள் வளராது. மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான அளவு ஆக்ஸிஜன் சுற்றுச் சூழலில் இருக்காது. பட்டினியாலும், மூச்சுத் திணறலாலும் எல்லா உயிர்களும் இறந்துவிடும்


பொதுவாக, எரிமலை வெடிப்பின் போது உள்ளிருக்கும் நெருப்புக்குழம்பு வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தில் நிலம் சரிந்து, அதனுடன் நில அதிர்வு ஏற்படும். சூப்பர் எரிமலை வெடிக்க ஆரம்பித்தால், ஏற்படும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளே உடைந்து விடும் அளவுக்கு அதிபயங்கரமானதாக இருக்கும்


இதிலிருந்து தப்பிப் பிழைக்கக்கூடிய சாத்தியமுள்ள மனிதர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் சேர்த்து ஒரு லட்சத்துக்கு மேல் தாண்டாது


ஜப்பான் அருகில், பசிபிக் கடலுக்குக் கீழே இருக்கும் அத்தகைய ஒரு நெருப்புக்குழம்பு ஏரி ஏறத்தாழ தமிழ்நாட்டின் பரப்பளவு போல் இரு மடங்கு பெரியது. இன்னொன்று LDL அமெரிக்காவில் தென்னிந்தியர்கள் தற்போது அதிகமாக வாழும் கலிஃபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள பசிபிக் கடலின் அடியில் அமைந்துள்ளது


இந்த சூப்பர் எரிமலைகள் கடந்த 2 கோடி வருடங்களில் 150 முறை இவ்வாறு வெடித்துச் சிதறி இருக்கிறது என்று ஒரு கணக்கு சொல்கிறது. வெடிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே இவை லேசாக சில வாயுக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். அதை கண்காணித்து வந்தால் அது எப்போது வெடிக்கப்போகிறது என்பதை ஓரளவுக்கு


ஓம்..


தீர்மானிக்க முடியும், இந்த குப்பர் எரிமலைகள், இருக்கும் மற்ற பல அபாயங்களைவிட மிக மோசமான அபாயம் என்று கருதப்படுகிறது.


மகா சுனாமியும் அதைச் சார்ந்த நில நடுக்கமும் மனித இள அழிவுக்கு இன்னொரு மிகப் பெரிய சவாலாக அமையப்போகிறது. அதுபோல் ஏற்பட சாத்தியம் மிகக் குறைவு என்றாலும், ஏதாவது ஒரு பெரிய எரிகல் பூமியைத் தாக்கினால் இது நிகழக்கூடும். ஐந்து லடாம் வருடங்களுக்கு ஒருமுறை ஒரு கிலோமீட்டர் விட்டத்துக்கு மேல் உள்ள இத்தகைய விண்கற்கள் பூமியை தாக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் உலகின் பிற பாகங்களிலும், விண்வெளியிலும் அமைக்கப்பட்டுள்ள ஏராளமான டெலள்கோப்புகள் இந்தகைய அபாயகரமான விண்கற்களை வானில் துழாவித் தேடிக் கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம்கூட ஒரு கண் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது


வேற்று கிரகவாசிகள் நம்மிது போார்த்தொடுக்கலாம் மனிதர்களை தங்களுடைய உணவுக்காக உபயோகித்துக் கொள்ளலாம் பூமியின் மேலுள்ள ஏராளமான இயற்கை வளங்களை கொள்ளையடித்துச் செல்லலாம் அல்லது இத்தகைய ஒரு கிரகம் இருப்பதே தேவையற்றது என்று கருதி பூமியையே அழித்துவிடவும் நேரலாம்.


நமக்கு அருகில் இருக்கும் ஆண்ட்ரமெடா கேலக்ஸி நம்மை 110 km/sec என்ற வேகக்கணக்கில் நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது. அது இன்னும் 100 கோடி வருடங்களில் நம் பால்வீதி மண்டலத்துடன் மோதலாம். அப்படி மோதும் போது அதனுடைய பல கோடி சூரிய நட்சத்திரங்களும், நம்முடைய பால்வீதி மண்டலத்திலுள்ள சூரிய நட்சத்திரங்களும் அதனுடைய கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடும். நட்சத்திரங்களுக்கிடையே உள்ள தூரங்கள் பல கோடி மைல்கள் என்பதால் அப்போது நம் பூமி மீது இதுபோன்ற கிரகமோ, நட்சத்திரமோ மோதுவதற்கு அத்தனை சாத்தியமில்லை என்றாலும் உறுதியாக இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.


ஓம்..


ஒற்றைக் கண்கள் பார்க்கின்றன


ஆனால், இன்னும் 100 கோடி வருடங்களுக்குள்ளாகவே சூரியன் மிக அதிகமாக வெப்பத்தைக் கக்சு ஆரம்பிக்கும் அந்த நேரங்களில் பூமியிலுள்ள எல்லா கடல் நீரும் வற்றிப்போய் பூமியில் எந்த உயிரினமும் வாழ்வதற்கு சாத்தியமில்லாமல் ஆகிவிடும்


இதுகுறித்து நாம் ஒன்றும் செய்யமுடியாது என்றாலும் இந்த அபாயத்தை உணர்ந்து மனித இனம் தொடர்ந்து உயிர் வாழவேண்டும் என்றால், நாம் வேறு சிரகத்துக்கு இப்போதே சிறிய அளவில் இடம்பெயர ஆரம்பிக்க வேண்டியது மிகமிக அவசியம். அந்த சாத்தியம் குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன தற்போது நடந்து வரும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள் இச்சாத்தியம் குறித்ததுதான்!


இதைத்தவிர, நம் சூரிய மண்டலத்துக்கு அருகே ஏதாவது இன்னொரு மிகப்பெரிய நட்சத்திரம் பிரவேசித்தாலோ. அல்லது ஒரு சூப்பர் நோவா வெடித்தால் வெளிப்படுகின்ற கேம்மா, நியூட்ரினோ கதிர்களாலோ பூமியிலுள்ள


ஓம்..


உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போக பலவிதங்களில் சாத்தியமுண்டு


சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய ராட்ல இரகம் இப்பிடர் எல்லா கிரகங்கம் தனதன் பாதையில் சரியாக ஒரேஒழுங்கில் சஞ்சரித்து வருவதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், ஜூபிடர் போன்ற மிகப்பெரிய இரகம் எந்த இரகத்தின் சஞ்சாரப் பாதையையும் சற்றே மாற்றக்கூடிய வல்லமை படைத்தது.


அது சூரியனுக்கு அடுத்துள்ள குட்டிக் கிரகமான மெர்க்குரியின் சஞ்சாரப் பாதையை எந்த நேரத்திலும் பதம் பார்க்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு. அப்படிச் செய்தால் மெர்க்குரியின் சஞ்சாரப் பாதை மாறி அது ஒன்று சூரியனுக்குள் போய் விழலாம். அல்லது வீனஸ் கிரகத்துடன் மோதி அழியலாம். மூன்றாவது சாத்தியம், அது பூமியுடன் மோதலாம் அப்படி நடந்தால், பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். ஏனென்றால், ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கல்லே பூமியின் உயிரினத்தை அழித்துவிடும் என்பதால் மெர்குரியின் 5000 கிலோ மீட்டர் விட்டம் கண்டிப்பாக உலக அழிவுக்கு நிச்சயம் வழிவகுக்கும். மெர்குரியின் நான்காவது சாத்தியம், அது பாதை மாறி சூரிய மண்டலத்தை விட்டே எங்காவது நாடோடி கிரகமாகப் போய்விடும்


பால் விதி மண்டலத்தில் பல வாயுக் கூட்டங்கள் (Nebula) உள்ளன. சூரியக் குடும்பம் பால்வதி மண்டலத்தில் சுழன்று வருகின்றது. ஏதாவது, ஒரு காலகட்டத்தில் நம் சூரிய மண்டலம் ஒரு வாயு மண்டலத்துக்குள் நுழைய நேர்ந்தால், பூமியினுடைய வளிமண்டலம் (atmosphere) முழுவதுமாக அழிந்துபோய் பூமியில் உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக ஆகிவிடும் அபாயம் உண்டு


காட் பார்டிகிள் (God Particle) போன்ற நுண்துகள்களை கண் டறிய மனிதன் செய்து வரும் ஏராளமான பரிசோதனைகள், அவனுடைய அறிவுக் குறைவால் ஏதாவது ஒருவிதத்தில் தவறாகப்போய் பூமியினுடைய அழிவுக்கு அது ஒரு காரணமாக அமைந்துவிட சாத்தியமுள்ளது என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இச்சோதனைகள்


ஓம்..


பூமியை ஒரு கருத்துளையாக்கிவிடும் சாத்தியம் உண்டு என்கிறார்கள் ஆனாலும், இதை மனதில் கொண்டு அதை ஒரு கண் தொடர்ந்து கண்காணித்து கொண்டுதான் இருக்கிறது


உலகம் வெப்பமயமாதல் (Global warming) அளவுமீறி நடந்தால் தேவையான அளவுக்கு மழை பெய்யாமல் போகக்கூடும், பின், பயிர்கள் தேவையான அளவு விளையாமல் போய்விடும். பசி, பட்டினியால் மக்கள் சிறிது சிறிதாக மாண்டு போகும் அபாயம் உள்ளது. மிக அதிக அளவு மீன்கள் பிடிக்கப்படுவதால் கடலில் தேவையான அளவு மீன்கள் இல்லாது போகலாம். மக்கள் குடியேறவோ, பயிர் செய்யவோ, காட்டை அழித்து மரமில்லாமல் மாற்றிவிட்டால் மழையின் அளவும் கணிசமாகக் குறையக்கூடும். குடிநீர் பற்றாக்குறை வரலாம். சுற்றுச் சூழல் மாசுபடுவது அதிகமாகலாம்


பூமியினுடைய காந்தமண்டலம் 6 லட்சம் வருடங்களுக்கு

ஒருமுறை வடக்கு தெற்காகவும், தெற்கு வடக்காகவும்

மாறுகிறது. அதுபோல மாறும்போது உயிரினங்களுக்கு

உடனடி அபாயம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அது நாம்

வாழும் சூழலில் பல அசௌகரியங்களை கொண்டுவந்து சேர்த்துவிடும் என்ற பயம் இருக்கிறது 


சூரியனிடமிருந்து அடிக்கடி வெளிப்படும் சூரியப் புயல் போன்றவையும் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு எப்போதும் உத்திரவாதம் சொல்லமுடியாத அபாயத்தை அளித்துக்

கொண்டுதான் இருக்கிறது


 மனிதன் தொடர்ந்து உயிர்வாழ மேற்சொன்னவை குறித்த அப்பழுக்கில்லாத சோதனைகளும் அதன் முடிவுகளும் நமக்கு மிகமிக முக்கியம், தவறே நேரக்கூடாது. ஏதோ முயன்று பார்த்தோம் என்ற விதத்தில் செய்யமுடியாது. தவறாகப் போனால், மேலும் முயற்சி செய்ய நாம் அப்போது உயிரோடு இருக்கமாட்டோம்.


இவற்றையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் மிக கவனத்தோடு தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும் விண்வெளி சம்பந்தமான விஷயங்களை தற்போது நாஸா (NASA) செய்து வருகிறது. நாஸாவை அப்படிச் செய்யச்


ஓம்..


சொல்லி ஒரு கண் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.


வேறு புதுப்புது அபாயங்கள் வர எந்தெந்த விதத்தில் எல்லாம் சாத்தியம் இருக்கிறது என்பதை எதிர்பார்த்து மிக ஜாக்கிரதையாக அதன்மீது ஒரு கண் வைத்துக்கொண்டே அதை எப்படித் தடுக்கலாம் என்பதையும் மனிதன் ஆராய்ந்து கொண்டே இருக்கவேண்டியதும் மிக அவசியம்


பெரும்பான்மையான மனிதர்களுக்கு தங்களுடைய அன்றாட பிரச்னைகளை சமாளிக்கவே அதிகப்படியான நேரம் செலவாகும் போது இதுபோன்ற பொதுப்பிரச்னைகளில் கவனம் செலுத்துவது என்பது சாத்தியமில்லாமல்தான் போகிறது என்றாலும், யாரும் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை


ஏனென்றால், இவை எல்லாவற்றையும் ஒரு கண் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது


அது, ஒரு ஆல் சியிங் ஐ' (All Seeing Eye)


அதன் பெயர் இல்லுமினாட்டி (illuminaty}|

Comments

Popular posts from this blog