
🐚சென்னை மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதிகள் 🐚 🐚என் ஜீவன் பேசுது 🐚 என் இனிய அன்பு முகநூல் வாசக உள்ளங்களுக்கு... ஹிந்து சமுதாயத்தில் சித்தர்களின் வழிபாடு என்பது தொன்று தொட்டு வரும் மரபாக இருந்து வருகிறது .யோகத்தில் சிறந்து தியாகம். அந்த தியாகத்திலும் சிறந்தது தியானம் .அந்த தியானத்தின் மூலம் கிடைப்பது இறைசக்தி ,பிரபஞ்ச சக்தி, அண்டவெளி சக்தி, பரவெளிசக்தி, ஆகாய சக்தி, ஞான சக்தி எல்லாமே !இதனை அடைய வழி காட்டியவர்கள் தான் குருமார்கள் சித்தர்கள். பசுவின் உடல் முழுவதும் பால் பரப்பி இருப்பினும் அதன் மடியில் மூலமாகவே அப்பா பெறுவதைப் போல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த இறை சக்தியை தகுந்த குரு சித்தர்கள் மூலமாகத்தான் பெற முடியும் இத்தகைய மகான்கள் சித்தர்களின் ஜீவசமாதிகள் தாமாகவே வெளிப்படுத்துவது இவர்கள் ஜீவசமாதி அடைந்து அடங்கிய இடங்கள் மற்றும் பலன்கள் பூமியில் ஆலயங்களாகவும் விளங்குகின்றன இவர்களின் ஜீவசமாதியை தரிசித்து அங்கு தங்கி மனதை ஒருமுகப்படுத்தி மௌனத்தை மேற்கொள்ளுவது இவைக...