🍉🍉🍉   ஸ்ரீலட்சுமி காயத்ரி🍉🍎🍎







இந்த நாள் இனிய நாளாக அமைய பிரகதீஸ்வரர் இன் இனிய நல்வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம்

🍓🍓🍓மகாலட்சுமி அன்னைக்கு வாகனம் ஆந்தை 🍓

மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள். செல்வத்திற்கு அதிபதி, அனைத்துச் செல்வங்களையும் தருபவள் .ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜித்து வழிபடாதாா்யாருமில்லை .ஆதிசங்கரர் ,வேதாந்த தேசிகர், வித்யாரண்யா், தேவேந்திரன் முதலானோர் ஸ்ரீ லட்சுமியைப்பாடித் திருவருள் பெற்றனர்.

சித்திரை ,தை ,புரட்டாசி மாதங்களில் திருப்பாற்கடலில் மகாலட்சுமி மகாவிஷ்ணு பூஜிப்பதாக ஐதீகம் .பிரம்மதேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியிலும்,மனு தேவன் தை ,மாசி மகரசங்கராந்ததி யிலும் மற்றும் வருட முடிவிலும் பூசிப்பதாக ஐதீகம்.

மகாலட்சுமி அஷ்டலட்சுமிகளாக இருந்து அருள் புரிகிறாள். ஆதிக்கும்,ஆதியாக இருப்பவள் ஆதிலட்சுமி .இவள் சர்வ மங்கலாங்களைத் தருபவள். அனைத்து உயிரினங்களின் உயிர் வாழ ஜீவாதாரமான தானியங்கள் ,காய்கறிகள், கனிகள் மற்றும் அனைத்து பொருள்களையும் அருள்பவள் .தான்யலட்சுமி பசியைப் போக்குபவள்.

பக்தர்களுக்கு மனோதிடத்தையும் தைரியத்தையும் அருள்வது உடன் அவர்களின் வாழ்வில்,வளமாக ,பக்கபலமாக நின்று பாதுகாப்பவள். தைரியலட்சுமி பொன்,புகழ் இவற்றுடன் கூடிய பெருமை தரும் வாழ்க்கை தருவாள் கஜலட்சுமி ,மேலும் அனைத்து செல்வங்களையும் ஆதாரமான மழையை பொழியச் செய்து பூமியை வளத்தோடும் செழிப்போடும் ஆக்குபவள் கஜலட்சுமியே ஆவாள்.

மக்கட் செல்வமே சிறந்த செல்வமாகும் ஸ்ரீ சந்தான லட்சுமியை வணங்கினால் குழந்தைப்பேறு கிட்டும் ஸ்ரீ விஜயலட்சுமி சகல நன்மைகளையும,் எடுத்த காரியங்களை வெற்றியையும் காரிய சித்தியையும் தருவாள்.

ஸ்ரீ வித்யா லட்சுமியின் அருளால் நான்கு வேதங்களும,் சாஸ்திரங்களும், 64 கலைகளையும் செழித்தோங்கி வளர்ந்து வருகின்றன இவள் கல்வியிலும் கல்வியின் மூலம் செல்வத்தையும் தருபவள் ஸ்ரீ தனலட்சுமி எல்லாவித செல்வங்களையும் பொன்பொருள் ஆகியவற்றையும் தருபவள்.

இவ்வாறு அனைத்தையும் வழங்கும் ஸ்ரீ தேவி மகாலட்சுமி அவனது காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் செல்வவளம் பெருகும்..

 தினமும் மகாலட்சுமி பூஜை செய்து நமஸ்காரம் அர்ச்சனை முதலியவற்றை குதித்து கற்பூர தீபம் காட்டும் பொழுது ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும் இவ்வாறு தினமும் 108 தடவை சொல்ல வேண்டும்



பொருள்

மகாலட்சுமி அறிவோமாக விஷ்ணு பத்தினி மீது தியானம் செய்கின்றோம் லட்சுமியே அவள் நம்மை ஊட்டி செயலாற்ற செய்வாள்

 பலன்கள்

வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

அனைத்து செல்வங்களும் கிடைக்கும் .

தனம் ,தானியம் பெருகும் .

வறுமை நீங்கும் 

புத்திர பாக்கியம் உண்டாகும்.



Comments

Popular posts from this blog