🌷சித்தர் மௌனகுரு சாமி நம்பிமலை🌷🌷


                                            தோட்டியோடு








30 ஆண்டுகள் மௌனமாக இருந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராக விளங்கியவர் மௌனகுரு சாமிகள.் சாமிகள் நந்தன வருடம் 1892 ஆடி மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமை அவதரித்தார். மாதவன் நல்ல அம்மாள் தம்பதியருக்கு மகவாய் இன்று கேரளா பகுதியில் இருக்கும்( பழைய குமாரிப் பகுதி) மலையின் கீழ் எனும் சிற்றூரில் அவதரித்தார்கள். சுவாமிகளின் இளமைப்பெயர் பத்மநாபன் என்பதாகும்.




திருவனந்தபுரம் ஆங்கிலப் பள்ளியில் படித்த சாமிகள் திருவனந்தபுரம் அரசு தலைமை செயலகத்தில்( செகரட்டாியேட்) பணியில் சேர்ந்தனர். அரசு பணியில் சேர்ந்தாலும் சாமிகளின் உள்ளம் ஆன்மீக நாட்டம் கொண்டதாகவே விலகியது மேலதிகாரிகளிடம் கொண்ட கருத்து வேறுபாடால் தன் பதவியைத் துறந்து சாமிகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்


வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மலைப் பக்கம் சென்று தியானத்தில் இருப்பார்கள் .ஒரு நாள் தியானத்தில் ஆழ்ந்து பரம்பொருளோடு ஒன்றியிருந்தாா் . அவர் உடல் முழுவதும் தேனீக்கள் போன்றவைகள் அப்பி இருந்தன அவ்வழியாக சென்ற ஒருவர் பத்மநாபன் இறந்து விட்டார். அதனால் தான் அவர் உடல் முழுவதும் ஈக்கள் மொய்க்கின்றன என்று எண்ணி அவர் தாயிடம் சென்று சொன்னார.் தாயும் மற்றவர்களும் வந்து காணும் பொழுது சாமி அதே நிலையில் நிஷ்டைகூடியிருந்தார்கள்.தாய்" மகனே "என்று கதறி அழ உடனே சாமிகள் கண் திறந்து பார்க்கவும் ஈக்கள் எல்லாம் பறந்தோடின. தாயார் மகன் வீட்டிற்கு அழைத்து வந்து அவர் தன் மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என பயந்து திருவனந்தபுரம் அருகே வாழ்ந்த ஒரு பெரிய முஸ்லிம் மகானிடம் அழைத்து சென்றனர்.அவா் சுவாமிகளைப் பாா்த்த உடன் எழுந்து வந்து இருகரம் நீட்டி வருக! வருக !என்று கூறி அழைத்துச்சென்றனா்.தம் அருகேஅமரச் செய்தால.் தாய்க்கும் வந்து இருந்தவர்களுக்கும் அங்கு வந்து இருந்தவர்களுக்கும் ஒரே வியப்பு ! முஸ்லிம் பெரியவர் மிகப்பெரிய மகான் அவரை கண்டாலே எல்லாரும் எழுந்து நின்று வணங்குவார்கள.் அவரே தன் மகனைக் கண்டு வரவேற்று அமரச் செய்துள்ளார் என்று தாயார் எண்ணினார்கள் பின்னர் தாய் மகனிடம் தன் மகனுக்கு ஏதோ பித்துப் பிடித்தது போல் இருக்கிறது தாங்கள் தான் அவனை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார்கள் அதற்கு மகான் தங்கள் மகனுக்கு பித்தொன்றும் ஒன்றும் பிடிக்கவில்லை. அவர் ஒரு பெரிய சித்தர் .அவருக்கு த் தாங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் .அவரது போக்கிலே யேஅவர் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள் என்று கூறினார் சாமிகளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


வீட்டிற்கு வந்த சாமிகள் வீட்டை விட்டு வெளியேறி திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீ கண்டேஸ்வரம் ஆலயம் சென்று மூன்று நாள் தியானம் செய்தனர் .பின்னர் வீட்டிற்கு வந்த சாமிகள் தாயார் அளித்த உணவினை காகங்களுக்கு வழங்கிவிட்டு தாயாரின் கையால் ஒரு சீட்டை வாங்கிக் கொண்டு வெளியேறினார்கள் தாய் தந்தையுடன் வெளியேறிய சாமிகள் முக்குல மலை சென்று உன்ன உறக்கமின்றி தங்கியிருந்தார்கள் சாமிகள் மருத்துவம் செய்தனர் இப்படி இருக்கும் பொழுது மலையின் கீழ் கிராமத்திற்கு பமுகல் வேலுப்பிள்ளை எனும் யோகி வந்தார் .சாமிகளை சந்தித்தார் இருவரும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தனர்.



தென்திசை புறப்பட்ட சாமிகள் இருவரும் நாகர்கோவிலுக்கு மேற்கே உள்ள பரசோி இலங்கத்து வீடு வந்தனர். அங்கிருந்து பெருமாள் பிள்ளையிடம் யோகி வேலுப்பிள்ளை அவர்கள் இந்த மேலான சித்தருக்கு நாளும் உணவு ஊட்டி வா என்று கூறிவிட்டு சென்றனர் அன்று முதல் நம் சுவாமிகள் மௌன சாமிகளானாா்கள். இலங்கத்துப் பிள்ளையும் அவர் குடும்பத்தினரும் சாமிகளைப் பராமரித்தனர்


ஒருமுறை பரசோிஅருகே உள்ள கோபாலகிருஷ்ணன் எனும் பக்தரின் மருமகன் அரவம் தீண்டிவிட்டது.மருத்துவமனைக்குப்போகும் வழியிலேயே அவர் உயிர் போயிற்று .கோபாலகிருஷ்ணன் தன் மருமகனை சாமிகளின் காலடியில் கிடத்தி விட்டு கதறி அழுதார் சாமிகள் பாம்பு கடித்த இடத்தில் தன்னுடைய வலது கால் பெருவிரல் மூன்று முறை தடவ தூங்கி விழிப்பது போல் விடம் நீங்கி மாண்டவர் மீண்டெழுந்தார். பரசோிகுளத்தில் மீன் பிடிக்கும் பொழுது துள்ளிய மீன்கள் கரையில் செத்துக்கிடக்கும் சிறுவர்கள் முன்னிலையில் தன் கையிலிருக்கும் கோலால் மீன்களை குளத்துக்குள் தள்ளுவார் அவை உயிர்பெற்று நீதி செல்வதை சிறுவர்கள் பார்த்து மகிழ்வார் இப்படி சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் சாமிகள் தான் சமாதி ஆகும் வரை நீரைத் தன் காலால் மிதித்தது இல்லையாம் .மலம் ,ஜலம் கழிப்பது இல்லை. எப்போதும் உறங்குவதில்லை இரவிலும் விழித்திருப்பார்கள் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரும் உணவே ஏற்பார்கள் சாமிகள் 1945 ஆம் ஆண்டு தை மாதம் சதய நாளில் பரிபூர்ணம் அடைந்தார்கள்


சமாதிக் கோயில் அமைந்துள்ள இடம்


நம்பி மலை ஸ்ரீ மௌனகுரு சாமிகள்


நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் நாகர்கோயிலில் இருந்து 9 வது கிலோ மீட்டரில் தோழியோடு உள்ளது அதற்கு சான்று முன்னாள் தேதியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலை பிரியும் தோட்டாயோட்டில் நெடுஞ்சாலையிலிருந்து நம்பி மலை நோக்கி சென்றால் அடிவாரம் மௌன சுவாமிகள் சமாதி கோயில் உள்ளது மனம் உள்ளது .சிவலிங்கப் பிரதிஷ்டை தை சதயம் குருபூஜை.




அடுத்த வாரம் இதே வியாழக்கிழமை இன்னொரு சித்தர் ஜீவ சமாதியை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம் சர்வம் சிவார்ப்பணம்



Comments

Popular posts from this blog