🌷🌷புத்திர தோஷம் போக்கும் திருத்தலங்கள்


திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்🌷🌷🌷



கோவில் முகவரி


அருள்மிகுசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவெண்காடு

அஞ்சல் 60 91 14 நாகை மாவட்டம் கோவில் தொலைபேசி

📞04364 256424.☎



பாடல்

"பேயடையா பிாிவெய்தும்
பிள்ளையினோடுள்ள நினை
வாயினவே வரம் பெறுவ
ரையுற வேண்டாமென்றும்
வெண்காட்டு முக்குள நீா்
தோய்வினையா ரவா் தம்மைத்
தோயாவாற் தீவினையே "


மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமை அம்மை எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள புக்குல நீரில் எழுந்து வழிபடுவோரை பேய்கள் பிடிக்காது பேய் பிடித்திருந்தாலும் விலகும் இறைவனால் மக்கள் பேறு வாய்க்கும் மன விருப்பங்கள் நிறைவேறும் இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம் என்று குழந்தை வரம் தரும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் மிக பெருமை பற்றி தேவார பாடல் ஆசிரியர் திருஞான சம்பந்தர் கூறுகிறார்.

🌹🌹🌹புத்திர தோஷம்🌱🌱🌹


சிலருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இருக்காது மருத்துவரீதியாக அனைத்து பரிசோதனைகளையும் செய்தால் அனைத்தும் இயல்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த குறைபாடும் இருக்காது ஆனால் குழந்தை பாக்கியம் ஏற்படாது சிலர் கருத்தரிப்பார்கள் ஆனால் மூன்றாவது நாலாவது மாதங்களில் கரு கலைந்துவிடும் ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை இவ்வாறு நிகழும் இதற்கு தோஷம் என்று பெயர்


 🌸🌸🌸  பூஜை நேரம்🌸🌸🌸


🌷காலை ஆறு மணி 9 மணி மதியம் 12 மணி மாலை 5 மணி 6 மணி இரவு 8 மணி என ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.🌷


லக்னம் அல்லது ராசிக்கு ஐந்தாமிடத்தில் சாயா கிரகங்களான ராகு அல்லது கேது இருந்து அந்த இடத்திற்கு அதிபதி நீச்சம் அடைந்து இருந்தாள் தீய கிரகங்களால் பாதிக்கப்பட்டாலும் ஏற்படுவது புத்திர தோஷம்

புத்திர தோஷ நிவர்த்தி தலங்களாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் ஆரணிக்கு அருகில் உள்ள புத்திர காமேஸ்வரர் கோயில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் ஆகியவை உள்ளன



🍂🌲🍂திருவெண்காடு🍁🍁🍁


காசிக்கு சமமாக திகழும் ஆறு தளங்களில் திருவெண்காடு ஒன்று சக்தி பீடங்கள் 108 ஆகும் அவற்றில் இத்தளம் ஒன்று நவகிரகங்களில் புதன் வழிபாட்டு தலம் இத்தளத்தில் புதன் தனி சன்னதி உள்ளது சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களில் ஒன்றாகிய ஸ்ரீ அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம் இத்திருக்கோயிலில் சுவேதாரண்யேஸ்வரர் ஸ்ரீ நடராஜர் அகோர மூர்த்தி என மூன்று சிவ மூர்த்திகள் அமைந்துள்ளன இத்தலத்தில் அக்னி தீர்த்தம் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன



சிவபெருமான் உமாதேவிக்கு வேண்டுகோளுக்கு இணங்க திருவெண்காட்டில் எழுந்தருளி உள்ளார் ஆனந்தத்தால் அவருடைய மூன்று கண்களில் இருந்தும் மூன்று கண்ணீர் துளிகள் சிந்தின என்றும் அந்த மூன்று துளிகளும் அக்னி தீர்த்தம் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என மூன்று குளங்கள் மாறின என தல புராணம் கூறுகிறது விஷ்ணு சூரியன் சந்திரன் அக்னி இந்திரன் ஐராவதம் முதலியவர்கள் இத்தளத்தை வழிபட்டுள்ளனர்

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் முதலிய நால்வரும் பாடல் பெற்ற திருத்தலம் பதினொன்றாம் திருமுறை பாடிய பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற தலம்

பன்னிரு சூத்திரங்களை கொண்டு சிவஞானபோதம் எனும் சைவ சித்தாந்த முழு முதல் நூலை எழுதிய மெய்கண்டார் அவதரித்த தலம்





இத்திருத்தலத்தின் இறைவனாக சுவேனேஸ்வரர் இறைவியாக பிரம்ம வித்யாம்பிகை அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் காலத்திலும் அழியாமல் சிவபெருமான் சூலாயுதத்தால் தாங்கள் பெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது வியாச முனிவரின் ஸ்காந்த மஹா புராணம் அருணாச்சலம் புராணத்தில் இத் தலத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

             🌷🌷🌷🌷 தல வரலாறு🌷🌷🌷🌷


ஜலந்தராகசுரனுடைய மகன் மருத்துவாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான் அதன் பலனாக ஈசனிடம் இருந்து சூலாயுதத்தையும் வரமாகப் பெற்றான் இதையடுத்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் கொடுமைகள் பல செய்தான் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர் உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியைப் மருத்துவரிடம் அனுப்பினார்

மருத்துவாசுரன் சிவபெருமானிடமிருந்து வரமாகப் பெற்ற சூலாயுதத்தால் நந்தியை தாக்கி 9 இடங்களில் காயப்படுத்தினான்

இன்றளவும் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் இந்த காயங்களை காணலாம் நந்தி காயமடைந்ததை அறிந்த சிவபெருமான் சினம் கொண்டார் அவரது சினம் அவரை அகோர மூர்த்தியாகவும் உருவெடுக்க செய்தது

அகோர மூர்த்தி திரு அவதாரம் மாசி மாதம் தேய்பிறை பிரதமை பூர நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது காிய திருமேனியுடன் செவ்வாடை உடுத்தி இடது காலை முன் வைத்து வலதுகட்டைவிரலையும் அடுத்த விரலை ஊன்றி நடை கோலமாக காட்சியளிக்கிறார்

எட்டு கரங்களையும் அதில் ஏழு ஆயுதங்களும் தாங்கி கம்பீரபோா்க்கோலத்துடன் தோன்றுகின்றார் மேலும் கையில் மணி கேடயம்  கத்தி  வேதாளம் கபாலம் உடுக்கை கபாலம் திரிசூலம் ஆயுதங்களுடன் கோரைப்பற்களுடன் 14 பாம்புகளை தன்மேல் உடுத்தி மணி மாலையாக அணிந்து அஷ்ட 8 பைரவருடன் புன்னகை முகத்துடன் தனது ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் முகத்துடன் இருந்தார் அவர் அகோரமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

இவரது தோற்றத்தைப் பார்த்த உடனே மருத்துவரின் அகோரமூர்த்தியின் திருவடியில் சரணடைந்தான் தொடர்ந்து மருத்துவம் அகோரமூர்த்தி இடம் உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நவகிரக தோஷம் பித்ருதோஷம் எமபயம் நீக்கி வாழ்வில் அனைத்து செல்வங்களையும் வழங்க வேண்டும் என வேண்டினான் அவன் வேண்டிய வரத்தை அகோர மூர்த்தி அருளினார்

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற அகோரமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு அகோர பூஜையும் மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தில் அகோரமூர்த்திக்கு பூஜையும் நடைபெறுகிறது அதைப்போல் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன அதிலும் குறிப்பாக கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள் பூஜை நடைபெறுகின்றன


🌷🌷🌷பிள்ளை இடுக்கி அம்மன் மகிமை🌷🌷🌷

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது இத்திருத்தலத்தின் தரைகள் முழுவதும் சிவலிங்கங்களாக காட்சி அளித்தன எனவே இத்தலத்தில் காலை வைக்க தயங்கி எப்படி நான் இந்த தளத்திற்கு செல்வேன் என நினைத்து சிவனை அழைத்தார் அவரது குரலைக் கேட்ட சிவபெருமான் பார்வதி அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வரும்படி கூறினார் ஆணைக்கிணங்க பார்வதி தேவி திருஞானசம்பந்தரை தனது இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார் அதனால் பிள்ளை இடுக்கி அம்மன் என்ற திருநாமம் பெற்றார் இந்த அம்மன் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் அக்னி தீர்த்தம் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களில் நீராடி இந்த அம்மனுக்கு சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் அம்மன் குழந்தைப் பேற்றினை அருள் வராக புராணம் கூறுகிறது


🌷🌷🌷🌷 குழந்தைப் பேறு🌷🌷🌷🐞


விருதாச்சலம் அருகே உள்ள பெட்டகம் என்ற ஊரில் வாழ்ந்து வந்த அச்சுகளை அப்பர் என்பவருக்கு நீண்ட நாளாக குழந்தைப்பேறு இல்லை அவர் தமது குருவாகிய சிவாச்சாரியாரை அணுகித் தம் குறைகளை தெரிவித்தார் திருமுறைகளை பூசித்த கயிறு சாற்றி பார்த்தார்

அப்போது தேட பிரிவதும் பிள்ளையோடு என தொடங்கின திருவெண்காடு திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் வந்தது அதன்படி   அச்சதகளப்பாளாின்  தம் மனைவியுடன்  திருவெண்காட்டிற்கு வந்து முறையாக முக்குலம் மூழ்கி பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார் ஸ்வரர் அவரை வணங்கி  வந்தார

ஒருநாள் இரவு அச்சதகளப்பாளாின் கனவில் வெண்காட்டு தோன்றி உமக்கு இந்தப்பிறவியில் குழந்தைபேறு இல்லை எனினும் நாம் ஞானக்குழந்தையின் பாடல் நம்பிக்கை வைத்து நம்மை நம்மை வழிபட்டு வருவதால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று அருளினார்

அதன்படி பக்தருக்கு மனைவி கருவுற்று ஒரு ஆண் குழந்தை ஈன்றெடுத்தார் அக்குழந்தை ஸ்வேதனா பெருமாள் என்று பெயர் சூட்டினார் அவரை மெய்கண்டார் என்ற தீட்சா நாமம் பெற்று சிவஞானபோதம் நூல் ஏற்றி சித்தாந்த ஞான பரம்பரைக்கு முதல் தலைவனாக விளங்கிய மெய்கண்ட தேவ நாயனார் ஆவார்


🌷🌷🌷 பரிகாரமுறை🌷🌷🌷


கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தத்திற்கு வரவேண்டும் ஆண்கள் வேஷ்டியும் பெண்கள் புடவையும் கட்டி கொண்டு அக்னி தீர்த்தக் கரையில் உள்ள மெய்கண்டார் சிலையை வணங்கியபடி குழந்தை வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் இறைவனை நினைத்து குளத்தில் கிழக்கு முகமாக பார்த்து மூழ்க வேண்டும் அப்போது ஒரு மடக்கு தண்ணீரை குடிக்க வேண்டும் குளிக்கும் பெண்கள் முகத்தில் மஞ்சளை தடவி கொள்ள வேண்டும் பின்னர் அதில் எலுமிச்சம் பழம் வாழைப்பழம் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும் பின்னர் சூரிய தீர்த்தத்தில் நீராட வேண்டும் தொடர்ந்து சந்திர தீர்த்தத்திற்கு சுற்றி செல்லவேண்டும் குறுக்காக செல்லக்கூடாது குறிப்பு முடிந்தவுடன் ஈரமான வேட்டி புடவை அங்கேயே விடக்கூடாது அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் புது ஆடைகளை அணிந்துகொண்டு பெரியவர் விநாயகர் அகோரமூர்த்தி பிரம்ம வித்யாம்பிகை பிள்ளை இடுக்கி அம்மன் புதன் சன்னதியில் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் பிள்ளை இடுக்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்யலாம்


நடை திறக்கும் நேரம்


காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை


🌷🌷🌷🌷 அன்பு கூகுள் நண்பர்களே முகநூல் நண்பர்களே ஷேர் சாட் நண்பர்களே அனைவருக்கும் நீங்கள் பார்த்தது மட்டும் இல்லாமல் பிறருக்கும் பகிர்ந்து மகிழுங்கள் சர்வம் சிவார்ப்பணம் எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உனக்கே🌷🌷🌷



Comments

Popular posts from this blog