🌷🌷🌷அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்🌷🌷🌷


🐚🐚🐚இந்த நாள் இனிய நாளாக அமைய பிரகதீஸ்வரர் என் இனிய நல்வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம்🐚🐚🐌










பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.


துர்க்கை காயத்ரி மந்திரம்

ஓம் காத்யாயனய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தன்னோ துர்கிப்ரசோதயாத்


பொது பொருள்:


காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.


பிரகதீஸ்வரர்


இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவது சிறந்தது. தினமும் கூற முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூறலாம். ராகு காலம் துர்க்கையை வழிபட உகந்த நேரம் என்பதால் இந்த மந்திரத்தை ராகு காலத்திலும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.



Comments

Popular posts from this blog