ஹயக்கிரீவர் அவதாரம் ...

ஹயக்கிரீவர் அவதாரம் ...



ஹயக்கிரீவர் அவதாரம்



இவர் எப்படி தோன்றினார். அதன்
காரணம் என்ன? பின்னணி என்ன அவற்றை இப்போது தெரிந்து கொள்வோம்

பிரளயகாலத்தில் எங்கும் தண்ணீர்,
அண்ட சராசரங்கள் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்தன. ஆலிலைமீது எம் கொண்டார். தன் நாபிக்கமலத்தில் இருந்துபெருமான் ஸ்ரீமன் நாராயணன் குழந்தையாகப் பள்ளி கொண்டிருந்தார். நீண்டகாலத்திற்குப் பிறகு மீண்டும் பிரபஞ்சத்தைப் படைக்க அவர் திருவுள்ளம் கொண்டார் தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார் அவரது படைப்பு தொழிலுக்கு உதவும் வகையில் வேதங்களை அருளினார் பிரம்மன் வேதங்களின் துணை கொண்டு உலகத்தையும் உயிர்களையும் படைத்தான் இவ்வாறு சிருஷ்டி தொழிலில் நடைபெற்று வந்தது.


பெருமானின் நாபிக்கமலத்தில் இரண்டு நீர்த்துளிகள் இரண்டு உருண்டு ஒரு காலத்தில் மது, பகடபன் என்ற இரண்டு அசுரர்களாக உருமாறியர் அவர்களுக்கு பிரமமனை விடத் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது இதை அனைவரும் ஒப்புக கொன்ன வேண்டுமானால் எதையாவது செய்து பிரம்மன் தொழில் செய்யாமல் முடக்க வேண்டும் என்று தீர்மானித்தனா 

நல்லது வேண்டுமானால் செய்வது கடினம். ஆனால் கெட்டது அப்படி அல்லவே. அதை எளிதாகச் செய்து விடலாம் அல்லவா? அசுரர்கள் இருவரும் பிரம்மாண்ட மான குதிரை உருவம் எடுத்தனர் அவர்களின் குறி பிரம்மன் அல்ல. அவர் உலகைப் படைப்பதற்கு ஆதாரமாகஇருக்கின்ற வேதங்கள் மட்டுமே.

 இருவரும் புறப்பட்டு சத்தியலோகம் சென்றனர் பிரம்மனிடம் இருந்து வேதங்களைப் பறித்து சென்றன.

எழுத்தாளனுக்கு எழுதுகோலும், சிற்பம் செதுக்கு பவனுக்கு உளியும் பறிபோனால் பிழைப்பு சிரிப்பாகிவிடுமே வேதங்களைப் பறிகொடுத்த பிரம்மனும் அந்த நிலையில் தான் இருந்தார் இனிமேல் பிரபஞ்சத்தில் சிருஷ்டித் தொழிலை செய்வது எப்படி? கையைப் பிசைந்து கொண்டு அவர் தேவர்களிடம் தெரிவித்தார் அவர்கள் மட்டும் என்ன செய்து விடுவார்கள் எல்லோருமாகச் சேர்ந்து எம்பெருமானிடம் முறையிட்டார்கள் ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! படைப்புத்தொழிலுக்கு

ஆதாரமாக இருக்கின்ற வேதங்களை அசுரர்கள் கவர்ந்து சென்றுவிட்டனர். நீங்கள் தான் அவைகளை மீட்டுக் கொடுத்து மீண்டும் படைப்புத் தொழில் நடைபெற அருள் செய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

ஓம்..




பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற பலவிதமான அவதாரங்கள் எடுத்த மாதவன் இப்போது வேதங்களைமீட்டெடுக்க வித்தியாசமாக குறிரை வடி வம் கொண்டான் அகராகள் குதிரை வடிவத்தில் வேதங்களைத் திருடி சென்றதால் அதே வாடி வத்த தானும் எடுத்து வேதங்களைமீட்ட முடிவு செய்தார்

யெவே குதிரை முகம், மனித உடல், கோடி சூர்ப்பு பிரகாசம், கொண்டவராக சங்கு சக்கரத்தோடு அசுரா களைத் தேடிச் சென்றார் சீ ஹயக்கிரீவ மூாத்திக்கு சந்திர குரியாகவே கண்கள், கங்கையும், சரஸ்வதியமே இமைகள் பகலான இந்தத் திவ்ய சொருபத்தோடு சென்று மதுகைடபர் பனை அழித்து வேதங்களை மீட்டார் இதுவே ஸ்ரீ மயக்கிரீவ அவதாரம் தோன்றிய கலத இவரது அவதாரம் குறித்த பல்வேறு கதைகள் புராணங்களில், ஆகமங்களில் சொல்லப்பட்டுள்பான அவற்றைப் பின்னால் காண்போம்

அசுரர்களின் தொடர்பு ஏற்பட்டதால் தங்கள் புளிதம் மாக அடைந்தது என்று வேதங்கள் வருத்தம் கொண்டன எனவே பரிமுகம் கொண்ட பெருமான் தனது மூச்சு காற்றியால் அவைகளை சுத்தப்படுத்தினார்

அசுரர்களோடு உக்கிரமாக போரில் பாடுபட்ட ஹயக்கிரீவ மூர்த்தி கோபம் தணியாமல் ஆவேசத்தோடு இருப்பதை அறிந்த பிரம்மன், மகாலட்சுமியை அழைத்து வந்து அவரெதிரே நிறுத்தினார். ஆவோம் அடங்கிய பெருமான் தனது மனதுக்குப் பிடித்த தேவியை மடியில் அமரவைத்துக் கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரவராக தரிசனம் தந்தார்

குதிரை வடிவம் கொண்ட மகாலட்சுமி

ஹய என்ற சொல்லுக்கு குதிரை என்பது பொருள் குதிரை முகம் கொண்டவள் அச்வாருடை. இவர் அம்பாளின் பாசக்கயிற்றில் இருந்து தோன்றியவள் கோடிக்கணக்கான குதிரைகள் கொண்ட படையை அம்பாளுக்காக நடத்திச்சென்று போர் செய்யும் வீராங்கனைஇவள்.

ஓம்..






சிவன் கோயிலுக்கு என்று சில வாகனங்கள், பெருமாள் கோயிலுக்கு என்று சில வாகனங்கள் இருக்கிறது. சிவனுக்கு நந்தி என்றால் பெருமாளுக்கு கருடன் இப்படி சில வாகனங்கள் மாறுபட்டாலும் இரண்டு கோயிலுக்கும் பொதுவான வாகனம் குதிரை குதிரை முகம் கொண்டஹயக்கிரீவா அகஸ்தியருக்குத் தேவி மகாத்மியத்தை உபதேசித்து இருக்கிறார்

அஸ்வினி தேவர்கள் குதிரை முகம் கொண்டவர்கள் சூரியனுடைய ய வெப்பம் தாங்காமல் அவனுடைய மனைவி உ அவனுடன் சேர்ந்து வாழ முடியாமல் குதிரையின் வடிவம் எடுத்து காட்டுக்குள் சென்று வாழ்த்திருந்தாள் காளிந்தி நதியும், தமஸா நதியும் சங்கமமாகும் இடம் அது அங்கே மகாலட சுமியும் பெண்குதிரையாக வந்து சேர்ந்தாள்

மகாலட சுமி குதிரை வடிவம் ற்றது ஏன்? அது ஒரு சுவையான கதை 

சுவையான கதை அல்ல, தவறாகப் புரிந்து கொண்ட தால் ஏற்பட்ட சாபக்கதை. பாற்கடலில் தோன்றியவள் மகாலட்சுமி. அவளுடன் தோன்றியது உச்சைசரிவஸ் என்ற வெள்ளைக்குதிரை அது மிகவும் அழகானது. வலிமை யானது. அதன் உடம்பில் ஒரு துளி கூட கறுப்பு வர்ணம் கிடையாது. பாற்கடலில் இருந்து தோன்றிய அது பாலைப் போல வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் காண்பவர்களின் கண்களையும், கருத்தையும் கவரும் விதத்தில் இருந்தது

அந்தக் குதிரை மீது சூரியனின் மகள் ரேவேந்தன் ஏறிக் கொண்டு சொர்க்கத்துக்குப் போவதை ஒரு நாள் மகாலட்சுமி பார்த்தாள் தன்னுடன் பாற்கடலில் இருந்து தோன்றிய உச்சைசிரவசின் அழகு அவளைக் கண்கொட்டாமல் பார்க்க வைத்தது. சகோதரபாசத்தில் கட்டுப்பட்டு அழகை ரசித்துக் கொண்டிருந்த அவளிடம் அந்த குதிரை மீது போவது யார் என்று ஒரு கேள்வியைக் கேட்டார் நாராயணன்

 மகாலட்சுமிக்கு நேரம் சரியில்லை. ஆகவே அவள்கணவன் சொன்னதை காதில் வாங்கவே இல்லைகுதிரையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். தனக்குப்
பதில் சொய்யாமல் மனைவி அலட்சியப்படுத்துவதாகக் கோபம் கொண்டார் நாராயணன் 


அந்தக் குதிரை தான் அங்கே வந்தது. மகாலட்சுமிக்கு வடிவம் எடுக் க சாபம் கொடு த்த பிறகு திரை மகாவிஷ்ணுவுக்கு பாற்கடலில் இருப்புக் கொள்ளவில்லை ,
அவரும் ஒரு -ஆண்குதிரையாக உருவம் கொண்டு அந்தஇடத்திற்கு வந்து அவளைச் சமாதானப்படுத்தி உறவுகொண்டார், இதனால் பிறந்த பிள்ளைதான் ஏகவீரன்.


 யயாதியின் மகள் துரோகம் என்பவள் குழந்தை வரம் வேண்டி தவம் செய்து இந்த ஏசுவீரனைப் பெற்றுக கொண்டான் 

உஷை பெண் குதிரையாக இருந்தபோது சூரியனும் ஆண்குதிரையாக வந்து அவளுடன் கூடினான் களுக்குப் பிறந்தயர் கள் தான் அஸ்வினி தேவர்கள், இவர்கள் குதிரை முகம் பெற்றது இப்படித்தான். மகாவிஷ்ணு குதிரையாக மாறியதாலும், மது கைடபர்களை வதம் செய்ய குதிரை வடிவம் எடுத்ததாலும் பெருமாள் கோயில்களிலும்
குதிரை வாகனத்திற்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது 

மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் நரிகளைப் பரிசளாக்கினார், பிறகு பரிகளை நரிகளாக்கி திருவிளையாடல் புரிந்தார். அப்போது நந்திதேவரே அவருக்கு குதிரையாக வந்தார். இதனால் தான் சிவன் கோயில்களில் குதிரை வாகனம் வைக்கப்பட்டுள்ளது

குதிரைக்கு இத்தனை பெருமைகள் உண்டு கோடிக்கணக்கான வலிமை மிகுந்த குதிரை களை அஸ்வாரூடா வழி நடத்துகிறாள். அவளே அம்பாளுக்கு பாத பூசை செய்கிறாள் என்றால் அம்பாளின் பெருமையை வார்த்தைகளில் விவரித்து விட முடியுமா?


ஓம்..

அஸ்வமேத யாகத்தில் அம்பா ருக்குத் தனியானஆராதனைகள் உண்டு. உலகையெல்லாம் ஒரு குடைக் கீழ் கொண்டு வர விரும்பும் சக்கரவர்த்தி அஸ்வமேத யாகம் செய்து ஒரு குதிரையை எல்லா நாட்டுக்கும் அனுப்பி வைப்பார். அதைப் பிடித்துக் கட்டுபவர்கள் போகுக்குத் தயார் என்று அர்த்தம். ஸ்ரீ ராமர் அனுப்பிய அஸ்வமேதக் குதிரையை லவ குசர்கள் பிடித்து வைத்து விட்டனர். இது போரில் தொடங்காமல் நன்மையில் முடிந்தது. இதனால் தான் ராமருக்கு தனது பிள்ளைகளை அடையாளம் காண முடிந்தது

இப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட அஸ்வத்தின் முகத்தோடு ஹரி எடுத்த அவதாரம் தான் ஹயக்கிரியஅவதாரம்

🙏#அஸ்வமேதயாககுதிரை🙏

 அஸ்வமேத யாகம் அந்தக் காலத்து மன்னர்களினால் ராஜசூய யாகம் போலவே மிகவும் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டது. இந்த யாகத்தில் அரசன் தனது பட்டத்து குதிரையை அலங்காரம் செய்து, தனது இலச்சினை பொருந்திய வெற்றிக் கொடியுடன் எல்லா நாடுகளையும்
சுற்றிவரும்படி அனுப்பி வைப்பான்.

 ஒவ்வொரு நாட்டு மன்னனும் அந்தக் குதிரை வரவேற்று உபசரித்தால் தன்னைச் சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொள்வதாக அர்த்தம், யாராவது எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்கள் அந்தக் குதிரையைப் பிடித்து கட்டி வைத்து விடுவார்கள். உடனே குதிரையை அனுப்பிய மன்னன் அதைக் கட்டிப்போட்ட மன்னனுடன் போரிட்டு ஜெயிக்க வேண்டும். இப்படியாகப் பல நாடுகளுக்குச் சென்று, பல மன்னர்களின் ஒத்துழைப்பும் இருக்கும் மன்னன் தான் அஸ்வமேத யாகம் செய்யத் தகுதி படைத்தவன் ஆகிறான்

இந்த யாகத்தின் முடிவில் மன்னன் அனுப்பிய பட்டத்துக் குதிரை பலி கொடுக்கப்படும். அஸ்வமேதக் குதிரை என்பது பலநாடுகளுக்கும் சென்று வரும் போது வெறும் போர் பிரகடனம் குதிரையாக இருக்கலாம். ஆனால்

ஓம்..

ஆது யாகசாலைக்குள் அழைத்துவரப்பட்டவுடன் மிகவும் புனிதமானதாக ஆகிவிடும். அதனைப் புனிதப்படுத்தும் மந்திரங்கள் வேதியர்கள் ச்சரிப்பார்கள்

அந்த மந்திரங்களில் அதன் சிறப்புக்கள் தெரிவிக்கப் படுகின்றன, இருஷ்ணஜாவேத தைத்ரிய சம்ஹிதை குதிரையின் புனிதததை பல ஸ்லோகங்கள் தெரிவிக்கிறது அதன் நான்கு கால்களும் நான்கு வேதங்களையும், நான்கு திசைகளையும் குறிக்கும் அதன் தலை கிழக்குத் திசையை விடியற்காலையைக் குறிக் கிறது சூரியளையும், மூச்சுக்காற்று அதன் கன்கன் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவையும், குறிக்கும். யாக குதிரையின் பிறப்பு பாற்கடல் சொல்லப் படுகிறது. பாற்கடலில் பிறந்த உச்சைஸ்சிரவஸ் என்ற தெய்வீகக் குதிரைக்கு இணையாக அதன் பெருமையும், புனிதமும் மந்திர ஜெபங்களின் மூலமாக உயர்த்தப்படுவதாக அந்த நூல் தெரிவிக்கிறது

 யாகத்தின் பலனாக விஸ்வரூப தரிசனம்

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில்இருந்து பாண்டவர் களின் தூதனாகச் சென்ற போது அவரைக் கொல்ல சதி செய்தான் துரியோதனன். அப்போது அவர் தன்னைக் கொல்ல வந்த மல்லாகளைக் கொன்றதோடு பிரம்மாண்டமாக வளர்ந்து விஸ்வரூபம் காட்டி தன் பெருமையை நிரூபித்தார் 

பாரத யுத்தம் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு வைசம்பாயனர் என்ற ரிஷி இந்தத் தகவல்களை ஜெனமேஜெயன் என்ற மன்னனுக்குச் சொல்லி வந்தார். அன்று
கண்ணன் எடுத்த விஸ்வரூபத்தை நான் இன்று தரிசிக்கஆசைப்படுகிறேன் மகிரிஷி. அதற்கு மார்க்கம் இருந்தால்சொல்லுங்கள் என்று வேண்டினான் அரசன்


சத்ய விரத க்ஷேத்திரமான காஞ்சிக்குச் சென்று அஸ்வமேதயாகம் செய்தால் யாகத்தின் முடிவில் நீ விரும்பிய படியே ஸ்ரீ கிருஷ்ணன் தனது விஸ்வரூபத்தைக் காட்டி அருள் செய்வார் என்று உபாயம் தெரிவித்தார் அவர்

ஓம்..




மன்னனும் காஞ்சிபுரம் சென்று மிகப் பெரிய அளவில் அஸ்வமேத யாகம் செய்தான் யாகத்தின் திரண்ட பயனாக விஸ்வருபத்தோடு யாக குண்டத்தின் நடுவே தோன்றி தரிசனம் தந்தார் மன்னனும், ஹாரித முனிவரும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தனர்

ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் அளித்த பாண்டவ தூதப் பெருமாள் கோயில் இன்றும் காஞ்சிபுரத்தில் உள்ளது இது 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்று. மூலவர் பாண்டவ தூதர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார், மிகப் பிரம்மாண்டமான திருமேனி அவருடையது இந்தியாவிலேயே இத்தனை பெரிய பிரம்மாண்டமான திருமேனியுடன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி தருவது இந்தக் கோயிலில் மட்டுமே

ஜெயமேஜெயன் நடத்திய அஸ்வமேத யாகத்தின் பயனாக அவனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது. பாண்டவர்களும் ஒரு அஸ்வமேத யாகம் செய்தனர். அதன் பலனாக அவர்களுக்கு ஒரு கீரிப் பிள்ளையின் மூலமாக மிக உயர்ந்த உபதேசம் கிடைத்தது அதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்



Comments

Popular posts from this blog