காமேஸ்வரிஸ்லோகம்

 🙏காமேஸ்வரிஸ்லோகம்





(குடும்ப ஒற்றுமை)


தேவீம் த்யாயேத் ஜகத்தாத்ரீம் ஜபாகுஸ்மஸந்நிபாம் பாலபாநுப்ரதீகாஸாம் ஸதகும்பஸமப்ரபாம் ரக்தவஸ்த்ர பரீதாநாம் ஸம்பத்வித்யா வஸங்கரீம் நமாமி வரதாம் தேவீம் காமேஸிமபயப்ரதாம்


#பொதுப்பொருள்: 


'காம' எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவன் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேச காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்க வல்லவை இவ்வளவு மகிமை பொருந்திய தாயே தங்களை வணங்குகிறேன். கீழ்க்கண்ட திதிகளில் இத்துதியை பாராயணம் செய்தால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்


#வழிபடவேண்டியதிதிகள்: 


சுக்ல பக்ஷ பிரதமை, 

அமாவாசை 


#வழிபடுபலன்கள்: 


குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.


ஓம்..

Comments

Popular posts from this blog