ஓம் நம : ஶிவாய

" ஓம் நம : ஶிவாய " என்கிற இந்த ஆறெழுத்து மந்திரத்தில் நான்கு


 வேதங்களும், அதன் ஆறு அங்கங்களும், மற்றும் பரந்து விாிந்து கிடக்கும்


அனைத்து சாஸ்திரங்களும் பொதிந்துள்ளன, ( ஆலம் விதையில்


 அத்துணை  பொியதான் ஆலமரமே அடங்கியுள்ளதுபோல ) ஆகவே,


 இதற்கு  இணையாக வேறு எந்த மந்திரமும் இல்லை. ஏழு கோடி


மகாமந்திரங்கள், மற்றுமுள்ள அநேக உபமந்திரங்கள் ஆகிய


 அனைத்திலிருந்தும்  இந்த ஆறெழுத்து மந்திரம், நூலும் அதில்


கோக்கப்பட்ட மணிகளும்  எவ்வாறு வேறு வேறோ, அவ்வாறே வேறு


வேறுதான், சிவஞானபோதம் முதலிய சிவஞான நூல்களும், அனைத்து


வித்யைகளும் இந்தத் திருவைந்தெழுத்தின் விளக்கங்களே . இந்த


" ஓம் நம : ஶிவாய " என்கிற  ஒரே ஒரு மந்திரம் நம் இதயத்தில்  குடி


கொண்டால் போதும், மற்ற கோடி  கோடி மந்திரங்களோ, விாிவான


சாஸ்திரங்களோ தேவையில்லை. எவன் " நம : ஶிவாய " என்கிற


திருவைந்தெழுத்தை உறுதியோடு ஜபித்துத் தனதாக்கிக்  கொண்டானோ,


அவன் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவன், புண்ணிய கா்மங்கள்


அனைத்தும் செய்து முடித்தவன். "நம: " என்கிற இரண்டெழுத்துக்களோடு


" ஶிவாய " என்கிற"மூன்றெழுத்துக்களும் எவனது நாவின்  நுனியில்


 இருக்குமோ, அவனது பிறவியே நற்பிறவி, பயனுடைய பிறவி, திருவைந்


தெழுத்தை ஓதுகிறவன் பண்டிதனோ, பாமரனான அறிவிலியோ, 


தாழ்ந்தவனோ, யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவனே


பாவக்கூண்டிலிருந்து  விடுதலை பெறுபவன் ஆவான்.







 🐚 🐚 🐚 ஓம்   நம  ஶிவாய  🔔 🔔 🔔

Comments

Popular posts from this blog