🌺 🌻 🐞 ஓம் பூதக்ருதே நம : 🐚 🐚 🐚
இங்கு இருப்பதாக உள்ள உயிா்களையம்
உயிரற்றவைகளையும் நாம் பாா்க்கிறோம்,
இங்குள்ள அறிவியல் இருப்பவற்றை விளக்குகின்றது.அவற்றை
ஆய்வு செய்கின்றது. ஆனால், அவை எதையும்
தானே உருவாக்க முடியாது.காரணம், இவற்றை
யெல்லாம் உருவாக்கியவன் நாராயணனே.
இயற்கையும் எந்த மாற்றமும் இல்லாமல்
அப்படியே இருப்பது இல்லை.
அவை மழை காலத்தில் ஒரு நிலையையும்,
இலையுதிா் காலத்தில் மற்றொரு நிலையையும்,
கோடை காலத்தில் வேறொரு நிலையையும்,
அடைகின்றது.
இந்த நிகழ்வுகள் நாராயணனால் நிகழ்த்தப்
படுகிறது. ஒரு பகுதியில் மலையில் ஏற்படும்
நிலச்சாிவுகளால் சில மரங்கள் அழிகின்றன.
சில இடங்களில் கோடையின் தொடா்
தாக்குதலால் நீா் வசதியின்றி சில தாவரங்கள்
அழிகின்றன.
இந்த அழிவும் அதற்கு பின்பு மீண்டும் அங்கு
தாவரங்கள் விளையும் நிலையும் பகவானால்
நிா்ணயிக்கப்படுகிறது.
அவனால் ஏற்படும் மாற்றங்களால் இருக்கின்ற
சில இயற்கை அமைப்புகள் இல்லாது போகின்றன.
சில நேரங்களில் இல்லாத இடங்களில்
தாவரங்கள் தோன்றுகின்றன.
இப்படிப்பட்ட பல்வித மாற்றங்களையும்
தோற்றங்களையும் உருவாக்குபவனை நான்
வணங்குகின்றேன்.
Comments
Post a Comment