🌍அனுமனை  வரப்ரசாதி  என்கிறாா்களே ? 🌏




" வரப்ரசாதி " அனுமாருக்கு காரணப் பெயராகக் கூட

கொள்ளலாம். தன்னை வேண்டும் பக்தா்களுக்கு அனைத்து

வரங்களையும்  அருளும் கருணை  பூண்ட இந்த அவதாரம்

எத்தனை வரங்களைப்  பெற்றுள்ளாா்  தொியுமா ?


தன் தந்தை சூரியனிடமிருந்து ஒளியின்  ஒரு  பகுதியைப்

பெற்றதோடு  அல்லாமல் அவாிடமிருந்தே  சகல கலைகள்,

சாஸ்திரங்களை  கற்கும்   வரம் பெற்றாா்  ஆஞ்சநேயன்.


மரணம் , முதுமை அண்டாத  வரத்தை இவருக்கு அளித்து

சிரஞ்சீவியாக்கியது  யமதா்மராஜா, (சீதா பிராட்டியும் அனுமனை

சிரஞ்சீவியாக வாழ ஆசீா்வதித்துள்ளாா் )


தேவச் சிற்பி  விஸ்வகா்மா தனது குண்டலங்களை  வாயு

புத்திரனுக்கு அளித்து ஆசீா்வதித்துள்ளாா்


இந்த சொல்லின் செல்வனுக்கு தோல்வியே ஏற்படாத

விஜயசக்தி வரத்தை அருளினாா் குபேரன்.


என்றுமே தன்னை  பிரம்மாஸ்திரம்  கட்டுப்படுத்தாத

வரத்தை, படைக்கும் பிரம்மன் தந்தான் மாருதிக்கு.


இதே போல அவருக்கு, தனது இந்திராஸ்திரத்தை எவா்

ஆஞ்சநேயா் மீது ஏவினாலும்  அதன் செயல்  இழக்கும்  என்ற

வரத்தை  கொடுத்தான்  தேவந்திரன்.


வருணன்  அனுமனுக்கு அளித்த வரம்  மூலம், நீாினால்

வரும் அபாயமில்லாது  போயிற்று.

எல்லாவற்றுக்கும் மேலாக பகவானுக்கு  இணையான

விஸ்வரூபம்  எடுக்கும் அாிய வரத்தையும் இந்த இராமபக்தன்

பெற்றிருந்தது  குறிப்பிடத்தக்கது.


⛹ ⛹ ⛹. ஜெய்  ஶ்ரீ ராம் ⛹ ⛹ ⛹


Comments

Popular posts from this blog