🌹🌻பிணிகளைக் குணமாக்கும் வைத்தீஸ்வரன்🐚🐚
உலகத்தில் தோன்றிய உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உடலின் அமைப்பை உடலியக்கம் அமைந்துள்ளன
மனிதகுலத்தில் வயது வாழ்விடம் உணவு பழக்க வழக்கத்திற்கு ஏற்றபடி உடல்அமைப்பும் ,இயக்கமும் இருந்தால் , பல காரணங்களாலும் அவைகளின் மாற்றம் ஏற்படும்போது அதனை நோய் என்று சொல்கிறோம். உடல் இலகுவாக இயங்கவும் மனிதனின்" உள்ளம் " இறுக்கமின்றி இருக்கவும் அந்த நோய் நீங்க வேண்டும்
நோய் நீங்க பல வழிகள் இருப்பினும் ஆதிகாலம் தொட்டு இறைவன் என்ற மூலப்பரம்பொருளிடம் இருந்து சித்தர்களும் முனிவர்களும் தாங்கள் உணர்ந்து அறிந்தவைகளைக்கொண்டு, ஏடுகளில் எழுதி வைத்து, மருத்துவம் செய்து, மனித சமுதாயத்துக்கு மகத்தான தொண்டு ஆற்றி உள்ளனர்.
நோய் தீர்க்கும் அற்புத சித்தர்களும் முனிவர்களுக்கும் கற்றுக்கொடுத்த இறைவனே வைத்தி யா்களின் நாதனாக வைத்தீஸ்வரனாக இருந்து பூலோக மக்களுக்கு நன்மை அளித்து வருகிறாா்.
ஆம் ! சிவபெருமான் வைத்தியநாதராக வீற்றிருந்து வினை தீர்க்கும் தலம்தான் ,"புள்இருக்குவேளூா் " எனும் வைத்தீஸ்வரன் கோயில் இறைவன் 4448 வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு அருள்பாலிக்கும் தலம் இதுவாகும் இறைவனும் அம்பாள் தையல்நாயகி என்ற திருநாமத்துடன் கையில் தைல பாத்திரமும் வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி காட்சியளிக்கிறாா்.
நோய் தீர்க்கும் தலங்கள் என்றாலே அதில் முதன்மையாகவும் ,முழுமையானதாகவும் வரக்கூடிய இந்த வைத்தீஸ்வரம் தான். பெயாிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது ! இவ்வாலயம் பக்தர்களுக்கு ஒரு பாலிகிளினிக், மருத்துவரிடம் சிகிச்சை செய்துகொண்டு மருந்து சாப்பிடடாலும், மனது நம்பிக்கையுடன் இருந்தால் தான் வியாதிகள் தீரும் அத்தகைய நம்பிக்கை தரும் ஆலயமாக இந்த திருத்தலம் விளங்குகிறது மேற்கு திசை நோக்கி வைத்தியநாதனும் தெற்கு திசை நோக்கி நின்று தையல்நாயகி அம்பிகையும் திருவருள் வழங்கும் பெருங் கோவில் , இந்த தளத்தில் 18 தீர்த்தங்கள் இருக்கின்றன இருப்பினும் அம்பாள் சன்னதிக்கு எதிரே திருக்கோவில் வளாகத்தின் உள்ளேயே, சுற்றிலும் அழகிய மண்டபங்களுடன் காட்சி தரும் சித்ரா மிா்த தீர்த்தம்" என்னும் திருக்குளம் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது
செல்வ முத்துக்குமரன்
சிவபெருமான் உள் பிரகாரச் சுற்றில் தென்புறம் கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகரும், வடபுறம் சிவசக்தியின் செல்லப்பிள்ளையாக அருணகிரிநாதர், குமரகுருபா்ஆகியோாின் பாடல் பெற்ற பெருமைக்குரிய செல்வமுத்துக்குமரன் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கார்த்திகை தோறும் இரவில் தங்க தேரில் வரும் காட்சியை கண்டு தரிசிக்கலாம்
அடுத்தடுத்த சன்னதிகளில் கஜலட்சுமி, அஷ்டலட்சுமியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர் இவர்களுக்கு அருகே நடராஜர் சபை உள்ளது கோஷ்ட தேவதைகளாக துர்க்காதேவியும், தென்புறம் நோக்கி அமா்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னதியும், மேலே விமானத்தில் சீர்காழி சட்டைநாதர் திருக்காட்சியும், எதிரேவிபூதி நிறைந்த ஜடாயு குண்டமும் சிறப்புடன் விளங்குகின்றன
ஆலய பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியபடி ஒன்பது கிரகங்களும் ஒரே வரிசையில் நிற்கின்றன எங்கே இறைவன் அருளாட்சி உயர்ந்து கோள்கள் வலிமை குறைந்து இருக்கின்றனவோ அங்கேதான் நவகிரகங்கள் இப்படி ஒரே வரிசையில் இருக்குமாம் இந்த தலத்தில் வைத்தியநாதன் ஆணைக்கு கட்டுப்பட்டு கிரகங்கள் இயங்குகின்றன
தென்கிழக்கு பகுதியில் வைத்தியநாதரை வழிபட்டு முக்தி அடைந்த, மருத்துவ சித்தரான தன்வந்திரி சன்னதி அமைந்துள்ளது இது இத்தளம் வந்தால் நோய் நீங்கிவிடும் என்ற தன்னம்பிக்கையை இன்னும் வலுப்படுகிறது.
நோய் நீங்க இத்திருத்தலம் வரும் பக்தர்களுக்கு விபூதியும் திருச்சாந்து உருண்டையும் வழங்கப்படுகிறது, சுக்ல பட்சத்தில் ஒரு நன்னாளில் அங்க சந்தான குளத்தின் மையத்தில் உள்ள மண்ணை எடுத்து, புதுப் பாத்திரத்தில் வைத்து விபூதி குண்டத்திலுள்ள விபூதியையும் சித்தாமிா்த தீர்த்தத்தையும் கலந்து வில்வ இலை,வேம்பு இலை , மற்றும் சந்தனக் குழம்பினையும் சேர்த்து அரைத்து மாத்திரையாகத் தயார் செய்கின்றனர் இதனை அம்பிகைதிருவடியில் வைத்து மந்திரம் சொல்லி உருஏற்றி நோய் பாதிப்புள்ள பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்
இந்த திருக்கோயிலுக்கு வந்து மனம் உருக தையல்நாயகி வைத்தியநாதரை வணங்கிவிட்டு இந்த மாத்திரையை நம்பிக்கையுடன் பெற்றுச் சென்று சாப்பிடுவது சிறப்பு
வேப்பமரம்
இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் அடர்ந்த பரந்த கம்பீரமாக நிற்கும் வேப்பமரம் காட்சி அளிக்கிறது இது நோய் தீர்க்க நான் இருக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி தன்னுடைய மூலிகை காற்றை வருவோர்க்கெல்லாம் வாரி வழங்குகிறது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாக மருத்துவ குணம் கொண்ட வேப்பமரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக இருக்கிறது
இந்த இடத்திற்கு ஆதி வைத்தியநாதபுரம் என்ற பெயரும் உண்டு
"இத்தரணியில் எவருடைய நோய் பிணியும்
சித்தாமிா்தக்கரையில் தீருமே ~ சக்தி தையல்
மாதுக் கியைந்த வைத்தியரே நீா்மருந்தை
ஏதுக்குமண்ணாக்கி னீா் , என்ற பாடல் மூலமாகவும்,
"திறன் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வராம
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமருமிடம்
செடியாய உடல்தீா்ப்பான் தீவினைக்கோா் மருந்தாவான்
பொடியாடிக் கடிமை செய்த புள்ளிருக்குவேளூர்"
என்ற பாடலை இந்த தளத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைக்கின்றன திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற நல்வாக்காகம்.
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ராமலிங்க அடிகளார் சிதம்பரநாத முனிவர் காளமேகப்புலவர் உள்ளிட்ட பலரும் பாடல் புனைந்த காவிரி வடகரைத் தலங்களில் 16வது தேவார திருத்தலமாக, இந்த ஆலயம் சிறப்புற்று விளங்குகிறது
புள்ளிருக்குவேளூர்
ராமாயண காவியத்தின்தலைவனாக ராமபிரான் ,தன்னுடைய பெரிய தந்தையாக ஏற்றுக் கொண்டு ஜடாயு என்னும் பறவை இங்கே தகனம் செய்யப்பட்டுள்ளது
நால்வகை வேதங்களில் முதன்மையான"இருக்கு" (,ரிக்) வேதம் இறைவனை வழிபட்ட தலம் இது , "வேள் ~ முருகப் பெருமான் செல்வமுத்துக்குமரன் இங்கே எழுந்தருளி தந்தை வைத்தியநாதரைப் பூசித்து பேறு பெற்ற திருத்தலம் எனவேதான் இந்த தளம் புள்ளிருக்கு வேளூர் என்ற சிறப்பு பெயர் பெற்றுள்ளது
செவ்வாய் என்னும் அங்காரகன் தனி சன்னதியில் இருந்து ,பக்தா்களின் தோஷம்நீக்குவதால் ." அங்காரக ஷேத்திரம் " என்ற பெயரும் இத்தலத்திற்க உண்டு .இந்த திருக்கோயில் தருமபுரம் ஆதீனகா்த்தாின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது
தினம் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்த கோயில் நடை திறந்திருக்கும்
தொடர்பு எண் 04364 ~279423
சர்வம் சிவார்ப்பணம்
Comments
Post a Comment