
🙏#சூரியபகவான்வழிபட்ட #அற்புதஆலயங்கள்🙏 ஓம்.. சூரியனே உலகிற்கு ஒளிகாட்டும் தெய்வமாகும். அந்தச் சூரியனே ஈசனை வழிபட்டுப் பேறு பெற்று ஏழு திருமுறைத் தலங்களை ஒரு பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இது திருவேதிக்குடி தலபுராணத்தில் இடம் பெற்றுள்ளதாகும். கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம் பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி பொற்புற வார் பனங்காட் டூர் நெல்லிக் காவேழும் பொற் பரிதி பூசனை செய்யூர். - என்பதாகும். இதன்பொருள் 1. கண்டியூர் (2) வேதிக்குடி (3) நல்ல குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம் (4) பண்பமைந்த பரிதி நியமம் எனும் பருத்தியப்பர் கோயில் (5) பாங்கான திரித்தெளிச்சேரியான கோயில்பத்து (6) பொன் புறவார் பனங்காட்டூர் எனும் (பனங்காட்டூர்) (7) நெல்லிக்கா ஆகிய ஏழும் பொன்போல் பிரகாசிக்கும் சூரியன் சிவபெருமானைப் பூசிக்கும் பதிகளாகும். வியாசர்பாடி ரவீஸ்வரர் சூரியனின் வம்சாவளியில் திருமாலின் அவதாரமாகத் தோன்றியவர் வேதவியாசர் ஆவார். இந்த வியாசரே வே...