🐘🐘🐘 #ஓம் #பிறவியின் #பயன்🌍🌍🌍
எத்தனை பிறவி எடுத்தோம் என்பதும் தெரியாது, இனி எத்தனை பிறவி எடுப்போம் என்பதும் தெரியாது, முக்தி முக்தி என்று சொல்கிறார்கள் தவிர அதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. பிறகு எதை நோக்கம் என்று கொள்வது ?
- முக்தி என்பது பருப் பொருளல்ல !! கண்களால் காண்பதற்கு. பரம்பொருள் நிலைதான் முக்தி. எத்தனை பிறவி எடுக்க வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறீர்கள் ? பிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கவலைப்படுங்கள் !! அதற்காக உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் நோக்கமாக இருக்கட்டும். கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பை வீண் கவலைகளால் இழந்து விடாதீர்கள்.
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே
மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும்...
இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே !
என்கிறார் பட்டினத்தார். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்... மனிதன் செய்கின்ற எச்செயலாக இருந்தாலும் சரி, அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நான் யார் என்கிற தேடல்தான். நான் யார் என்கிற கேள்வி ஜீவனிடத்தில் இருக்கும் வரை பிறவி நீண்டு கொண்டேதான் போகும்.
ரமண மகரிஷி சொல்வதைப் போல ''எதுவரை மனதில் விஷய வாசனைகள் இருக்கின்றனவோ, அது வரை நான் யார் என்ற கேள்வியும் ஜீவனிடத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். குப்பையைக் கூட்டித் தள்ளுவது போல அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டால் சொரூபத்தை அறியலாம்'' என்பார்.
அதுதான் இதற்கு முடிவு. வேறு எவ்வழியுமில்லை. எந்த வழியில் வந்தாலும் இது வழியாகத்தான் உள்ளே நுழைய முடியும். உள்ளே நுழைந்து விட்டால் பிறகு பிறவி என்பதே கிடையாது.
- சுயேட்சை என்பது ஆன்மாவின் இச்சையா ?
- அனைத்தும் அதுவேயாகும் பொழுது, அது எதைக் குறித்து இச்சை கொள்ள வேண்டும் ? ஆன்மா என்பது ஜடநிலையல்ல. அது அனைத்து உயிர்ப்பு நிலைகளையும் தன்னகத்தே ஒடுக்கிக் கொண்டது. நம் அறிவுக்கு உயர்நிலையைத் தருவதே அதுதான். எனவேதான் அதைப் பேரறிவுப் பெருநிலை என்பார்கள். ஆன்ம ஒளியைப் பெற்றுதான் நம் அறிவு பகுத்தறியும் திறனை அடைகிறது. அனைத்திற்கும் ஆதாரமாகவும், சக்தியாகவும், சாட்சியாகவும் அதுவே திகழ்கிறது. எனவே மனமானது புற விஷயங்களில், இந்திரிய மயக்கத்தில் தவறான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளும் பொழுது, ஆன்மாவானது தன் தூய்மையான இயல்பினால் அதைத் தடுக்கும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இதையே உள்ளுணர்வு என்கிறோம்.
அந்த உள்ளுணர்வானது நம் அறிவின் மூலமே நம் மனதிற்கு உணர்த்தப்படுகிறது. எனவே சுயேச்சை என்பது நம் ஆன்மாவின் தூய்மையான இயல்பேயாகும். அதுவே துன்பங்களிலிருந்து நம்மை விலக்கிக் காப்பதற்காக உள்ளுணர்வாக வெளிப்படுகிறது. ஆனால், நம் மனம் அதை ஏற்றுக் கொள்ளாத பொழுது, உள்ளுணர்வான சுயேச்சை கூட நல்லது, கெட்டது என்ற இரண்டு நிலைகளை அடைந்து விடுகிறது.
ஆன்மா என்றால் பூரணம். எனவே நிறைநிலை என்பதே மனிதனின் இயல்பாக இருக்கிறது. மனிதன் எப்பொழுதும் பூரணத்துவத்தை உடையவனே. ஆனால், அதை வெளிப்படுத்துவதற்கு இயலாத அளவில் சில தடைகள் இருக்கின்றன. தடை நீக்குபவரிடத்து பூரணத்துவம் மிளிர்கிறது. நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இத்தடைகளை நீக்குவதற்காகவே. எனவே பூரணத்துவம் என்பது நம்மிடம் இல்லாத அல்லது மாறுபட்ட ஒன்று என்றோ, குறைவு பட்டு விட்டது என்றோ எண்ணுவது அறியாமையே. அதாவது மனதின் ஆற்றல்கள் அனைத்தும் பிரகிருதிக்கு உரியவை. பிரகிருதியினால்தான் மனம் செயல்படுகிறது.
அப்படியானால், ஏன் ஒவ்வொருவரிடமும் மனதின் ஆற்றல்களான அறிவு, திறமை, உணர்ச்சிகள், குணங்கள் போன்றவை வேறுபடுகின்றன என்ற கேள்வி வருகிறதல்லவா ?அதற்குக் காரணம் என்ன என்று பதஞ்சலி மகான் தெளிவாகவே விளக்குகிறார். அதாவது, உயிர்களின் பரிணாமம் என்பது பிரகிருதியின் உள் நிறைவால் ஏற்படுகிறது. வயலுக்கு நீர் பாய்ச்ச விரும்புகிற விவசாயி, அதற்குத் தடையாக இருக்கும் வரப்புகளை வெட்டித் தடையை நீக்க வேண்டும். அது போல பிரகிருதி வெளிப்படுவதில் உள்ள தடைகளை நீக்கினால் மட்டுமே நம் பூரணத்துவம் வெளிப்படும். அது வெளிப்படும் அளவிற்கே ஆற்றல்கள் மிளிர்கின்றன.
நீர் சுற்றிலும் இருக்கிறது. எனினும் தடை இருப்பதால் அது பாயவில்லை. அது போல ஆற்றல்களும், வலிமையும், வாய்ப்புகளும் மனிதனுக்குள் ஏற்கனவே இருக்கிறது. ஆனால், அவைகள் வெளிப்பட முடியாமல் தடுக்கப்பட்டுள்ளன. தடையை நீக்கி விடுபவரிடத்து பிரகிருதி பொங்கிப் பாய்கிறது. பிரகிருதியே எல்லா காரியங்களையும் நிகழ்த்துகிறது. பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் பிரகிருதியின் வேலையே. இதன் செயல்பாட்டிற்கு இடையூறாக இருக்கும் தடையை நீக்குவதே நமது வேலை. இதுவே சாதனை. அப்படியானால் தனிமனித முயற்சி என்பது பிரகிருதியைச் சாராததா என்று அடுத்த கேள்வி எழுகிறது.
சாராததுதான். அது ஆன்மாவில் இருந்து புத்தியில் பிரதிபலிக்கும் ஆன்மாவின் பிம்பத்திலிருந்து வருகிறது. ஆன்மாவே கர்த்தா. கர்த்தாவாகிய ஆனாமாவின் அந்த உயர்ந்த நிலையையே சுயேச்சை என்பார்கள். அதாவது ஆன்மாவிடம் உணர்வு, ஆற்றல் இரண்டுமே உள்ளது. உணர்வு நிலையிலிருந்து தோன்றுவதே சுயேச்சை. உணர்வு கடந்ததல்லவா ஆன்மா ? நீங்கள் உணர்வு உள்ளது என்று சொல்கிறீர்களே ? எல்லாம் அதனிடத்தில் உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய பேருணர்வாக, பேராற்றலாகவே ஆன்மா திகழ்கிறது. மேலும் ஆற்றல் என்று இங்கு குறிப்படப்படுவது புதிதாக எதையோ உருவாக்கக் கூடிய ஆற்றலை அல்ல. தடைகளை நீக்கும் ஆற்றலையே. இதை ஏன் சொல்கிறேன் என்றால், புதிதாகப் படைக்கிற அல்லது உருவாக்கிற வேலையை பிரகிருதி செய்கிறது.
பொதுவாக நாம் சொல்வோம் மனதை மனதால் கட்டுப்படுத்த வேண்டும் என்று. ஆனால், மனதைக் கட்டுப்படுத்த மனதால் முடியாது. அதை விட உயர்ந்த ஒன்று வேண்டும். அதுதான் ஆன்மா. ஆன்மா சுயேச்சையின் மூலமே இச்செயலைச் செய்கிறது. இந்த சுயேச்சையே கட்டுப்பட்டு நிற்கும் பொழுது என்ன செய்வது ? அது எப்படி மனதை அடக்கும் ? அதுதான் சராசரி மனிதனுக்கும், யோகிக்கும் உள்ள வித்தியாசம். யோகிகளிடம் மட்டுமே சுயேச்சை சுதந்திரமாக உள்ளது. மற்ற அனைவரும் தளைகளில் சிக்கிக் கொண்டுத் தவிப்பவர்களே. இதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்கலாம். சற்று நேரம் தியானம் செய்து பாருங்கள். மனம் ஆன்மாவில் ஒருமுகப்படுமானால் உங்கள் சுயேச்சை சுதந்திரமாக இருக்கின்றது என்று பொருள்.
அல்லாத பட்சத்தில் உங்கள் நிலையை நீங்களே உணர்ந்து கொள்ள வேண்டியதுதான். சுவாமி விவேகானந்தர் இது குறித்து சொல்லும் பொழுது, ஆன்மா சுதந்திரமானது. பந்தம், தளை என்பதெல்லாம் சுயேச்சை சார்ந்த விஷயங்களே. மனதை வெல்ல முடியாத பொழுது பந்தப்பட்டு நிற்பது சுயேச்சையே. முக்தி என்று கூறுவது சுயேச்சையின் சுதந்திரத்தையே. அது எப்பொழுது முக்தியடைகிறது ? என்று கேட்டால், ஆன்மாவோடு அது இரண்டறக் கலக்கும் பொழுதுதான். பெரும்பாலானவர்களின் சுயேச்சை நல்ல, தீய ஆசைகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இந்த நல்ல, தீயவைகளில் இருந்து விடுபடுவதே சுயேச்சையின் சுதந்திரமாகும். நல்லவர்களுக்குக் கூட சோதனை ஏற்படுவது இதனால்தான். நல்ல எண்ணங்களும், ஆசைகளும் கூட சுயேச்சையை கட்டுப்படுத்துபவைகளே என்கிறார்.
எனில் சுயேச்சையை எப்படித்தான் விடுபடச் செய்வது ? முளை ஒன்றில் கட்டப்பட்டுள்ள பசுவானது கயிறு எவ்வளவு நீளம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருக்கும். அது போல சுயேச்சையை நாம் செயல்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரமே இருக்கிறது. அந்த சுதந்திரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி முழு விடுதலையும் பெற வேண்டும். ஆன்ம நாட்டம், விவேகம் இவைகளே இதற்கு பெரிதும் உதவுகின்றன. பக்தியும் இதற்கான மற்றொரு வழியாக இருக்கிறது. பல ஆண்டுகள் சுய முயற்சி செய்து சாதிக்க முடியாததை, இறையருள் குறுகிய காலத்தில் சாதிக்க வைத்திடும். தீய சுயேச்சைகளை விட நல்ல சுயேச்சைகளால் கடவுளை நெருங்குவது எளிது. ஆகவே நற்செயல்கள் புரிவதன் மூலம் நல்ல சுயேச்சைகளைப் பெற்றுக் கொள்வதை ஆன்மீக வாழ்வின் ஆரம்ப சாதனையாக வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சுயேச்சை வேறு, ஆசை வேறு. சுயேச்சை என்பது ஆன்மாவின் சக்தி. ஆசையோ மனதின் சக்தி. அதாவது மனம் சம்பந்தப்பட்டது. இது சம்ஸ்காரங்களால் உருவாக்கப்படுவது. சுயேச்சை ஆன்மா சம்பந்தப்பட்டதாகையால் அது நேரடியாகப் புறவுலகுடன் தொடர்பு கொள்வதில்லை. மனதின் மூலமே செயல்படுகிறது. எனவே அது மனதின் இச்சையோடு கூடும் பொழுது சங்கல்பமாகிறது. சாதாரணமான மனிதர்களின் செயல்கள் எல்லாம் இந்த சங்கல்பங்களின் உந்துதல்களே. ஆனால், யோகி அவ்வாறல்ல. அவர் சுதந்திரமான சுயேச்சையுடன் ஆசைகளிலிருந்து விடுபட்ட நிலையில் செயல்படுகிறார்.
ஓம்...
.- 🌷#நன்றிஓம்ரவிக்குமார்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே ,
"#ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 45 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 60 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,
சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் ,
சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் .
என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும்.
வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .
அதை நீங்கள் கிளிக் செய்தால் "#ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும்.
நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் .
#சர்வம் #சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment