🍉ஆத்மாவை எனக்கு நன்றாக தெரியும் என்று கருதுவதில்லை தெரியாது என்றும் நினைக்கவில்லை ஏனெனில் என்னை எனக்குத் தெரியும் ஆத்மாவை தெரியாது அதேவேளையில் தெரியாது என்று சொல்லவும் முடியாது என்று நம்மில் யார் நினைக்கின்றானோ நினைக்கிறானோ அவனே ஆத்மாவை அறிகிறான்🍇



🍐யாருக்குத்  தெரியாதோ அவனுக்குத் தெரியும் யாருக்கு தெரியுமோ அவனுக்கு தெரியாது நன்றாக அறிந்தவர்கள் அறியவில்லை நன்றாக அறியாதவர்கள் அறிகிறார்கள்.🍎


🌰உலகத்தின் பொருட்கள் எதையும் அறிவதற்கு நம்மிடம் நான் உணர்வு அடிப்படையாக இருப்பது அவசியம் நான் அறிபவன் அறிவு அறியப்படும் பொருள் இந்த மூன்றும் சேரும்போதுதான் நாம் எதையும் அறிய முடியும் இந்த மூன்றும் மறைகின்ற இடத்தில் தோன்றுவதே ஆத்மா அறிவு அல்லது ஆத்மா ஞானம் அல்லது ஆத்மா அனுபூதி நான் உணர்வு அழிந்த பிறகு அங்கே புதிதாக தோன்றுவதே ஆத்ம உணர்வு என்று விளக்குகிறார் ஸ்ரீ ரமண மகரிஷி நான் உணர்வு அறிந்தபிறகு கிடைக்கின்ற இந்த அனுபூதி அனுபவத்திற்கு மட்டும் உரியது விளக்கத்திற்கு உரியது அல்ல🍔


🍟எனவே உலகப் பொருட்களை தெரிவதுபோல் அதாவது புற பொருட்களை மனதால் அறிவதுபோல் ஆத்மாவை தெரியாதவன் உண்மையில் அதனை தெரிந்து இருக்கின்றான் உலகப் பொருட்களை தெரிவது போல் தெரிந்தவன் உண்மையில் அதனை அறியவில்லை.🍄


🍓 ஓம்...

Comments

Popular posts from this blog