வாழ்க்கை என்பது விழித்திருத்தல்!🌹

🌹வாழ்க்கை என்பது விழித்திருத்தல்!🌹🌹



மனப்பக்குவம்!


எல்லோருக்கும் மனப்பக்குவம் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம் குறிப்பிட்ட ஒரு சிலருக்கோ, அல்லது அவதார மனிதர்களுக்கோ மட்டும்தான் மனப்பக்குவம் தேவை என்று நினைக்க வேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் அது தேவை!


நாம் ஒவ்வொருவரும் உடலாலும் உள்ளத்தாலும் மற்றும் அறிவாலும் முதிர்ச்சி அடைவதற்காகவே படைக்கப்பட்டுள்ளோம். பக்குவப்பட்டவனே ஞானி அல்லது அறிஞன் ஆவான் கடவுளை அறிதல், 'தன்னை'பறிதல் போன்றவை பக்குவப்படுதலே ஆகும். பக்குவப்படுதல்தான் வாழ்க்கையின் நிறைவாகும். வேதங்கள் வழிவகுத்துக கொடுக்கும் ஒழுக்கக் கோட்பாடுகள் மனம் பக்குவமடைய வழிகாட்டுகின்றன. எல்லாவகையான வழிபாடுகளும் பிரார்த்தனை களும் தம் மனம் பக்குவமடைவதற்கான வழிமுறைகள்தான் வேதாந்தம் 3 படிப்பதும் மெச்சூரிட்டி அடைவதற்குத்தான்.


உலகிலுள்ள எல்லாப் பிரச்னைகளும் பக்குவமின்மையால்தான ஏற்படுகிறது. ஆகவே, பக்குவமடைவதே - நாம் பிரச்னைகளை எதிர் கொள்வதற்குத் தீர்வாகும். ஒருவரின் புரித்துகொள்ளும் திறனைப் பொறுத்து, அவரது மெச்சூரிட்டி அமைகிறது புரித்துகொல்வதில் குழப்பம் இருப்பின், மனக்குழப்பம் ஏற்படுவது இயல்பு எதையும் சரியாகப் புரிந்துகொண்டால் நீங்கள் பக்குவப்பட்டவராக இருப்பீர்கள். வேதாந்தம் நமக்கு உணமைகளை உள்ளவாறே சரியாக உணர்த்துகிறது. அதனால் நம்மைப் பக்குவமடையச் செய்கிறது. ஒருவர் தன்னை முழுமையானவராக, குறைகள் அற்றவராக அறிந்து கொண்டுவிட்டால், அவர் தன் வளர்ச்சிக்காகவோ, மகிழச்சிக்காகவோ செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. அவரைப் பக்குவப்பட்டவர் (Matured Person) என்று தாராளமாக அழைக்கலாம். அதற்குப் பிறகு, அவர் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு அருள் புரிவதே ஆகும்!


பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார்;


“மூவுலகிலும் நான் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இல்லை. (ஏனென்றால்) நான் அடையாத ஒன்றை அடையவேண்டும் என்பதில்லை. இருப்பினும், நான் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். அதாவது, செய்ய வேண்டியதை தான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். உனக்குத் தேரோட்டுவதைப் போல."


இது பக்குவப்பட்ட நிலைக்கு ஓர் அடையாளம்,


இந்த உலகம் ஒரு றிப்பிட்ட வாழ்க்கையை அதாவது, தத்தளிப்பும் குழப்பமும் உள்ள ா ழ் ை வத் தரக்கூடுமாயின், அது ஓரளவு மனப் பக்குவத்தையும் தரக்கூடும்.


உபநிஷத் சொல் கிறது:


வாழ்க்கையின்அனுபவங்களை ஆராய்ந்தபின், பகுத்தறிவாளன் பக்குவத்தை உள்ளதை உள்ளபடி பார்க்கும் திறனைஅடைகிறான் ஒரு சூழ்நி 63 ஏற்படுத்தும் பிரச்னையை இல்லை என்று தட்டிக் கழிப்பதும் இல்லை. அதை உள்ளதைவிடப் ப ய பிரச்னையாகவும் பார்ப்பதில்லை


இதுவேமெச்சூரிட்டி அல்லது மனப்பக்குவம் உள்ள பார்வை ஒவ்வொருவரும் இம்மாதிரி வளர்ச்சி அடைவதே வேதத்தின் நோக்கமாகும். உண்மைகளுக்கும் யதார்த்தங்களுக்கும் விழித்திருத்தலே வாழ்க்கையை வாழ்வதாகும். உண்மைகளையும் யதார்த்தங்களையும் புரிந்துகொண்டு

வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ளவேண்டும். 


நம் முன்னே உலகம் பரந்து, விரிந்து வியாபித்திருப்பதைப்பார்க்கிறோம் ஆனால், இந்த உலகத்தின் இயக்கத்துக்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது.


நமக்கு உடல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண், காது, மூக்கு என்று பல்வேறு உறுப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றை வேறு மாதிரி மாற்றி அமைக்கககோரும் உரிமை நமக்கு இருக்குமேயானால், நம் விருப்பத்துக்கேற்ப நம் உறுப்புகளை மாற்றியமைக்கச் சொல்லலாம். நமக்கு அந்த உரிமை கிடையாது. எனவே, ஒவ்வொரு உறுப்பும் அததைன் இடத்தில்தான் நிரந்தாமாக இருக்கும்!


உலகம் என்ற இயக்கத்துக்குள் நமக்கு எல்லாமே விதிக்கப்படு கின்றன அப்பா. அமமா நமக்கு விதிக்கப்பட்டவர்கள்தான். 'ஸோ அண்ட் ஸோவுககுத்தான் நான் குழந்தையாகப் பிறக்கவேண்டும்' என்று கேட்டுக்கொள்ள நமக்கு சாய்ஸ எல்லாம் கிடையாது! குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நாம் பிறக்கிறோம். இதுவும் விதிக்கப்பட்டதுதான். நம் இஷ்டத்துக்கு மாற்றிக்கொள்ள முடியாது! உங்கள் அத்தையும் பக்கத்து வீட்டுக்காரரும்கூட விதிக்கப்பட்ட வர்கள்தான். வெவ்வேறு நபர்களுக்கு, வெவ்வேறு முறையில் நாம் சொந்தக்காரராக இருப்பதும் விதிக்கப்படுவதுதான். இதெல்லாம் தீங்கள் விருப்பம் தெரிவித்துத் தரப்பட்டதல்ல! இந்த உலகத்துக்கும் சூழலுக்கும் நாம் படைப்பாளி இல்லை. ஏற்கெனவே அதுபாட்டுக்கு இருக்கத்தான் செய்கிறது! அந்த உலகத்தை நாம் பூ நம்முடைய குறுகிய வாழ்க்கையின்போது எதிர்கொள்கிறோம். அவ்வளவே!


இந்த உலகம் எப்போதும் இருக்கிறது. ஆனால், உலகத்தின் மீது நம் பார்வை எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி இருக்கிறதா? இல்லையே! நாம், நம்முடைய கற்பனைகள், குறைபாடுகள், பயம், பாதுகாப்பின்மை முதலியவ்ற்றின் பாதிப்புடனேயேதான் இந்த உலகத்தைப் பார்க்கிறோம். "நாம் அனைவரும் நம் மனதினால் உருவாக்கப்பட்ட உலகிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனாலேயே எளிமையான, தீங்கிழைக்காத உலகத்தை, தேவையில்லாமல் நமக்கு வில்லனாக திளைத்து வெறுக்கத் தொடங்குகிறோம். இதே உலகத்தை வேறொருவர் வேறு மாதிரி பார்க்கிறார். அதாவது, ஒருவருடைய மனம் எந்த அளவுக்கு அனுமதிக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் உலகை அவரால் பார்க்க முடிகிறது.


நமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே இந்த உலகத்தை நாம் எதிர்கொள்கிறோம்.


வீட்டில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலே வீட்டைவிட்டு ஓடிவிடத் துடிக்கிறோம். இது வெறுப்பு. அதன் பிறகு எங்கு போகலாம். என்னுறே ஏதாவது வேதாந்த விரிவுரை கேட்க் இது விருப்பு.


பணம், மியூஸிக் சிஸ்டம் என்று நம்மிடம் இல்லாத பலவிஷயங்கள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதேமாதிரி, ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் சில விஷயங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம் - நமது பணம், உடல் நலம், வேலை. தலைமுடி இப்படிப் பல!


இல்லாததைப் பெறுவதும் சரி, இருப்பதைத் தக்கவைத்துக் கொள்வதும் சரி... இரண்டுமே நம்மைப் பொறுத்தவரை பெரிய போராட்டமாகவே இருக்கிறது. அதாவது, இருப்பதைத் தக்கவைத்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உதாரணமாக, டாக்டரின் அறிவுரையின்படி பயங்கர 'டயட்'டில் இருந்து உங்கள் எடையைக் கணிசமான அளவுக்குக் குறைத்துக் கொண்டுவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குறைக்கப்பட்ட இந்த எடை கூடிவிடாமல் தக்கவைத்துக் கொள்ள எப்படியெல்லாம் பாடுபட வேண்டியிருக்கிறது! வாக்கிங் போகிறோம்.. ஜாகிங் செய்கிறோம்... ஹெல்த் கிளப் செல்கிறோம்... இப்படி நிறைய! அதேமாதிரி, கிடைத்த ஆபீஸ் வேலையை இழந்துவிடாமல் தக்க வைத்துக்கொள்வதும் அத்தனை எளிதாக இருப்பதில்லை. அதற்குக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது!


உங்களுக்குப் பிடிக்காததை விலக்கி வைப்பதும் அத்தனை எளிதாக இருப்பதில்லை. நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தலைவலி வருகிறது. ஜுரம் வருகிறது. இப்படி வியாதிகள் வராமல் தடுக்க நிறைய செலவு செய்யவேண்டி வருகிறது! வீட்டில் தரையைக் கூட்டுவது, குப்பைகளை அள்ளுவது... இப்படி எல்லாமே தேவையில்லாதவற்றை விலக்கித்தள்ள நாம் எடுக்கும் முயற்சிகள்தான்!


Om ravikumar.. 

Comments

Popular posts from this blog