❤️எந்த ஹோரையில் எந்த காரியம் செய்யலாம்?❤️
❤️எந்த ராசிக்கு எந்த ஹோரை... என்னென்ன பலன்கள்? ❤️
ஹோரை
ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரம் அந்த கிரகத்தின் ஹோரை என்று அழைக்கப்படும். ஹோரை என்பதை ஓரை என்றும் அழைப்பர். நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கு ஹோரை குறிக்கப் படவில்லை. ஒவ்வொரு நாளும் துவங்கும் போது எந்த கிரகத்தின் ஹோரையுடன் துவங்குகிறது என்று வரையறுத்து வைத்திருக்கின்றனர். அதன் படியே அந்த நாளின் மற்ற ஹோரைகள் கணக்கிடப்படுகிறது.
ஓம்..
ஞாயிறு -சூரியன் ஹோரை
திங்கள்-சந்திரன் ஹோரை
செவ்வாய் - செவ்வாய் ஹோரை
புதன் - புதன் ஹோரை
வியாழன் -குரு ஹோரை
வெள்ளி - சுக்கிரன் ஹோரை
சனி -சனி ஹோரை
மொத்தத்தில் சுபஓரையில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம். அசுப் ஓரையில் முடிந்த வரை நல்ல விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றிக் காணலாம்.
சூரிய ஓரை
விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம். சந்திர ஓரை
திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி, கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
செவ்வாய் ஓரை
போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தல், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை
ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருட்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
ஓம்..
குரு ஓரை
புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
சுக்கிர ஓரை
கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், நட்பைத் துவக்க, மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
சனி ஓரை
உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..
ஹோரை என்றால் என்ன..
ஜோதிடத்தில் பலவிதமான சூட்சுமமான முறைகள் இருக்கின்றன. அவற்றில், மிக முக்கியமானது ஹோரைகள். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். நவக்கிரகங்களில் ராகு கேது சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஓர் கணக்கை நமது முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.
அதன்படி, நவகிரகங்களில் சூரியன் - சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு. ஹோரை என்பது ஒருமணி நேரம். இந்த சொல்லில் இருந்துதான் அதாவது ஹோரை என்பதில் இருந்துதான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாகச் சொல்லுவார்கள்.
ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம். பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை கள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன். அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.
பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது. எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?
சூரிய ஹோரை : சூரியனை ராஜகிரகம் என்று அழைப்பார்கள். அரசு மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிபதி சூரியன். சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்கள் முயற்சித்தால் சிறக்கும். மேலதிகாரிகளை சந்தித்தல், அரசு சார்ந்த முயற்சிகள், சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை காணுதல் போன்ற செயல்களைச் செய்யலாம். இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம். இந்த ஹோரையில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல. சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.
சுக்கிர ஹோரை: களத்திரம் - அழகு - கவர்ச்சி - சுத்தம் - பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி. அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம். வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது. குறிப்பாக பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றிக்கும் இது ஏற்றது.
புதன் ஹோரை: கல்வி - கலைகள் - நுண்ணறிவு போன்ற விஷயங்களுக்கு அதிபதி புதன். வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஹோரையில் செய்யலாம். கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேரம் உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளலாம். புத்திக்கூர்மை வளர்வதற்கு இந்த ஹோரையில் முயற்சி மேற்கொண்டால் சிறப்பு.
சந்திர ஹோரை: நவகிரகங்களில் மாதா காரகன் - மனம் காரகன் என்று சொல்லக்கூடியவர் சந்திரன். வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது. இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கு துவங்குதல் ஆகியவற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்கள் ஜெயமாகும். வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது. பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம்.
சனி ஹோரை : நவகிரகங்களிலே ஆயுள் - தொழில் - கர்மா சம்பந்தமான காரியங்களுக்கு அதிபதி. சனி ஹோரை ஒரு சில காரியங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஹோரையாக சனி ஹோரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஹோரை சிறப்பானது. தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரை இது.
குரு ஹோரை: நவகிரகங்களுள் சுபகாரகன் குருவாகும். தனகாரகன் சந்தான காரகன் என்றெல்லாம் அழைக்கக்கூடியவர். அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம். வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நலம்.
செவ்வாய் ஹோரை: ரத்தம் - மருத்துவம் - பூமி - அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார். செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி பேசலாம்.
எந்தெந்த ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?
மேஷம் - ஹோரைகள்: பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.
ரிஷபம் - ஹோரைகள்: சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் இவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது அனுகூலத்தைக் கொடுக்கும். புதிய வீடு - மனை - வாகனம் - ஆடை - அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஹோரையில் இவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சீக்கிரமே நோய் குணமடையும்.
மிதுனம் - ஹோரைகள்: சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை தரும். புதிய முயற்சிகள் - கல்வி - தொழில் - உத்தியோகம் - வீடு - மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஹோரையில் செய்தால் வேகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரையில் ஆரம்பிப்பது அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.
கடகம் - ஹோரைகள்: சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.
சிம்மம் - ஹோரைகள்: பொதுவில் சூரியன் - சந்திரன் - குரு ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை நன்மை பயக்கும்.
கன்னி ஹோரைகள்: பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிர ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நன்மை பயக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரையையும் - பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.
துலாம் - ஹோரைகள்: பொதுவில் செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும் நன்மை தரும்.
விருச்சிகம் - சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.
தனுசு - ஹோரைகள்: பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - குரு ஹோரைகள் உத்தமம்.
மகரம் - ஹோரைகள்: பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.
கும்பம் - ஹோரைகள்: பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.
மீனம் - ஹோரைகள்: பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..
இனி ஹோரைகளுக்கான நேர அட்டவணையைப் பார்க்கலாம். Day Time Period Horainame ஞாயிற்றுக்கிழமை 6 - 7 AM சூரியன் ஞாயிற்றுக்கிழமை 7 - 8 AM சுக்கிரன் ஞாயிற்றுக்கிழமை 8 - 9 AM புதன் ஞாயிற்றுக்கிழமை 9 - 10 AM சந்திரன் ஞாயிற்றுக்கிழமை 10 - 11 AM சனி ஞாயிற்றுக்கிழமை 11 - 12 AM குரு ஞாயிற்றுக்கிழமை 12 - 1 PM செவ்வாய் ஞாயிற்றுக்கிழமை 1 - 2 PM சூரியன் ஞாயிற்றுக்கிழமை 2 - 3 PM சுக்கிரன் ஞாயிற்றுக்கிழமை 3 - 4 PM புதன் ஞாயிற்றுக்கிழமை 4 - 5 PM சந்திரன் ஞாயிற்றுக்கிழமை 5 - 6 PM சனி ஞாயிற்றுக்கிழமை 6 - 7 PM குரு ஞாயிற்றுக்கிழமை 7 - 8 PM செவ்வாய் ஞாயிற்றுக்கிழமை 8 - 9 PM சூரியன் ஞாயிற்றுக்கிழமை 9 - 10 PM சுக்கிரன் ஞாயிற்றுக்கிழமை 10 - 11 PM புதன்கிழமை ஞாயிற்றுக்கிழமை 11 - 12 PM சந்திரன் ஞாயிற்றுக்கிழமை 12 - 1 AM சனி ஞாயிற்றுக்கிழமை 1 - 2 AM குரு ஞாயிற்றுக்கிழமை 2 - 3 AM செவ்வாய் ஞாயிற்றுக்கிழமை 3 - 4 AM சூரியன் ஞாயிற்றுக்கிழமை 4 - 5 AM சுக்கிரன் ஞாயிற்றுக்கிழமை 5 - 6 AM புதன் திங்கட்கிழமை 6 - 7 AM சந்திரன் திங்கட்கிழமை 7 - 8 AM சனி திங்கட்கிழமை 8 - 9 AM குரு திங்கட்கிழமை 9 - 10 AM செவ்வாய் திங்கட்கிழமை 10 - 11 AM சூரியன் திங்கட்கிழமை 11 - 12 AM சுக்கிரன் திங்கட்கிழமை 12 - 1 PM புதன் திங்கட்கிழமை 1 - 2 PM சந்திரன் திங்கட்கிழமை 2 - 3 PM சனி திங்கட்கிழமை 3 - 4 PM குரு திங்கட்கிழமை 4 - 5 PM செவ்வாய் திங்கட்கிழமை 5 - 6 PM சூரியன் திங்கட்கிழமை 6 - 7 PM சுக்கிரன் திங்கட்கிழமை 7 - 8 PM புதன் திங்கட்கிழமை 8 - 9 PM சந்திரன் திங்கட்கிழமை 9 - 10 PM சனி திங்கட்கிழமை 10 - 11 PM குரு திங்கட்கிழமை 11 - 12 PM செவ்வாய் திங்கட்கிழமை 12 - 1 AM சூரியன் திங்கட்கிழமை 1 - 2 AM சுக்கிரன் திங்கட்கிழமை 2 - 3 AM புதன் திங்கட்கிழமை 3 - 4 AM சந்திரன் திங்கட்கிழமை 4 - 5 AM சனி திங்கட்கிழமை 5 - 6 AM குரு செவ்வாய்கிழமை 6 - 7 AM செவ்வாய் செவ்வாய்கிழமை 7 - 8 AM சூரியன் செவ்வாய்கிழமை 8 - 9 AM சுக்கிரன் செவ்வாய்கிழமை 9 - 10 AM புதன் செவ்வாய்கிழமை 10 - 11 AM சந்திரன் செவ்வாய்கிழமை 11 - 12 AM சனி செவ்வாய்கிழமை 12 - 1 PM குரு செவ்வாய்கிழமை 1 - 2 PM செவ்வாய் செவ்வாய்கிழமை 2 - 3 PM சூரியன் செவ்வாய்கிழமை 3 - 4 PM சுக்கிரன் செவ்வாய்கிழமை 4 - 5 PM புதன் செவ்வாய்கிழமை 5 - 6 PM சந்திரன் செவ்வாய்கிழமை 6 - 7 PM சனி செவ்வாய்கிழமை 7 - 8 PM குரு செவ்வாய்கிழமை 8 - 9 PM செவ்வாய் செவ்வாய்கிழமை 9 - 10 PM சூரியன் செவ்வாய்கிழமை 10 - 11 PM சுக்கிரன் செவ்வாய்கிழமை 11 - 12 PM புதன் செவ்வாய்கிழமை 12 - 1 AM சந்திரன் செவ்வாய்கிழமை 1 - 2 AM சனி செவ்வாய்கிழமை 2 - 3 AM குரு செவ்வாய்கிழமை 3 - 4 AM செவ்வாய் செவ்வாய்கிழமை 4 - 5 AM சூரியன் செவ்வாய்கிழமை 5 - 6 AM சுக்கிரன் புதன்கிழமை 6 - 7 AM புதன் புதன்கிழமை 7 - 8 AM சந்திரன் புதன்கிழமை 8 - 9 AM சனி புதன்கிழமை 9 - 10 AM குரு புதன்கிழமை 10 - 11 AM செவ்வாய் புதன்கிழமை 11 - 12 AM சூரியன் புதன்கிழமை 12 - 1 PM சுக்கிரன் புதன்கிழமை 1 - 2 PM புதன் புதன்கிழமை 2 - 3 PM சந்திரன் புதன்கிழமை 3 - 4 PM சனி புதன்கிழமை 4 - 5 PM குரு புதன்கிழமை 5 - 6 PM செவ்வாய் புதன்கிழமை 6 - 7 PM சூரியன் புதன்கிழமை 7 - 8 PM சுக்கிரன் புதன்கிழமை 8 - 9 PM புதன் புதன்கிழமை 9 - 10 PM சந்திரன் புதன்கிழமை 10 - 11 PM சனி புதன்கிழமை 11 - 12 PM குரு புதன்கிழமை 12 - 1 AM செவ்வாய் புதன்கிழமை 1 - 2 AM சூரியன் புதன்கிழமை 2 - 3 AM சுக்கிரன் புதன்கிழமை 3 - 4 AM புதன் புதன்கிழமை 4 - 5 AM சந்திரன் புதன்கிழமை 5 - 6 AM சனி வியாழக்கிழமை 6 - 7 AM குரு வியாழக்கிழமை 7 - 8 AM செவ்வாய் வியாழக்கிழமை 8 - 9 AM சூரியன் வியாழக்கிழமை 9 - 10 AM சுக்கிரன் வியாழக்கிழமை 10 - 11 AM புதன் வியாழக்கிழமை 11 - 12 AM சந்திரன் வியாழக்கிழமை 12 - 1 PM சனி வியாழக்கிழமை 1 - 2 PM குரு வியாழக்கிழமை 2 - 3 PM செவ்வாய் வியாழக்கிழமை 3 - 4 PM சூரியன் வியாழக்கிழமை 4 - 5 PM சுக்கிரன் வியாழக்கிழமை 5 - 6 PM புதன் வியாழக்கிழமை 6 - 7 PM சந்திரன் வியாழக்கிழமை 7 - 8 PM சனி வியாழக்கிழமை 8 - 9 PM குரு வியாழக்கிழமை 9 - 10 PM செவ்வாய் வியாழக்கிழமை 10 - 11 PM சூரியன் வியாழக்கிழமை 11 - 12 PM சுக்கிரன் வியாழக்கிழமை 12 - 1 AM புதன் வியாழக்கிழமை 1 - 2 AM சந்திரன் வியாழக்கிழமை 2 - 3 AM சனி வியாழக்கிழமை 3 - 4 AM குரு வியாழக்கிழமை 4 - 5 AM செவ்வாய் வியாழக்கிழமை 5 - 6 AM சூரியன் வெள்ளிக்கிழமை 6 - 7 AM சுக்கிரன் வெள்ளிக்கிழமை 7 - 8 AM புதன் வெள்ளிக்கிழமை 8 - 9 AM சந்திரன் வெள்ளிக்கிழமை 9 - 10 AM சனி வெள்ளிக்கிழமை 10 - 11 AM குரு வெள்ளிக்கிழமை 11 - 12 AM செவ்வாய் வெள்ளிக்கிழமை 12 - 1 PM சூரியன் வெள்ளிக்கிழமை 1 - 2 PM சுக்கிரன் வெள்ளிக்கிழமை 2 - 3 PM புதன் வெள்ளிக்கிழமை 3 - 4 PM சந்திரன் வெள்ளிக்கிழமை 4 - 5 PM சனி வெள்ளிக்கிழமை 5 - 6 PM குரு வெள்ளிக்கிழமை 6 - 7 PM செவ்வாய் வெள்ளிக்கிழமை 7 - 8 PM சூரியன் வெள்ளிக்கிழமை 8 - 9 PM சுக்கிரன் வெள்ளிக்கிழமை 9 - 10 PM புதன் வெள்ளிக்கிழமை 10 - 11 PM சந்திரன் வெள்ளிக்கிழமை 11 - 12 PM சனி வெள்ளிக்கிழமை 12 - 1 AM குரு வெள்ளிக்கிழமை 1 - 2 AM செவ்வாய் வெள்ளிக்கிழமை 2 - 3 AM சூரியன் வெள்ளிக்கிழமை 3 - 4 AM சுக்கிரன் வெள்ளிக்கிழமை 4 - 5 AM புதன் வெள்ளிக்கிழமை 5 - 6 AM சந்திரன் சனிக்கிழமை 6 - 7 AM சனி சனிக்கிழமை 7 - 8 AM குரு சனிக்கிழமை 8 - 9 AM செவ்வாய் சனிக்கிழமை 9 - 10 AM சூரியன் சனிக்கிழமை 10 - 11 AM சுக்கிரன் சனிக்கிழமை 11 - 12 AM புதன் சனிக்கிழமை 12 - 1 PM சந்திரன் சனிக்கிழமை 1 - 2 PM சனி சனிக்கிழமை 2 - 3 PM குரு சனிக்கிழமை 3 - 4 PM செவ்வாய் சனிக்கிழமை 4 - 5 PM சூரியன் சனிக்கிழமை 5 - 6 PM சுக்கிரன் சனிக்கிழமை 6 - 7 PM புதன் சனிக்கிழமை 7 - 8 PM சந்திரன் சனிக்கிழமை 8 - 9 PM சனி சனிக்கிழமை 9 - 10 PM குரு சனிக்கிழமை 10 - 11 PM செவ்வாய் சனிக்கிழமை 11 - 12 PM சூரியன் சனிக்கிழமை 12 - 1 AM சுக்கிரன் சனிக்கிழமை 1 - 2 AM புதன் சனிக்கிழமை 2 - 3 AM சந்திரன் சனிக்கிழமை 3 - 4 AM சனி சனிக்கிழமை 4 - 5 AM குரு சனிக்கிழமை 5 - 6 AM செவ்வாய்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment