🌹🌹🌹#திருமந்திரம் #உணர்த்தும் #யோகநெறி🌹🌹🌹



 வடமொழியில் 'சாங்கியம்' என்னும் நூல் யோகத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது. தமிழில் திருமந்திரம் அடிப்படை நூலாகக் காட்சியளிக்கிறது.


யோகம் எனும் சொல் 'ஒன்றாகக் கட்டுதல்' அல்லது ‘ஒன்று சேர்த்தல்' என்னும் பொருள் கொண்டது. இருக்கு வேதம் ‘ஒன்றுதல்', 'அடங்குதல்', 'புலன்களை வெல்லுதல்' என்னும் பொருள்களைத் தருகிறது. பக்தியுடன் செயல்களை அர்ப்பணித்தலே தெரிவிக்கிறது உபநிடதம்.


ஓம்..


முதன்முதலாகத் தமிழில் யோகத்தை விரிவாக விளக்கிக் கூறியவர் திருமூலர் ஆவார். திருமந்திரத்தின் 'மூன்றாம் தந்திர'த்தில் அட்டாங்க யோகத்தை விளக்கும் திருமூலர், கேசரி யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை, சந்திர யோகம் முதலான பிற யோகங்களையும் நன்கு தெளிவாக்குகிறார்.


‘மந்திர யோகம்' என்பதனை 'நான்காம் தந்திர'த்தில் குறிப்பிடுகிறார்.


இங்கு குறிப்பிட்ட எட்டு வகை யோகங்களையும் 'அகத்தலம்' என்று வழங்குதலுமுண்டு. அட்டாங்க யோகத்தை 'பிரைச்சதம்' என்று திருமூலர் குறிப்பதோடு கட்டுப்படுத்தப்பட்ட மூச்சுக்காற்றை கடிவாளமிட்ட பரிக்கு இணையானதாகக் கூறுகிறார்.


யோகப் பயிற்சியால் ஆற்றல்கள் பலவற்றை ஞானிகள் பெற்று சிறந்து விளங்குகின்றனர். 'யோகப் பயிற்சியில் வல்லவர்கள் அண்டத்தில் உள்ள அனைத்தையும் பிண்டத்தில் காண்பர். பேரண்டத்தை இயக்கும் சக்திகளின் உருவமாக தெய்வங்களை யோகியர் தம் உடலிலேயே காண்பர். ' நெற்றியில் சதாசிவத்தையும், கழுத்திலே மகேசுவரனையும், நெஞ்சிலே உருத்திரனையும், உந்தியில் விஷ்ணுவையும், மூலத்தில் பிரம்மனையும் காணும் ஆற்றல் மிக்கவர்கள் யோகியர்.


இயமம் என்பது தீயனவற்றைச் செய்யாது ஒழுகுதல் ஆகும். புலன் அடக்கமே தீயன விலக்கலுக்கு வழியாகும்.


ஓம்..


எட்டுத்திசையிலும் மழை பொழிந்தபோதும் தீயன விலக்கல் வேண்டும். பிறர்க்குத் தீங்கு செய்யாமலும் பிறரைத் துன்புறுத்தாமலும் வாழ்வதே இயமம்.


திருமூலர் இயம ஒழுக்கங்களாகப் பதினொன்றைச் சுட்டிப் பேசுகிறார்.


'கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன் 


நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய


 வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் 


இல்லான் நியமத்திடை நின்றானே'


என்பது திருமந்திரம் ஆகும்.


நியமமாவது நல்லனவற்றையே செய்து ஒழுகுத லாகும். நியமந்தான் கடைப்பிடிக்க வேண்டியவை என பத்து குணங்களைச் சுட்டுகிறார் திருமூலர்.


'தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறைசெவ்வை


வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை 


காமம் களவு கொலையெனக் காண்பவை


 நேமிஈ ரைந்து நியமத்தனாமே'


ஆதியாகவும் வேதத்தின் முடிவாகவும் பேரொளிய னாகவும், பராசக்தியைத் தன் உடலில் பாதியுள் வைத்திருப்போனாகவும் உள்ள சிவனின் உண்மை உணர்ந்தோர் நீதியுணர்ந்த நியமத்தார் ஆவர். நியம நெறிகளில் சிவனை உணர்தல் தலையாயதாகும்.


நியம நெறியில் நிற்பவன் மேற்கண்ட பத்து வகையானவற்றைக் கடைப்பிடித்ததோடு அமையாது தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டொழுகி சிவ பூஜைகளையும் செய்தல் வேண்டும் என்பர் திருமூலர்.


ஓம்..


ஆசனம் என்பது இருக்கை. யோசும் புரிவதற்கு முன் இருக்கவேண்டிய ஆசனம் முறை பற்றியும், அதனால் உண்டாகும் பயன்பற்றியும் திருமூலர் ஆறு பாடல்களில் குறிப்பிடுகிறார்.


திருமூலர் எட்டு ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடு கிறார். இறுதியில்,


‘எட்டெட்டுப் பத்தொடு நூறுபல ஆசனமே' என்று முடிக்கிறார்.


சுவத்திகாசனம்


முழந்தாளுக்கும் தொடைக்கும் நடுவில் இரண்டு பாதங்களையும் கீழே வைத்து உடல் நிமிர்ந்து உட்கார்தல், இதனைச் சுகாசனம் என்றும் வழங்குவர்.


 'சுவத்திகம் எனும் சுகாசனத்தில் தங்கி இருப்பவன்


தலைவனுமாவான்' என்பார் திருமூலர்.


பத்மாசனம்


ஒரு பக்கம் அணைந்த காலைத் தொடையின் மேல் ஏறும்படி செய்து இருத்தி, வலப்பக்கத் தொடையின் மேல் இடக்காலையும், இடப்பக்கத் தொடையின் மேல் வலக்காலையும் வைத்து அழகாகக் கைகளை மலர்த்தி தொடைகளின் மேல் வைக்க பத்மாசனம் அமையும்.


பத்திராசனம்


வலக் காலை இடப்பக்கத் தொடையின் மேல் விளங்கும்படி வைத்து அருமையான முழங்கால்களின்மேல் கைகளை நீட்டி, தளர்கின்ற உடம்பை செம்மை யாக இருத்தினால் தோன்றுவது பத்திராசனம் ஆகும்.


குக்குட ஆசனம்


குக்குடம் என்பது கோழி. இவ்வாசனம் கோழி போன்று இருத்தலால் குக்குடாசனம் எனப் பெயர் பெற்றது. பாதங்கள் இரண்டையும் தொடையின் மேல் மாறி ஏற்றி முக்கி உடம்பை முழங்கால் வரை தூக்கி நிறுத்தி உடம்பின் பாரம் கைகளில் தாங்குவதற்கான சமநிலை தெரிந்து அசையாமலிருத்தல் குக்குடாசன மாகும்.


சிங்காசனம்


சிங்காசனமானது பாத நுனிகளைப் பூமியில் ஊன்றியிருந்து முழங்கால்களில் கைகளை நீட்டி வாயைத் திறந்துகொண்டு புருவ நடுவைப் பார்த்திருப்பது. கேசரி முத்திரையில் நாக்கை மடித்து உள் நாக்குப் பகுதியில் செலுத்தியிருப்பதால் வாய் மூடாதிருக்கும். இவ்வாசனம் சிங்கம் போன்றிருத்தலால் சிங்காசனம் எனப்படும்.


கோமுகாசனம்


இடப்பக்கம் பின்பாகத்தில் வலக்கால் பரட்டி னையும், வலப்பக்கம் பின்பாகத்தில் இடக்கால் பரட்டினையும் சேர்க்க அமைவதால் கோமுகாசனம் உண்டாகும். இது பசுவின் முகம் போன்றிருத்தலின் இப்பெயர் கொண்டது.


ஓம்..


வீராசனம்


வலப்பக்கத்தொடையின் மேல் இடக்கால் பரட்டினைச் சேர்த்து இறுமாந்திருத்தல் வீராசனமாகும்.


சுகாசனம்


சுகாசனமாவது சாதகன் சுகமாக அமர்ந்து இருத்த


லாகும்.


பிராணாயாமம்


பிராணாயாமம் என்பது மூச்சினைக் கட்டுப் படுத்தல் ஆகும். இதனைப் பதினான்கு பாடல்களில் விளக்குகிறார் திருமூலர். ஐம்புலன்களுக்கும் நாயகனான ஆன்மா சுவாசமாகிய குதிரையென்னும் மூச்சினைக் கட்டுப்படுத்துவதனால் பிராணசெயம் ஏற்படும். இதற்கு இறையருள் தேவை.


இப்பயிற்சியால் உடற்சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். திருமூலர் 'வேந்தன் கடனும்', எனும் தலைப்பின் கீழும் சமுதாயத்தில் கள்ளுண்போரைத் தண்டித்துப் பிராணாயாமம் பயிற்ற வேண்டும். என்கிறார்.


பிரத்தியாகாரம்


பிரத்தியாகாரம் என்பது புலனொடுக்கத்தைக் குறிக்கின்றது.


அட்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்பன பூர்வ பட்சம் ஆகும்.


ஓம்..


பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன உத்தர பட்சம் எனப்படும்.


பொறிகளைப் புற உலகப் பொருட்களிலிருந்துதுண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன்நோக்கம்.


குண்டலினியின் வெளிப்புற உட்புற இடத்தினை திருமந்திரப் பாடல் விளக்குகிறது.


'எருவிடும் வாசற் இரு விரன் மேலே


 கருவிடும் வாசற் கிருவிரற் கீழே


 உருவிடும் சோதியை உள்க வல்லார்க்கு


கருவிடுஞ் சோதி கலந்து நின்றானே'!


இவ்வாறு பிரத்தியாகாரத்தில் மனதை வைத்து இறைச் சிந்தனையுடன் இருப்பின் ஒவ்வோர் ஆதாரத் திலும் அதற்குரிய ஒளி கிட்டும். இச்சிவ ஒளியின் துணையால் சாதகன் இருந்த இடத்திலேயே உலகைக் காண்பான் என்கிறது திருமந்திரம். சிவ ஒளி கண்ட சாதகனைத் தேவராக்கும் தன்மையுடையது இப்பிரத்தி யாகாரம்.


தாரணை


மனதைக் கட்டுப்படுத்துவது பிரத்தியாகாரம்.மனதை ஒருமுகப்படுத்துவது தாரணை. நிகழ்ச்சிகளைக் காணாது இருப்பது தாரணை. அவனுக்கு 'பிறவியின் வழியை அடைக்கும் சாதனமாக இருப்பது தாரணை' என்கிறார் திருமூலர்.


ஓம்..


இப்பயிற்சியற்றவர்களின் வாழ்நாள் வீணாளாகும். சகஸ்ரதளமாகிய செப்பினைத் திறக்காதவர்கள் கோழைகளாவர். இப் பயிற்சியினால் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தங்கினால் கன்மேந்திரியங்கள் செயலற்றுப் போகும். இப்பயிற்சி இல்லாதவர் இடிந்து விழும் ஆற்றங்கரை போன்றவர் ஆவார்.


பஞ்ச பூதங்களின் சூட்சும நிலை சத்த, பரிசு, ரூப, ரசகந்தம் ஆகிய தன்மாத்திரைகளாகும். இவ்வைந்திலும் சூக்குமம் சத்தமாகும். இஃது ஆகாயக்கூறு. இந்த ஆகாயத்தில் உண்டான நாதத்தில் அந்தக் கரணங்கள் பொருந்தினால் மனம் எண்ணுவதையும், புத்தி நிச்சயம் செய்வதையும் விட்டு நிற்கும். சித்தம் ஆணவத்துடன் பொருந்தும். தத்பரம் என்ற உயர்ந்த பொருளோடு மனம் சென்றபோது சித்தமும் இல்லை, ஆணவமும் இல்லை. எஞ்சி நிற்பது தத் என்ற சிவமும், பரம் என்ற ஆன்மாவுமே ஆகும். இந்நிலையை அடைந்தவரே தாரணையை அடைந்தவர் ஆவார்.


தியானம்


முதிர்ந்த நிலை தியானம்


தாரணையின் எனப்படும். தியானம் தாரணையின் அடுத்த படிநிலை. தியான நிலையில் உணர்வுகள் ஆன்மீக மயமாய் இருக்கும். தூய அறிவுச் சுடராய் விளங்கும். புலன்கள் காண ஒண்ணாத முழுமுதற் பொருளை தியான நிலை உணர்த்துகின்றது.


ஓம்..


உருவைக் கண்டு தியானிப்பது 'சகுணத் தியானம்' எனப்படும். இத்தியானம் அருவத் தியானமான 'நிர்க் குணத்தியானம்’ என்பதற்கும் வழிவகுக்கும்.


இதனைத் திருமூலர்,


 'உருவாய் சத்தி பரத்தியானம் உன்னும்


குருவார் சிவத் தியானம் யோகத்தின் கூறே' 


எனும் பகுதியில் உரைக்கிறார்.


ஊர்த்துவமுகமாய் மேலே செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைச் சக்கரத்துக்கு இரண்டு விறற்கிடை கீழேயுள்ள அநாகதச் சக்கரத்தில் கடல் முழக்கம் போன்று பொங்கி எழுகின்ற ஒலியினைத் தியானிக்க வல்லவர்கள் உடம்புக்குரியவனாகிய ஆன்மாவை அறிந்தவர்கள் ஆவர். ஆன்மாவை உணர்ந்து முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கியவர்கள் சிவனோடு ஒன்றாவர்.


சமாதி


உயிர் தன் மலம் நீங்கி தத்துவங்களை நீக்கி இறைவனோடு சமம் ஆதலே சமாதியாகும்.


ஒளியும் ஒலியும் சிரசின்மேல் சகஸ்ரதளத்தில் மிகுந்து விளங்கினால் யோகமான சமாதியில் சீவன் பொருந்தியிருக்கும். நினைத்ததைச் செய்யும் மனம் உள்ள விடத்துப் பிராணவாயுவும் உண்டு. மனம் நினைக்க வில்லையெனில் வாயுவும் அடங்கும். வாயு அடங்கிய நிலையில் மனத்திற்கு சமாதி கிடைக்கும். மனமாகிய கயிற்றைக் கொண்டு பிராணனைக் கட்டுதல் வேண்டும்.


ஓம்..


யோகியர் உலக நாட்டம் விட்டு அகநாட்டத்தில் பொருந்தியிருப்பர்' என்று திருமூலர் கூறுவார்.


திருமூலர் குண்டலினியின் வடிவம் பற்றி ஒரு பாடலில் விளக்குகிறார். அது நான்கு இதழோடு கூடிய மூலாதாரத்திலுள்ள முக்கோண வடிவுள்ளது. இக்குண்ட லினி அபானனின் செயல் கெடுத்துப் பிராணனோடு சேர்ந்து மூக்குத்துளைகள் வழி புகுந்து பிரமரந்திரம் செல்லும். அவ்வாறு சென்று இறைவனைச் சேருவதே சாந்தம் பொருந்திய 'சமாதி' யாகும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog