📢 நான்கு மோட்ச வாயில்கள் 📱 ☎ 📻 மோட்சம் என்றால் என்ன? நம் கலாச்சாரத்தில் முக்தி, மோட்சம், என்ற வார்த்தைகள் அடிக்கடி ஒலிப்பது வழக்கம். "மோட்சம் என்றால் என்ன?" - இந்தக் கேள்வியை ரமண மகாிஷிடம் கேட்டபோது... ரமண மகாிஷி : மோட்சம் என்றால் விடுதலை, அனைத்திலிருந்தும் விடுதலை, பிறப்பு-இறப்பில் இருந்தே விடுதலை. இதுதான் எல்லா மதங்களின் குறிக்கோளும் கூட - என்ன ஒன்று, இது நிர்வாணா (அ) மரணம் (அ) மோட்சம் என்று வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. விடுதலை பெறாமல் வாழ்க்கை முழுமையடையாது. உங்களுக்குள் முழுமையான விடுதலை ஏற்படாவிட்டால், உங்கள் வாழ்க்கை முழுமையாகாது. விடுதலைதான் உச்சபட்ச இலக்கு. எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது. மோட்சம் என்பது என்னவென்று நான் உங்களுக்கு சொல்லிவிட்டால், பிறகு அதைத் தேட நீங்கள் விரும்பமாட்டீர்கள். மோட்சம் என்றால் படைப்பில் இருந்து விடுதலை, உங்களிடமிருந்து விடுதலை, ஏன் கடவுளிடமிருந்தும் கூட விடுதலை பெற்றுவ...