📕 📣 📚 வால்மீகா்( சூத்திர ஞானம் )🍓 🍉🔔

                                                வால்மீகா்

                                       
(சூத்திர ஞானம் )


பொருளுரை :

இருளாகவும், ஒளியாகவும்  விளங்குகின்ற  சிவபெருமானின்

திருவடிகளை வணங்கி  எழுத்தின்  விவரத்தை விாிவாகக்  கூறுவேன்.


உருவம்  இல்லாமலும்,  உருவமாகவும், அருவுருவாகவும்

நிலைத்ததே எழுத்தாகும், அதுவே முதலாகவும், முடிவாகவும் உள்ளது.


மேன்மையான உருவமாக சூரியன், சந்திரன் ஆக நிலைத்த உருவம்

சிவம்,சக்தி,திருமாலின் உருவம் ஆகும்.தோன்றும் உருவமே  சிவசத்தி

வடிவமானது அது தோன்றியதிலும்,மறைவதிலும் மனதை வைப்பாயாக.


சிவம், சக்தி ~இவ்இரண்டின் இணைப்புதான் சிவலிங்கம்,  அது

இருளாகவும், ஒளியாகவும், உருவத்துடனும், உருவம் இன்றியும் நின்றது

அதுவே  முதன்மையும், முடிவும் ஆனது. ஆகாயமாகவும், உலக

உடலுமாகவும் விளங்குகின்றது,


சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பது சூாியன். இடக்

கண்ணாக இருப்பது சந்திரன்,சந்தியாக விளங்குவது  மூலாதாரம்,

அதிலிருந்தே சுவாசம் கிளம்புகின்றது, அந்தச்  சுவாசம் அதிலேயே

ஒடுங்குகிறது.


சூாியனை பிங்கலை எனவும், சந்திரனை இடகலை எனவும் கூறுவா்,

உள்ளிழுக்கும்  சுவாசமான பூரகத்திலும், போன  சுவாசமான  ரேசகத்திலும்

மனதை வைக்க  வேண்டும் என்பது கருத்தாகும்.


சொற்பொருள் :

போற்றி ~ வணங்கி;  அருவுருவாய் ~ உருவம் இன்றியும், உருவமாகியும்,

ஆதியந்தம் ~முதலும் முடிவும், ரவி ~சூாியன், மதி ~சந்திரன்,ரூபம்~வடிவம்,


🌍 🌎 🌏 சர்வம்சிவா்ப்பணம்....

Comments

Popular posts from this blog