🌍 🌎 🌏 காலப்பிரமாணம் 🌍 🌎 🌏
06 சுவாசங்கொண்டது ஒரு விநாடி;
60 விநாடி கொண்டது ஒரு நாழிகை;
60 நாழிகை கொண்டது ஒரு மானுஷ தினம்;
365 நாளும்; 15 நாழிகையும்; 31 விநாடியும்;
15தற்பரையுங் கொண்டது ஒரு மானுஷ வருஷம்.
அந்த வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருஷம்.
அந்தத் தேவ வருஷம் 12,000~க்குச் சாியாகிய
மானுஷவருஷம் 43,20,000 கொண்டது ஒரு மகாயுகம்.
தேவவருஷம் 4800க்குச் சாியாகிய மானுஷவருஷம்
17,28,000 கொண்டது கிருதயுகம்.
தேவவருஷம் 3600~க்குச் சாியாகிய மானுஷவருஷம்
12,96,000 கொண்டது கிரேதாயுகம்.
தேவவருஷம் 2400~க்குச் சாியாகிய மானுஷவருஷம்
8, 64, 000 கொண்டது துவாபரயுகம்.
தேவ வருஷம் 1200~க்குச் சாியாகிய மானுஷவருஷம்
4 , 32, 000 கொண்டது கலியுகம்.
இந்த நான்குங் கூடியது ஒரு மகாயுகம்.
இந்த மகாயுகம் 1000 கொண்டது பிரமாவுக்கு ஒரு பகல்.
அப்பகலிலே 14 மனுக்கள் அதிகாரம் செய்வாா்கள்.
இவ்விதம் 1000 மகாயுகம் பிரமாவுக்கு ஒரு பகலும்,
1000 மகாயுகம் ஒரு இரவுமாக 2000 மகாயுகங்
கொண்டது ஒரு தினம்.
அப்படி360 தினங்கொண்டது ஒர வருஷம்.
அப்படி 100 வருஷங்கொண்டது பிரமாவுடைய ஆயுள்.
இதுவரை ஆறு மனுக்களின் காலங்கழிய ஏழாவது
வைவஸ்வதமனுவின் காலம் ஆரம்பித்து அதில் 27 மகா
யுகங் கழித்து 28~வது மகாயுகத்திலே கிருதத் திரேதத்
துவாபரம் என்னும் மூன்றுயுகமுங் கழிந்தன இப்போது
கலியுகம் ஆரம்பித்து அதில் 5010~ம் வருஷத்தில், பிரப
வாதி 42~வது கீலகவருஷத்தில் இந்த நூலை இயற்றி
அச்சிட்டேன்.
சதுா்யுகப் பிரமாணம்
கிருதயுகம் ~ 1728000 ளூ
திரேதாயுகம் ~1296000 ளூ
துவாபரயுகம் ~ 864000 ளூ
கலியுகம் ~ 432000 ளூ
இந்த அறிய தகவல்:
யாழ்ப்பாணம் ஜோதிஷா்
வி.சபாபதி ஐயா் அவா்கள்
சமா்ப்பணம்
🌍 🌎 🌏 பிரகதீஸ்வரர் 🌍 🌎 🌏
Comments
Post a Comment