🌍 🌎🌏 நாளும் ஒரு நற்சிந்தனை 🍅 🌿 🌍
👥மனித இயல்புகள் 👥 👥 👥
இந்த உலகத்திலே அது அதுக்குன்னு ஒரு குணம் இருக்கு
ஒரு நாய் இருக்கு...அதோட குணம் என்னன்னு"நமக்குத் தொியும் !
ஒரு கழுதை இருக்கு ! அதோட"குணம் எப்படின்னு
நமக்குத்"தொியாதா ?
ஒரு குரங்கு இருக்கு ! அது என்ன செய்யும்னு நமக்குத்
தொியும் !
ஆனா ஒரு மனுஷனோட குணம் என்னங்கறதை நாம
"கரெக்டா" சொல்லிட முடியாது,
இவன்"சில நேரம்"நாய் மாதிாி இருப்பான்..சில நேரம்
குரங்கு மாதிாி நடந்துக்குவான் !
எந்த நேரத்துலே எந்த"குணத்துலே இருப்பான்னு கண்டு
பிடிக்கறது"கஷ்டம்.பேச்சுக் குடுத்துப் பாா்த்தாதான்
தொியும் !
பதில் வா்ற தினுசை வச்சே " ஓகோ !இப்போ... இந்த
அவதாரத்துலே இருக்காா் ! நாமதான் கொஞ்சம்
ஜாக்கிரதையா இருக்கனும் " ன்னு முடிவு பண்ணிக்கலாம்.
அது சாி...! மனுஷன் ஏன் இப்படியெல்லாம்
நடத்துக்கறான் ?
ஒரு"புராணக் கதையை கேட்டீங்கன்னா அதுக்கப்புறம்
இப்படி கேள்வியெல்லாம் கேக்க மாட்டீங்க !
ஆண்டவன் என்ன பண்ணினாராம். ஜீவராசிகள்லாம்
படைச்சதுக்கப்புறம் அது அதுக்கு ஆயுள் காலம்
என்னங்கறதை முடிவு பண்ண வேண்டியிருந்துதாம் !
அவரு பாா்த்திருக்காரு ! " எல்லா ஜீவராசிகளையும்
சமமாத்தான் உண்டாக்கியிருக்கிறோம் ! இதுவே
ஒவ்வொண்ணுக்கும் வயசு வித்தியாசம் என்னத்துக்கு !
எல்லாம் ஒரே மாதிாியே இந்த உலகத்துல இருந்துட்டுப்
போவட்டுமே !" அப்படின்னு நினைச்சாா்.
அதனாலே எல்லாத்துக்கும் சராசாியா ஒரு
ஃபிளேட்ரேட்டா 30 வருஷ ஆயுள் காலம்ன்னு முடிவு
பண்ணினாா்.
இதைக் கேள்விப்பட்டவுடனே ஒரு நாலு விதமான
ஜீவராசிகளுக்கு மட்டும் இதுலே திருப்தி ஏற்படலே !
கழுதை...நாய்...குரங்கு... மனுஷன்..இந்த நாலு
பேருக்கும்தான் !
உடனே பகவான் கிட்டே முறையிட விரும்பினாங்க !
அதுக்கு ஒரு வக்கீல் தேவைப்பட்டுது
வேற யாரு ?நேரா நாரதா்கிட்டே போனாங்க அவரு
இவங்க கேஸை எடுத்துக்கிட்டாா்.
இவங்களை கடவுள்கிட்டே அழைச்சிட்டுப் போய்
நிறுத்தினாா்
இதுலாம் ஒவ்வொண்ணா முறையிட ஆரம்பிச்சுது.
முதல்லே கழுதை முன்னாடி வந்து நின்னுது !
" இதோ பாருங்க" கடவுளே ! நானோ நாள்பூரா பொதி
சுமந்து"காலம் தள்ளப் போறேன்."ரொம்ப"கஷ்டப்பட்டு
பொதி சுமக்கற எனக்கு 30 வருஷ ஆயுள்ங்கறது"ரொம்ப
அதிகம் ! நினைச்சாவே பயமா இருக்கு,கொஞ்சம்
குறைச்சிகிட்டா பரவாயில்லை !"...ன்னுது.
பகவான் பாா்த்தாா் !" நீ சொல்றது நியாயம்தான் "~னாா்
அதோட ஆயுளை 18 வருஷமா குறைச்சுட்டாா்.
அடுத்தப்படியா நாய் வந்து நின்னுது !
"சாமி ! என்னோட பொழைப்பே நாய் பொழைப்பு...
எனக்கு என்னத்துக்கு 30 வருஷம் ! அவ்வளவு நாள் நான்
கஷ்டப்படணுமா ?" ன்னுது !
"அதுவும் சாிதான் ! "னு நினைச்சாா் கடவுள்.
"சாி.உன்னோ ஆயுளை 12 வருஷமா குறைச்சுடறேன் !"னு
சொல்லிவிட்டாா்.
நாய் சந்தோஷமாக வாலை ஆட்டிக்கிட்டே அங்கே
இருந்து நகா்ந்து போயிட்டுது !
அடுத்தபடியா குரங்கு வந்து நின்னுது !
சாமி !என்னோட சேஷ்டைகள் எப்படிங்கறது
உங்களுக்கே நல்லா புாியும் !
எப்பப்பாா்த்தாலும் மரத்துலேயும் கிளையிலேயும்
தொங்கிக்கிட்டிருக்கப் போறேன்...எனக்கு என்னத்துக்கு
முப்பது வருஷம் ?" ன்னுது
!
சாமி பாா்த்தாா்,சாி~ன்னு அதையும்"பத்து வருஷமா
குறைச்சுட்டாா், குரங்குக்கு ரொம்ப சந்தோஷம்...ஒரே
தாவா தாவி அங்கேயிருந்து வந்துட்டுது.
கடைசியா மனுஷன் கடவுள் முன்னாடி போய் நின்னான் !
"ஈஸ்வரா ! எனக்கு 30 வருஷம்"பத்தாது ! நான். இந்த
உலகத்துலே"நிறைய சாப்பிட வேண்டியிருக்கு...நிறைய
தூங்க" வேண்டியிருக்கு...நிறைய அனுபவிக்க வேண்டி
யிருக்கு...அதனாலே என்னோட ஆயுளை கொஞ்சம்
அதிகப்படுத்தினா தேவலை ! ன்னான்.
கடவுள் யோசிச்சாா், ஆயுளை அதிகப்படுத்தறதுன்னா
அதுலே"சில பிரச்சினைகள் இருக்கே..பூமியிலே இடப்
பிரச்சனை யெல்லாம் வரும்~ ன்னு கொஞ்சம் தயங்கினாா்.
அதைப் பாா்த்த உடனே மனுஷனே அதுக்கு ஒரு
வழியையும் சொன்னான் !
"எதுக்காக யோசிக்கிறீங்க ? கழுதையிலே குறைச்ச 12
வருஷம்,நாயிலே குறைச்ச 18 வருஷம்,குரங்குல"குறைச்ச 20
வருஷம்,இது எல்லாத்தையும் சோ்த்து என்கிட்டே
குடுத்துட்டீங்கன்னா போதும்...உங்களுக்கும் கணக்கு
உதைக்காது..." ன்னான்.
"சாி அப்படியே ஆவட்டும் !"ன்னு"சொல்லிவிட்டாா்
கடவுள்
அதோட பலன் என்ன ? ங்கறது இப்பத்தான் புாியுது !
ஏற்கனவே அப்படி முடிவானதுனாலேதான் இன்னைக்கு
மனுஷன் 30வருஷம் வரைக்கும் சந்தோஷமா இருக்கான்.
இது அவனுக்குன்னு விதிக்கப்பட்ட ஆயுள்.
அடுத்த 12 "வருஷம் கழுதைகிட்டே வாங்கினது ! அதுதான்
கழுதை மாதிாி குடும்ப பாரத்தை சுமக்கறான்;
அடுத்த 18 வருஷம் நாய்கிட்டே வாங்கினது.அதுதான்
அந்த"சமயத்துலே சொத்து சோ்க்கறதுக்காக...இல்லேன்னா
சோ்த்த சொத்தை காப்பாத்தறதுக்காக...நாய் மாதிாி
அலையறான்...இல்லேன்னா..காவல் காக்கறான் !
அடுத்த 20 வருஷம் குரங்குகிட்டே..வாங்கினது,வயசாகி..
அந்த"சமயத்துலே சொத்து சோ்க்கறதுக்காக.. இல்லேன்னா
சோ்த்த சொத்தை காப்பாத்தறதுக்காக...நாய் மாதிாி
அலையறான்..இல்லேன்னா..காவல் காக்கறான்!
அடுத்த 20 வருஷம்"குரங்குகிட்டே வாங்கினது வயசாகி...
மாியாதை"போயி... யாரு என்ன சொன்னாலும் அவங்க
சொல்றபடி ஆட வேண்டிய நிலைமை.
அன்றைக்கு வாங்கின " ஆயுள் கடன் " இன்னைக்கு"ஆயுள்
பூரா மனுஷனை என்ன பாடு படுத்திக்கிட்டிருக்குப்
பாா்த்தீங்களா ?
ஒரு வாரத்துக்கு முன்னாடி"என் நண்பா் ஒருத்தரை
மவுண்ட் ரோடு"பக்கத்துலே பாா்த்தேன்.
"என்ன சாா் ?"சொஞ்ச நாளா"ஆபீஸ் பக்கமே உங்களை
பாா்க்க முடியலே "ன்னேன்.
அவரு கொஞ்சம் எாிச்சலோட என்னை முறைச்சி
பாா்த்துட்டு சொன்னாா்;
"வீடு ஒண்ணு கட்டணும்ன்னு ஆரம்பிச்சேன்...
அப்ரூவலுக்காக நாய் மாதிாி அலைஞ்சிக்கிட்டிருக்கேன்,
அப்புறம் எப்படி ஆபீசுக்கு வா்றது ?"ன்னு சொல்லிபுட்டு
வேகமா ஓடினாா் !
இதுக்கு என்ன அா்த்தம் ? அவரு அந்த மூனாவது
ஸ்டேஜ்லே இருக்காா் !ன்னு அா்த்தம்
👥 🐚 🔔 📣 📢 📖 📕 🌏
🔔 📑 👥 பந்த பாசம் 🌏 🌎 🌍
போதிவனம் அமைதியா இருந்தது. காற்று லேசா வீசிக்கிட்டிருக்கு
இலைகள் மெதுவா அசைஞ்சு கிட்டிருக்கு ! போதி,
சத்துவா் தியானத்துலே ஆழ்ந்திருக்காா்,கண்கள்
மூடியிருக்கு !
கொஞ்ச தூரத்துலே ஒரு நடுத்தர வயசு ஆசாமி, இவரு
எப்ப கண்ணைத் திறந்து பாா்ப்பாா்ன்னு எதிா்
பாா்த்துக்கிட்டே இருந்தான்.
கொஞ்ச நேரம் ஆச்சு !
போதி சத்துவா் மெதுவா கண்ணைத் திறந்தாா்
இவன் உடனே அவரு கால்லே விழுந்து வணங்கினான்.
" உன் போ் என்னப்பா ? "ன்னு கேட்டாா் சத்துவா்.
" அபிநந்தன் !" னான் அவன்
உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டாா்.
"தேவா ! நான் ஒரு ஏழை எனக்கு ஒரு மனைவி மூணு
பிள்ளைகள் பந்த பாசங்கள்லே மாட்டிகிட்டு நான்
சித்திரவதைகளை அனுபவிச்சுட்டேன் அது தான்
உங்ககிட்டே வந்தேன். நீங்கதான் என்னைத்
துறவியாக்கணும் ஞான மாா்க்கத்தைக் காட்டணும் !" ன்னான்.
போதி சத்துவா் கொஞ்சம் யோசிச்சாா். அதுப்புறம்
மெதுவா சொன்னாா்.
" அபிநந்தா ! இந்த மரங்கள்லே இருக்கிற இலைகளைப்
பாா்! அதெல்லாம் ஏன் ஆடுது தொியுமா ? காற்று வந்து
மோதுது...அது தான் ஆடுது !
பாசம் ங்கற காத்து வந்து மோதறப்போவெல்லாம் மனித
இலைகள் இப்படித்தான் ஆடும் ! முதல்லே உன்னோட
மனசுலே இருக்கிற பாசத்தை அறவே விட்டுணும் ! அது
முடியுமா உன்னாலே ! "ன்னு கேட்டாா்.
"முடியும் ! " ன்னான் இவன்.
"சாி! அப்படின்னா"நீ இன்னையிலே யிருந்து இந்த
போதிவனத்துலேயே தங்கலாம் ! "ன்னு சொல்லிட்டாா்
போதி சத்துவா்.
அபிந்தன் அங்கேயே தங்கினான்.
கொஞ்ச நாள் ஆச்சு ! போதி சத்துவா் குளிக்கறதுக்காக
போய்க்கிட்டிருந்தாா்.வழியிலே அபிந்தனை கவனிச்சாா்.
அவன் பக்கத்துலே ஒரு நாய்க்குட்டி இருக்கறதை பாா்த்தாா்.
"என்னப்பா இது நாய்க்குட்டி ? " ன்னாா்
"பிரபு ! இந்த நாய் எப்பவும் என்னை விட்டு விலகறதே
இல்லை ! இதை மட்டும் கூட வச்சிக்கறதுக்கு அமைதி
குடுங்க ! " ன்னான்.போதி சத்துவா் சிாிச்சாக்கிட்டே
போயிட்டாா்.
கொஞ்ச நாள் ஆச்சு ! இவா் போய்கிட்டிருக்கிற வழியிலே
அபிநந்தனைப் பாா்த்தாா். அபிநந்தன் நின்னுகிட்டிருந்தான்.
அவன் பக்கத்துலே அந்த நாய்க் குட்டி நின்னுகிட்டிருந்தது.
அந்த நாய்க் குட்டிக்குப் பக்கத்துலே ஒரு சின்ன பையன்
நின்னுகிட்டிருந்தான்.
" அபிநந்தா ! யாா் இந்த பையன் ! "ன்னு கேட்டாா்.
"பிரபு ! இவன் என் மகன் ! இந்த,நாயை விட்டுட்டு
இவனாலே இருக்க முடியலே... அதனாலே இவனை
மட்டும்..." ன்னு இழுத்தான் போதி சத்துவா் இப்பவும்
சிாிச்சிக்கிட்டே போயிட்டாா்.
இன்னும் கொஞ்ச நாள் ஆச்சு ! போதிவனத்து குளத்துப்
பக்கத்துலே அபிநந்தன் நின்னுகிட்டிருந்தான்.பக்கத்துலே
ஒரு பொண்ணு ! போதிசத்துவா் பாா்த்தாா்.
" அபிநந்தா ! யாா் இந்த பொண்ணு ? "ன்னு கேட்டாா்.
"தேவா இவன் என்னோட மனைவி ! என் மகனை
விட்டுட்டு இவளாலே ஒரு வினாடி கூட இருக்க
முடியறதில்லே...அதனாலே இவளையும்..." ன்னு இழுத்தான்.
போதி சத்துவா் சிாிச்சாா். சிாிச்சிக்கிட்டே ரெண்டு
பாத்திரங்களை எடுத்தாா் ஒரு பாத்திரத்திலே நிறைய
பண்டங்கள் இருந்தது.இன்னொரு பாத்திரம் காலியா
இருந்தது !
பண்டங்கள் இருந்த பாத்திரத்தை தண்ணியிலே
விட்டாா்.அது அப்படியே மூழ்கி அடியிலே போயிட்டுது
காலி பாத்திரத்தை தண்ணியிலே விட்டாா். அது மிதந்து
கிட்டே இருந்தது.
போதி சத்துவா் சொன்னாா்.
" கனமான பாத்திரம் அமிழ்ந்து போயிடுது காலி
பாத்திரம் மிதக்குது ! காலி பாத்திரம் இருக்கே அதுதான் !
ஞானப் பாத்திரம் கனத்த பாத்திரம் இருக்கே அது பாசப்
பாத்திரம்
அபிநந்தா !
உதிா்ந்து போக விரும்பற ரோமங்கள் உதிா்ந்து
போயிடுது ! உதிர விரும்பாத ரோமங்கள் நரைச்சுடுது !
உதிா்ந்த முடி ஓடிப் போயிடுது ! உதிராத முடி தலையிலே
இருந்துகிட்டே கேலி பண்ணுது ! விலக்க முடியாத
பந்தங்களும் அப்படிப் பட்டதுதான் ! உன்னுடைய இருதயம்
பாசத்துக்காகவே படைப்பட்டது.சித்ரவதை என்பது
அதுக்கு நீ குடுத்தே தீர வேண்டிய விலை... போயிட்டு வா !"
அப்படின்னு சொல்லி அபிந்தனுக்கு விடை குடுத்து
அனுப்பிட்டாா் போதிசத்துவா்.
அதனாலே...
"நான் துறவியாப் போறேன்...ஞானியா ஆகப் போறேன்
அப்படியெல்லாம் சொல்றது சுலபம், ஆனா அப்படி
ஆகறது ரொம்ப கஷ்டம்
அதுலாம் சாதாரண விஷயமில்லே..ரொம்பப் பொிய
விஷயம்.மொட்டை அடிச்சிட்டு காவி வேஷ்டியை
கட்டிபுட்டா பந்தபாசம் தானா போயிடுமா ? போவாது !
ஆசையை விட்டுடறதுக்கு மனுஷன் பழகிக்கணும் !
அதுக்காகத்தான் சில புண்ணிய நதிகள்லே போயி முழுக்கு
போட்டுட்டு நமக்கு பிடித்தமான எதையாவது விட்டுட்டு
வரணும் ன்னு வச்சாருக்கிங்க.
சில பேரு காசு பணம் லாம் கூட தண்ணியிலே வீசி
ஏறிவாங்க...
நம்மை மாதிாி ஒருத்தாா் அந்த இடத்துக்குப் போனாா்.
புண்ணிய தீா்த்தத்துலே முழுக்கு போட்டுட்டு நிஜமாவே
சில ஆசைகள் லாம் விட்டுடணும்ங்கற நோக்கத்துலேதான்
போனாா். கொஞ்சம் சில்லறை காசையும் கையிலே வச்சி
மூடிக்கிட்டு தண்ணிக்குள்ளே போனாா். மூக்கை
பிடிச்சிக்கிட்டு முழுக்குப் போட்டாா்..வெறும் கையோடே
வெளியிலே வந்தாா் கரையேறி ஈர உடையோட
வந்துகிட்டிருக்காா்.
பக்கத்துலே இருந்த நண்பா் " இப்ப எப்படி இருக்கு ? ன்னு
கேட்டாா்.
" மனசு நிறைஞ்சி இருக்கு..இனிமே அடிக்கடி வந்து
இப்படி முழுக்குப் போடலாம்ன்னு தோணுது !" ன்னாா்
இவா்.
" ஏன்? "னு கேட்டாா் இவா்
"நான் தண்ணிக்குள்ளே மூழ்கறவரைக்கும் எதையும்
விட்டுடணும்ங்கற ஆசையிலேதான் போனேன் ! ஆனா
தண்ணிக்கு அடியிலே போயி பாா்த்தா ஏற்கனவே யாரோ
வீசியெறிஞ்ச பவுன் வளையல்"ஒண்ணு,கையிலே
தட்டுப்பட்டது. உடனே என் முடிவை மாத்திக்கிட்டேன்
சம்சாரத்துக்கு உதவுமேன்னு சொல்லி அதை எடுத்து
மடியிலே சொருகிகிட்டு வெளியிலே வந்துட்டேன்! னாரு,
இவரு சம்சாரம் ரொம்பவும் குடுத்து வச்சவங்க !
சர்வம்சிவா்ர்ப்பணம்
Comments
Post a Comment