🐚 🐚 🐚நோய் தீா்க்கும் சிவாலயங்கள் 🔔 🔔 🔔



தீராத நோய்களைத் தீா்க்கும் மருந்தீசா்

தேவா்களும், அசுரா்களும் அமிா்தம் பெறுவதற்காக, திருப்பாற்க
டலைக் கடைந்தனா், அப்போது மத்தாக நின்ற மந்தரமலை
சாியத் தொடங்கியது. ஆகையால் திருமால், " கச்சம் " என்ற ஆமை
உருவம் கொண்டு மலையைத் தாங்கினாா். அந்த மலையைத்"தாங்
குவதற்கான  வலிமையை  பெறுவதற்காக, சிவபெருமானை நோக்கி
திருமால் வழிபாடு செய்தாா். அந்தத் திருத்தலமே திருக்கச்சூா்
என்று  அழைக்கப்படுகிறது.

திருக்கச்சூாின்  மையப்பகுதியில் அமைந்திருக்கும் பொிய
கோவில் " ஆலக்கோவில் " என்று அழைக்கப்படுகிறது, விழுதுகள்
விடாத கல்லால மரம், தலவிருட்சமாக இருப்பதனால் இப்பெயா்
வந்துள்ளது.இந்த ஆலயத்தை தாழக்கோவில் என்றும் அழைக்கி
றாா்கள். இங்குள்ள இறைவன் " கச்சபேஸ்வரா் " என்று பெயா்
பெற்று விளங்குகிறாா். அம்பாள் திருநாமம் " அஞ்சனாட்சி "
என்பதாகும்.










சுந்தரருக்கு உணவளித்த ஈசன்

சிவ தல யாத்திரை மேற்கொண்டிருந்த சுந்தரமூா்த்தி சுவாமிகள், ஒரு,முறை
திருக்கழுக்  குன்றம் சென்று விட்டு. காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருக்கச்
சூா் திருத்தலத்திற்கு வந்து சோ்ந்தாா். நீண்ட தூர பயணக் களைப்போடு,
பசியும் சோ்ந்து சுந்தரரை வாட்டியது, அவா் கோவில் வளாகத்தில் அடியா
ளா்களுடன் சோ்ந்து ஒாிடத்தில் அமா்ந்தாா்.அவரது பசியை அறிந்த இறை
வன். முதியவா் வடிவம் கொண்டு சுந்தராிடம் வந்தாா்.


பின்னா் அவாிடம் " நீ பசியால் மிகவும் வாடியிருக்கிறாய்,கொஞ்ச நேரம்
இங்கேயே இரு. நான் உணவு கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு அங்
கிருந்து அகன்றாா் முதியவா் உருவில் வந்த இறைவன்.


ஊருக்குள் சென்ற இறைவன், கையில் ஒரு திருவோட்டை எந்திக்
கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் பெற்று, உணவு கொண்டு
வந்தாா், அதனை சுந்தரருக்குக் கொடுத்து பசியாற்றினாா், சுந்தரருடன்
இருந்த அடியாா்களும் உணவை உண்டு பசியாறினா், பின்னா் முதியவராக
இருந்த இறைவன் மறைந்தாா், வந்தது இறைவன் என்பதை அறிந்த சுந்த
ரா்,இறைவனின் அருளை எண்ணி வியந்தாா், பின்னா் இறைவனைப் பற்றி
பதிகம் பாடினாா், சுந்தரருக்காக இரந்த ("பிச்சை எடுத்து ) சிவபெருமான்.
" இரந்தீஸ்வரர் என்ற பெயாில் கோவிலுக்கு சற்று தூரத்திலும், சுந்தரருக்கு
விருந்து படைத்த சிவன், " விருந்திட்டீஸ்வரர் " என்ற பெயாில் ஆலயப் பிரகா
ரத்தில் தனிச் சன்னிதியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனா்.






இத்தல இறைவன் தியாகராஜா் என்றும் அழைக்கப்படுகிறாா்.
அமிா்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் வேண்டுகோளை
ஏற்று,இத்தல ஈசன் அமுத நடனம் ஆடினாராம்,ஆகையால்
இங்குள்ள இறைவனை அனைவரும் " அமுத தியாகா் "என்று செல்
லமாக அழைக்கின்றனா், ஆலயத்தின் தனி மண்டபத்தில் கிழக்கு
நோக்கியபடி தியாகராஜா், அம்பாள் மற்றும் முருகப்பெருமானு
டன் "சோமாஸ்கந்தராக " காட்சி தருகிறாா்.

இத்தலத்துக்கு வந்து சிவனருள் பெற்ற சுந்தரா்,தேவாரப்
பாடல்களைப் பாடியுள்ளாா், அவா் தனது ஐந்தாவது பதிகத்தில்






"மாலை மதியே மலைமைல் மருந்தே
மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக்  கழனிப் பழனக் கச்சூா்
ஆலக்கோயில் அம்மானே"

என்று குறிப்பிடுவதை வைத்துப் பாா்க்கும் போது, முற்காலத்தில்
நெல் வயல்களும், கரும்பு ஆலைகளும் செழித்த ஊராக இந்தத்
திருத்தலம் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.







மருந்தீசா்

சரி..." அது என்ன ? மலைமேல் மருந்து ! "என்று வினவிய போது
இங்கிருந்து மேற்கே சுமாா் 1கிலோமீட்டா் தொலைவில் மலைக்
கோவில் ஒன்று"இருப்பது"தொியவந்தது, பொிய"மலையோ,
குன்றோ அல்ல, கொஞ்சம் மேடிட்ட உயரமான பகுதி, அதன்
மேலும் இறைவன் குடி கொண்டிருக்காறாா். அவா்தான் " மருந்தீசா் "
எனப்படும் மகாதேவன். " ஒளடத கிாி" எனவும், " மருந்து மலை "
எனவும் புகழ் வீசிக் கொண்டிருக்கிறது, இந்த மலைக் கோவிலில்
உள்ள ஒளடத தீா்த்தம் சிறப்பு"பெற்றதாக விளங்குகிறது.







தெற்கு நோக்கிய"நுழைவு வாசல் வழியே சென்றால், மேற்குத்
திசை பாா்த்து மருந்தீசா் குடிகொண்டிருக்கிறாா், எதிரே"வாசல்
கிடையாது. ஆலக்கோவில் போலவே சவரும், அதில்,சாளரத்
துளைகளும் உள்ளன. அதன் நேரே பலிபீடமும், நந்தியும், கொடி
மரமும் இருக்கின்றன.







திருவேற்காடு

சென்னைக்கு அருகில் உள்ள திருஞானசம்பந்தாின் பாடல் பெற்ற
திருவேற்காடு வேதபுாஸ்வரா் கோவிலின் எதிாில் உள்ள வேத தீா்க்கும்
எனும், திருக்குளத்தில்"ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி பாலாம்பிகை சமேத
வேதபுாஸ்வரரைவணங்கினால் எல்லா நோய்களும் குறிப்பாக தோல்
நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை,இத்தலத்தில் வெள்வேல
மரங்களே வேத வடிவாய் தல விருட்சமாக இருப்பது சிறப்பு, மூா்க்க
நாயனாாின் அவதாரத்தலம் என்ற பெருமையும் உள்ளது, புகழ்பெற்ற
திருவேற்காடு கருமாாியம்மன்"கோவிலிருந்து"மேற்கே 1 கல்
தொலைவில் இச்சிவாலயம் அமைந்துள்ளது.







கோவிலைச் சுற்றி வலம் வரும்போது, நான்கு முகங்களுடன்
சண்டேசா் அமா்ந்துள்ளாா்,இந்தத் தோற்றம்"வேறு கோவில்களில்
இல்லை. இவரது"சன்னிதிக்கு"அருகே தலவிருட்சமான வோ்ப்பலா,
சுவாமியின்"கருவறை விமானத்தின் பின்புறம் கிளை விாித்து
நின்றாடுகிறது, சற்று,நடந்தால்"சிறிய தனிச் சன்னிதியில், நான்கு
கைகளுடன்"நின்ற கோலத்தில்"இருள்நீக்கி அம்மை வீற்றிருந்து
அருள்பாலிக்கிறாா்.








இவ்வாலயச் சிறப்புகளை அறிந்தபோது,இது நோய் தீா்க்கும்
மருந்துமலை எனவும், அபூா்வ மூலிகைகள் இந்த மலைமீது உள்ளன
எனவும், அகத்திய முனிவா் திருவான்மியூா், திருக்கச்சூா் போன்ற
தலங்களில் மருந்தீசராக எழுந்தருளியுள்ள இறைவனை தியானித்து
தான் மூலிகை வைத்தியம் கற்றாா் எனவும் கூறுகிறாா்கள்.




மூலிகை மலை

ஒரு முறை தேவேந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீா்க்க முடி
யாத நோய்"ஒன்று வந்தது, இதையடுத்து அவன், தன்னுடைய தேவ
மருத்துவா்களான அசுபதி, பசுபதியை அனுப்பி, பலை,அதிபலை
போன்ற மூலிகையை கொண்டுவரப் பணித்தான்.பல இடங்களில்
அலைந்து திாிந்து தேடியம் அந்த மூலிகைகள் கிடைக்கவில்லை.
இறுதியில் தேவ மருத்துவா்கள், இந்த மலைப் பகுதிக்கு வந்தனா்.
ஆனால் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்ட
தால், மூலிகைகளை அடையாளம் காண முடியாமல் அவா்கள்
அவதிப்பட்டனா், இதையடுத்து இத்தல அம்மை, இருளை நீக்கி
ஒளிகாட்டி அருளினாா், அதன் பின்னா் தேவ மருத்துவா்கள் தங்
களுக்குத் தேவையான,மூலிகையை பறித்துச்,சென்று இந்திரனின்
நோயைக் குணப்படுத்தினா்,




இருளை நீக்கி ஒளி காட்டியதால், இத்
தல அன்னை " இருள் நீக்கி அம்மை "
என்ற பெயரைப்"பெற்றாா்,இறைவனும்
மருந்தீசா்"எனப்பட்டாா்





பிராா்த்தனை

உடல் நலமில்லாதவா்கள்,
பவுா்ணமி நாளிலோ அல்லது வாரந்தோறும்
செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ
இத்தலம் வந்து, கிாிவலம் வருவது சிறப்பு தரும், கிாிவலம்
போது இங்கு வீசும் மூலிகைத் தென்றல் உடலையும், உள்ளத்தையும்
தழுவி நோயைக் குணப்படுத்துகிறது என்பது நம்பிக்கை, மேலும்
சுவாமியையும், அம்பாளையும் பிராா்த்தித்து விபூதி தாித்துக்
கொண்டால்,நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குண
மாகும் என்று கூறுப்படுகிறது,

கோவில் கொடிமரத்தடியில் உள்ள குழியில் இருக்கும், மண்ணே
மருந்தாக கொடுக்கப்படுகிறது, ஆம் ! பக்தா்கள் பலரும் அதனை
எடுத்து நெற்றியில் இட்டும், உடலில் பூசியும், வீட்டுக்கு எடுத்து
கொண்டும்  செல்கிறாா்கள்,

மலையே மருந்தாகவும், இறைவனே மருத்துவனாகவும் விளங்கும்
இந்தத் திருக்கோவில்,தினமும் காலை 8 மணிமுதல் பகல் 12 
மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்
திறந்திருக்கும்,






அமைவிடம்

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு
செல்லும் சாலையில் சிங்கப் பெருமாள் கோவில்
உள்ளது. இங்கிருந்து வடக்கே சுமாா் 2 கிலோமீட்டா்
தூரம் சென்றால்"திருக்கச்சூா் திருத்தலத்தை
அடையலாம்.

தொடா்பு எண் : 09445356399

மகாதேவா உங்கள் அருள் வேண்டும்




03  ~இதய நோய் தீர  ஏற்ற  திருக்கோவில்


இருதயாலீசுவரராக அருள் பொழியும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகரில் உள்ள இத்தல இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.













ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான்.







இதயத்தில் எழுப்பிய ஆலயம் :

ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது இஷ்ட தெய்வமான சிவபெருமானுக்கு, கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து மகிழ வேண்டும் என்பது தான் அந்த ஆசை. ஆனால் விதி வலியது அல்லவா? கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த நினைத்த பூசலாரோ, மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவர். தினமும் உணவுக்கே அல்லாடும் ஒருவர் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது?. அவரது இந்த எண்ணத்தைக் கேட்ட பலரும் எள்ளிநகையாடினார்கள். 

ஆனால் அந்த சிவபக்தர் மனம் சோர்ந்து போய்விடவில்லை. பணம்தானே கையில் இல்லை. மனம் இருக்கிறது. மனதிலேயே என் அன்புக்குரிய இறைவனுக்கு ஆலயம் எழுப்புகிறேன் என்றவர், ஒவ்வொரு நாளும் ஆலயத்தின் வடிவம் குறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்தார். அவரை மக்கள் அனைவரும் சிவ பித்தன் என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். கோவிலின் கருவறை, மண்டபங்கள், உள்சுற்று, வெளிச்சுற்று, மதில்சுவர் என்று தினம் தினம் உள்ளத்தினுள்ளே, சிவபெருமானுக்கான ஆலயத்தை அற்புதமாக எழுப்பினார். அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான தேதியையும் தன் மனதிலேயே குறித்து விட்டார்.







அப்போது காஞ்சியை ராசசிம்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் அந்தப் பகுதியில் சிவபெருமானுக்கு கலை நயத்தோடு கூடிய ஆலயம் ஒன்றைக் கட்டி முடித்து, பூசலார் தன் மனதில் குறித்து வைத்திருந்த தேதியிலேயே கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் பார்த்திருந்தான். விடிந்தால் கும்பாபிஷேகம் என்ற நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தூங்குவதற்காக புறப்பட்டான் ராசசிம்மன்.





கனவில் தோன்றிய ஈசன் :

அப்போது அவனது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நாளை நீ கட்டியிருக்கும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு என்னால் வர இயலாது. ஏனெனில் திருநின்றவூரில், பூசலார் என்ற என்னுடைய பக்தன் கட்டியிருக்கும் ஆலயத்தின் கும்பாபிஷேகமும் நாளை அதிகாலையில்தான் நடக்கிறது. நான் அங்குதான் எழுந்தருளப் போகிறேன்’ என்று கூறினார். கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். இறைவன் தனக்கு ஏதோ செய்தி சொல்வதாகவே கருதிய மன்னன், அந்த நள்ளிரவிலும், தன் பட்டத்து ராணி மற்றும் அமைச்சர்கள், காவலர்கள் புடைசூழ திருநின்றவூர் நோக்கி பயணப்பட்டான். அதிகாலைக்கு முன்பாகவே திருநின்றவூரை அடைந்து விட்டான்.

செல்லும் வழி முழுவதும் மன்னனுக்கு, பூசலார் கட்டியிருக்கும் ஆலயத்தைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. ‘நான் கட்டியிருப்பதை விட மிகப்பெரிய ஆலயமாக இருக்குமோ? கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடக்குமோ? அதனால்தான் இறைவன் என் இடத்திற்கு வருவதைக் காட்டிலும், இங்கு எழுந்தருளப்போகிறார் போலும். இறைவனே வருகிறார் என்றால் அந்த விழா வெகு சிறப்பாகத்தான் நடைபெற வேண்டும்’ என்று எண்ணியபடியே வந்தான்.









ஆனால் ஊருக்குள் நுழைந்த மன்னனுக்கும், அவனுடன் வந்தவர்களுக்கும், அப்படி ஒரு விழா நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இறைவனின் வாக்குப்படி இங்கு நடைபெறும் கும்பாபிஷேகம் பற்றி, ஊர் மக்களிடம் மன்னன் விசாரித்தான். ஆனால் ஊரில் உள்ளவர்களோ, ‘அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லையே’ என்றனர். மேலும் ‘பூசலார் என்று ஒருவர் பல நாட்களாக, உணவின்றி இலுப்பை மரத்தடியில் கண்மூடி அமர்ந்திருப்பதையும் தெரிவித்தனர்.





பூசலார் நெஞ்சில் இறைவன் :

மன்னன் பூசலார் இருந்த இடத்திற்கு விரைந்து சென்றான். அங்கு பூசலார், சிவபெருமானை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் முன்பாக மன்னனும், அவனுடன் வந்தவர்களும் கைகூப்பி நின்றனர். சிறிது நேரம் கழித்து விழிகளைத் திறந்த பூசலார், எதிரே அரசனும், அரசியும், அமைச்சரும் நிற்பதைக் கண்டார்.

மன்னன், ‘என் கனவில் தோன்றிய இறைவன் இங்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதாகவும், அங்கு எழுந்தருளப் போவதாகவும் கூறியிருந்தார். அந்த கும்பாபிஷேகத்தைக் காணவே நாங்கள் வந்தோம். ஆனால் இங்கு அதுபோல் விழா நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லையே’ என்றான் மன்னன்.

பூசலாரோ, ‘ஆலயம் கட்டப்பட்டிருப்பது உண்மைதான். அது என் இதயத்திற்குள் கட்டப்பட்டிருக்கிறது. அந்த ஆலயத்திற்குத்தான் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது’ என்று விளக்கம் அளித்தார்.





மன்னன், தானும் அந்த இதயக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை தரிசிக்க விரும்புவதாக தெரிவித்தார். உடனடியாக பூசலார் தனது இடது பக்க நெஞ்சைத் திறந்து காட்ட, அங்கே உள்ளம் பெரும் கோவிலாக, உத்தமர் சிவன் அதற்குள் இருப்பது போன்ற காட்சி தென்பட்டது. அரசனும் மற்றவர்களும் வியந்து போயினர். ‘எத்தனை உயர்ந்த பக்தி’ என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மன்னன், பூசலாரின் பாதம் பணிந்து வணங்கினான்.

பின்னர் பூசலார் இதயத்தில் எழுப்பிய ஆலயத்தைப் போலவே, அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான். அந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன், இருதயாலீஸ்வரர் என்று பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து மன்னன், தன் ஊருக்குத் திரும்பி தான் கட்டிய ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தினான் என்பது தல வரலாறு.






இதய நோய் :

உடலின் முக்கியமான உறுப்பு இதயம். இது சீராக இயங்கினால்தான் நாம் நல்லமுறையிலே நடமாட முடியும். இவ்வளவு ஏன்? இதயம் என்ற கைப்பிடியளவு உறுப்பு துடித்தால்தான் நாம் உயிர்வாழவே முடியும்.

அப்படிப்பட்ட இதயத்திற்கு எத்தனையோ நோய்கள் வந்து அதன் செயல்பாட்டை சீரழிக்குமானால் மனிதனுக்கு இதய நோய்களும் இறப்பும் தவிர்க்க முடியாதது ஆகும்.





அதனைத் தடுக்கவும், சிகிச்கை பெறவும் நவீன மருத்துவ உலகில் எத்தனையோ வழிகள் உண்டு. இருப்பினும் இறைவனை நம்பி வழிபடுவதால் மனதுக்கு அமைதியும் நம்பிக்கையும் கிடைப்பதால் உள்ளமும் உடலும், உடலை இயக்கும் இதயமும் சீராகும் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.

அந்த வகையில் இருதயாலீசுவரராக அருள் பொழியும் இத்தல இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.





திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகரில் உள்ள இத்திருக்கோவிலில் இதய நோய் உள்ளவர்கள் இறைவனை வழிபட்டு தீபம் ஏற்றி தனது சக்திக்கேற்ப அபிஷேகம், அர்ச்சனை செய்து வருகிறார்கள். திங்கட்கிழமை தோறும் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.




நடை திறந்திருக்கும் நேரம் : 7.30 மணி முதல்  12.30

மணி வரை.மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை.

தொடா்பு எண் : 09444164108





 🏮 💡 📷 05 ~ மன அழுத்தம் நீக்கும் மனத்துணை  நாதா் 📣📣📣

தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 128-வது கோவிலாக விளங்குகிறது திருவலிவலம் திருத்தலம்.


திருவாரூர் அருகே அமைந்துள்ளது திருவலிவலம் திருத்தலம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 128-வது கோவிலாக இது விளங்குகிறது. இந்த திருத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் புகழ்ந்து பாடியுள்ளனர். திருவலிவலத்துக்கு வடக்கே திருக்கோளிலி என்னும் திருக்குவளை, தெற்கே கைச்சின்னம் எனும் கச்சனம், கிழக்கே திருக்கன்றாப்பூர், மேற்கே திருநெல்லிக்காஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் சூழ்ந்திருப்பது தனிச் சிறப்பாகும்.



தல வரலாறு :

முன்னொரு காலத்தில் ஒழுக்கத்தில் சிறந்த ஒருவன் இருந்தான். அவன் முன்வினைப் பயன் காரணமாக சில பாவங்களைச் செய்தான். அதனால் அவன் அடுத்தப் பிறவியில் கரிக்குருவியாக பிறவி எடுக்க நேரிட்டது. மிகச் சிறியதாக இருந்த அந்தப் பறவையை, பெரிய பறவைகள் ஒன்றுசேர்ந்து தாக்கியதால் ரத்தம் வழிந்தது. காயம் அடைந்த அந்தக் குருவி, அங்கிருந்து நெடுதூரம் பறந்து ஒரு மரத்தில் போய் அமர்ந்தது. அந்த மரத்தின் கீழ் சிவனடியார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தன் சீடர்கள் சிலருக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

அந்த சிவனடியாரின் உபதேசங்களை கரிக்குருவியும் கேட்டுக்கொண்டிருந்தது. சிவனடியார் தன் சீடர்களிடம், ‘அன்பர்களே! சிவ தலங்களில் சிறந்தது மதுரை திருத் தலம். தீர்த்தங்களில் சிறந்தது, அந்த மதுரையம்பதியில் இருக்கும் பொற்றாமரைக் குளம். மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் இந்த உலகத்தில் வேறு இல்லை. எனவே வாழ்நாளில் ஒரு முறையேனும் மதுரை திருத்தலம் சென்று பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாத பெருமானை வழிபட்டு வர வேண்டும். அங்குள்ள சோம சுந்தரக் கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களைக் கொடுத்து அருள்வார்’ என்று கூறினார்.

சிவனடியாரின் உபதேசத்தைக் கேட்ட கரிக்குருவி, தானும் மதுரைக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவு செய்தது. அதன்படி அந்தக் கரிக்குருவி, மதுரையை அடைந்து சொக்கநாதர் கோவிலை வலம் வந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கியது. பின்னர் அங்குள்ள இறைவனை மனமுருக வழிபட்டது. மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தது, அந்தக் குருவி. அதன் வழிபாட்டைக் கண்டு சொக்கநாதர் மனமிளகினார். கரிக் குருவியின் முன்பாகத் தோன்றி அதற்கு, சில மந்திரங்களை உபதேசம் செய்தார். அதனால் கரிக்குருவி சிற்றறிவு நீங்கி, பேரறிவு பெற்றது.

ஞானம் பெற்ற கரிக்குருவி, ‘இறைவா! உங்களது கருணையால் நான் ஞானம் பெற்றவனானேன். இருந்தாலும் எனக்கு ஒரு குறை உள்ளது. மிகச் சிறிய பறவையான நான், மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகிறேன். பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன்’ என்று முறையிட்டது.

அதற்கு சிவபெருமான், ‘எல்லாப் பறவைகளையும் விட நீ வலிமையுடையவனாக மாறுவாய்’ என்று அருளினார். ஆனால் அந்தக் கரிக்குருவி, ‘சுவாமி! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் உள்ள அனைவரும் வலிமையுடன் இருக்கும் வரம் தந்தருள வேண்டும்’ என்று கேட்டது. இறைவனும் அப்படியே அருளினார். இதனால் அந்தக் கரிக்குருவி ‘வலியான்’ என்ற பெயரையும் பெற்றது. வரம் பெற்றகுருவி திருவலிவலம் திருத்தலத்திற்கு வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது. எனவே இந்த தலத்திற்கு ‘திருவலிவலம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.


ஆலய அமைப்பு :

மூன்று பக்கமும் நீர் நிறைந்த அகழியால் சூழப் பெற்ற இத்திருக்கோவிலில், பஞ்சமூர்த்திகள் உள்ளடக்கிய தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. ஆலயத்தின் இரண்டாவது பிரகாரம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோச்செங்கண் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், ‘மாடக்கோவில்’ வகையைச் சேர்ந்தது. பதினாறு படிகள் ஏறிச் சென்று பார்த்தால் மூன்று நிலை விமானத்தின் உள்ளே கருவறையில், சிவலிங்க ரூபமாக மூலவர் மனத்துணை நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை இதயக்கமலேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

‘மனத்துணையே என்றன் வாழ்முதலே’ என்று மாணிக்கவாசகர் புகழ்கிறார். ‘அன்பருக்கு இன்னருள் செய்துய்ய வலிவலத்துச் சொன்முடியே’ என்கிறார் ராமலிங்க வள்ளலார். அப்பரோ தனது பதிகத்தில் ‘மனத்துளானே’ என்று கூறுகிறார். சுந்தரரும், ‘நல்லுடையார் மனத் தெய்ப்பினில் வைப்பை நானூறு குறைஅளித் தருள் புரிவானை’ என்று இத்தல இறைவனை புகழ்ந்துரைக்கிறார்.

மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள் என்று எத்தனையோ நன்மை-தீமைகளை அனுபவிக்கிறார்கள். மனித மனதிற்கு துன்பம் வரும்போது மனம் கனமாகிறது. அந்த மன அழுத்தத்தால் ‘ரத்த அழுத்தம்’, ‘இதய நோய்கள்’, ‘மாரடைப்பு’ போன்றவை ஏற்படுகிறது. இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும்.



ஆம்! அனைத்தையும் இறைவன் திருவடியில் சமர்ப்பித்து ‘நீயே துணை’ என்று நம்பி வந்தால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகுகின்றன.

அந்தப் பெரும்பேற்றைத் தருபவர் தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர். மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கும் இத்தலத்தில் தீர்வு கிடைக்கின்றன என்கிறார்கள்.

‘பிடியதன் உருஉமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே’

என்று இந்தத் திருக்கோவில் நிருதி மூலையில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகருக்கு பாமாலை சூட்டுகிறார் திருஞானசம்பந்தர். தேவாரப் பண்ணிசைப்போர் புகழ்பெற்ற இத்திருப்பதிகத்தைப் பாடியே, மற்ற பண்களை இசைக்கிறார்கள் என்றால் இத்தலமும் அதில் எழுந்துள்ள விநாயகரும் எத்தகைய சிறப்புடையது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அடியவர்களின் துயர் களைய சிவசக்தியால் உருவாக்கப்பட்ட கண நாதர் இவர்.

இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில், ‘அமரர்கள் மதித்த சேவக வலிவலம் நகருறை பெருமானே’ என்று போற்றுகிறார்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிவலத்தில் அம்பிகை ‘மழையொண்கண்ணி’ என்ற பெயரில், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகை சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தவனத்தில் தலவிருட்சமான புன்னை மரம் காற்றில் அசைந்து இனிய மணம் பரப்புகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.



அமைவிடம் :

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழித்தடத்தில் கச்சனம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந் திருக்கிறது திருவலிவலம். திருநெல்லிக்கா ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஊர் இருக்கிறது.


தொடா்பு எண் : 04366 ~ 205636 ;   9585692814.



 📕 📖 📗 📒 📔 📑 💰 📚சர்வம்சிவா்ர்ப்பணம்  📓 📑 📘 📰💵


 📣 📢 📣 🔔 07 ~ வெண்குட்டம் போக்கும்  நடனேஸ்வரா்  🔔🔔🔔 🔔

ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது.





திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மருத நிலத்திற்கு உரிய இயல்புகளோடு உள்ளது தலையாலங்காடு என்னும் திருத்தலம். இங்கு நடனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அப்பரின் தேவாரப் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் படையெடுத்து வந்து, சோழ மன்னன் ஒருவனோடு இந்த இடத்தில் போரிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் போரில் வெற்றி பெற்ற பாண்டிய மன்னனுக்கு ‘தரையாலக்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற பட்டம் வழங்கப்பட்ட தாக புறநானூறு புகழ்கிறது. 

இந்த சம்பவத்தை உண்மை என்று பறைசாற்றும் விதமாக, இந்த ஆலயத்தின் அருகில் பாண்டியன் மேடு, பாண்டியன் திடல் போன்றவை இன்னும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். போருக்கு முன்பாக இது ஒரே பெரிய கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு எல்லைக்குள் துண்டு துண்டாக சன்னிதிகள் மதிற் சுற்றுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள புதுக்குடி என்ற திடலில் 100–க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன.

தலையாலங்காடு என்ற பெயரை வைத்துப் பார்க் கும் போது, இந்த பகுதி முன்பு ஆலமரக் காடுகளால் சூழப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. அதன்பின்புதான் இந்த ஊரும், ஆலயமும் அமைக் கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போதும் கூட ஆலயத்தின் அருகில் மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று காணப்படுகிறது.



தீர்த்தக்குளம் :

இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கில் ஒன்றும், கிழக் கில் ஒன்றுமாக வளைவுகள் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை. ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப் பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.




நடனம் புரியும் ஈசன் :

தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர் களுக்கு, சிவபெருமானைக் காட்டிலும் தவத்தில் சிறந்த தாங்களே சிறப்பானவர்கள் என்ற செருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சிவபெருமானை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினர். பின்னர் சிவபெருமானின் மீது முயலகன் என்ற அசுரனை ஏவினர். ஆனால் ஈசனோ, அந்த அசுரனை தனது பாதத்தின் கீழ் போட்டு அழுத்தி, அவன் மீது ஏறி நின்று நடனமாடினார். 

அந்த ஈசனே இங்கு அருள்பாலிப்பதால், இத்தல இறைவன் நடனேஸ்வரர் என்றும், ஆடவல்லநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் சன்னிதி முன்பாக உள்ள மகா மண்டபத்தில், முயலகன் மீது சிவன் காலூன்றி ஆடும் நடராஜ சபை இதனை உறுதி செய்கிறது. இசை, நடனத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், இங்கு வந்து நடராஜனை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.




சுவாமி சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வலது புறத்தில் தனிச் சன்னிதியில் விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் பிரசன்ன விநாயகர், அதையடுத்து வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

வடக்குப் பகுதிக்கு வலமாக வந்தால், அங்கே 10 கரங்களுடன் தசபுஜ காளிதேவியின் சன்னிதி அமைந் திருக்கிறது. இந்த காளிதேவியை வழிபட்டுதான் போரில் பாண்டிய மன்னன் வென்றதாக கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வரும் ராகு காலத்தில், இந்த காளிதேவியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தல மூலவர் விமானத்தின் தோற்றமே வித்தியாசமாக காட்சி தருகிறது. இதில் இருந்து ஒரு தை அமாவாசை நாளில், அப்பருக்கு இறைவன் காட்சி கொடுத்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. அந்த காட்சியும் விமானத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விமான மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.




திருநாவுக்கரசர் என்று இறைவனால் அழைக்கப்பட்ட அப்பர் பெருமான், ‘இத்தனை நாளும் இத்தலத்தை வணங்காமல் காலம் கடத்தி விட்டேனே’ என்று கூறி 10 பதிகங்களைப் பாடியிருப்பது சிறப்பானதாகும். அதில் முதல் பதிகம் இது.

‘தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை
ஆதிரைநாள் ஆதரித்த அம்மான்தன்னை
முண்டத்தின் முளைத்து எழுந்த தீயானானை
மூவுருவத்து ஓருருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே’.

இந்தக் கோவிலில் லட்சுமி திருவுருவம் இல்லை. ஆனால் சிவன் சன்னிதி மண்டபத்தில் வடபுறத்தில் சரஸ்வதிக்கு, ஜோதியாக காட்சி தந்த சிலாரூபம் உள்ளது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது. அங்கிருந்து சற்று தூரம் நடந்தால், தெற்கு வாசலுக்கு எதிரே நந்தி மண்டபம் உள்ளது. அதன் அருகில் தனிச் சன்னிதியில் அம்பாள் ‘பாலாம்பிகை’ என்ற பெயரில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பழங்காலத்தில் இந்த அம்மனுக்கு ‘திருமடந்தை அம்மன்’ என்ற பெயர் இருந்திருக்கிறது.

அம்பாள் சன்னிதிக்கு அருகில் கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கிறார். சுவாமி– அம்பாளுக்கு இடையில் திருநள்ளாறு போல் கிழக்கு பார்த்தபடி இவர் இருப்பதால், இத்தல சனீஸ்வரர் தோஷ நிவர்த்தி செய்ய ஏற்றவராக, அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.



தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது.


 📱📲 : தொடா்பு எண் :  04366 ~ 269235;












🔔 🐚 புற்றுநோய் தீர்க்கும் திருவெற்றியூர் பாகம்பிரியாள்! 🐚 🔔

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு தீர்க்காயுள் பெற்று வாருங்கள். ஆவணி மாத ஓணத்திருநாளுக்கும் இந்தக் கோயில் வரலாற்றுக்கும் சம்பந்தம் உள்ளது.
தல வரலாறு: 
மகாபலி சக்கரவர்த்தி வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கியவன். குடிமக்கள் அவனைத் தங்கள் துன்பங்களை நீக்கவல்லவன் என்று பாராட்டினர். மூவுலகையும் அவன் வென்றான். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களை மதிக்காமல் ஆணவம் கொண்டான். இதனை அறிந்த நாரதர், சிவபெருமானிடம் முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான், ''முற்பிறவியில் என்னுடைய சந்நிதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல," என்றார்.
இதையடுத்து திருமாலிடம் தனது கோரிக்கையை வைத்தார் நாரதர். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மகாபலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் மூன்றடி மண் கேட்டார். ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு, உலகை இரண்டடியால் அளந்து, மூன்றாம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான். மகாபலி பிறவிப் பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான்.
தர்மதேவதை: 
இதனை அறிந்த தர்மதேவதை தன் ஒரு மகனை இழந்த துன்பத்தால் துடித்தாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு, புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் புலம்பினார் மகாவிஷ்ணு.
இது கேட்ட சிவபெருமான் திருமாலிடம், ''18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி, ஆடும் யானையும் தரிசித்த இடத்திலுள்ள ஆதி ரத்தினேஸ்வரரை தரிசித்து, தெற்கிலுள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்குள்ள லிங்கத்தை தழுவி வழிபட்டால் புற்று நீங்கும்," என்று கூறி மறைந்தார்.
இவ்வூரே திருவெற்றியூர் ஆனது.திருவெற்றியூர் வந்த மகாவிஷ்ணு சிவனை வழிபாடு செய்தார். புற்று மாயமாய் மறைந்துவிட்டது. எனவே இங்குள்ள சிவபெருமானுக்கு 'பழம் புற்றுநாதர்' என்றும், அம்பாளுக்கு 'பாகம்பிரியாள்' என்றும் பெயர் வழங்கலாயிற்று.
சிறப்பம்சம்: 
குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கு மருந்து தரும் நாயகியாக விளங்குகிறாள் பாகம் பிரியாள். இவளது சந்நிதியில் தரும் தீர்த்தத்தை அருந்தினால், புற்றுநோய் தீரும் என்பது நம்பிக்கை. மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர். இங்குள்ள தலவிருட்சமான அரசமரத்தை சுற்றி வந்தால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. இவ்வூர் மக்கள் தங்கள் தாய்வழி சொத்தை அம்பாளுக்குரியதாக கருதி, மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர். இவ்வூர் அருகிலுள்ள திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் புகழ்மிக்கது.
திறக்கும் நேரம் : காலை 6 --- 11, மாலை 4 - - இரவு 8. 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 140 கி.மீ., தூரம் ராமநாதபுரம். அங்கிருந்து 60 கி.மீ., தூரம் திருவாடானை. இங்கிருந்து டவுன் பஸ்களில் 7 கி.மீ., சென்றால் திருவெற்றியூர்.






ஓம் சிவாய போற்றி.




🐘கடன் தொல்லை நீக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்🐹







அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது.











அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது. பசுமையான வயல் வெளிகளுக்கு இடையே இயற்கை சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும்.


ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையாரும், வலதுபுறம் துர்க்கை திருமேனிகளும் உள்ளன. அடுத்து மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் காணப்படுகின்றன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன், வைத்தியநாத சுவாமி கீழ்திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.


இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி இருக்கிறது. பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.வடக்கு பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான சி வலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. இங்கே சனி பகவான் தனி சன்னிதியில் வீற்றி ருந்து அருள்கிறார். சண்டீஸ்வரர் சன்னிதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், பைரவர் ஆகியோர் இருக்கிறார்கள்.


தீர்த்தமான சூரிய புஸ்கரணி ஆலயத்தின் எதிர் திசையில் அமைந்திருக்கிறது. தினசரி காலை சாயரட்சை, அர்த்த சாமம் என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. ஆலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும்.


வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முந்தைய ஆலயமாக இது கருதப்படுகிறது. சனி பகவானுக்கு இங்கு தனி சன்னிதி உள்ளதால், நவக்கிரகங்கள் இங்கு இல்லை. சனிக்கிழமை அன்றும், கிரகப் பெயர்ச்சி நாட்களிலும் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சனிப் பார்வையால் துன்பப்ப டுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். எள் சாத நைவேத்தியம் செய்து அனை வருக்கும் வினியோகம் செய் கின்றனர். சனிப் பெயர்ச்சி காலங்களில் இங்கு பக்தர் கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை யான ஒன்றாகும்.






பாலாம்பிகை, வைத்தியநாத சுவாமி

இந்த ஆலயத்தில் பிரதோஷ நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் பல்வேறு சிவ விசேஷ நாட்களில் இறை வனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.




அரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிராத் தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளில் இருந்து நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கடன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள், இந்த பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள். மேலும், அன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு அருகே அரிச்சந்திரன் வரலாற்றை நாடகமாக அரங்கேற்றி, அதைப்பார்த்து மக்கள் மகிழ்வது இன்றும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.




                        சகல விதமான சரும நோய்களை தீர்க்க வல்லவர், இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சூரிய புஸ்கரணி தீர்த்தத்தில் நீராடி, நீலோத்பவ மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம்.





நள மகாராஜன், கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டான். இதனால் அந்த மன்னனின் உருவம் மாறியது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் நளன். அப்போது ஒரு முனிவரின் வழிகாட்டுதல்படி இந்த ஆலயத்திற்கு வந்தான். பின் இங்குள்ள இறைவனையும், இறைவியையும் ஆராதித்தான். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், நள மகாராஜனுக்கு அவனது பழைய உருவத்தை திருப்பி வழங்கியதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.




பொதுவாக தங்களை கடன் பிரச்சினைகளில் இருந்து மீட்டு, நல்ல வழியை இத்தலத்து இறைவன் காட்டுவார் என பக்தர்கள் நம்புவது நிஜமே.





அமைவிடம் :

நாகை மாவட்டம் மயிலாடுதுறை - காளி பேருந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது பாண்டூர் என்ற இந்த தலம். மயிலாடுதுறையில் இருந்தும், காளியில் இருந்தும் இத்தலம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.



சர்வம்சிவார்ப்பணம்





Comments

Popular posts from this blog