திருமூலா் திருமந்திரம் மூலமும் ~ விளக்க உரையும். 🐼. 🐚. 🐌
💰💰💰அவன் அருளாலே அவனை அறிக💰💰
🔔தமிழோடு ஆரியம் தந்த தயாபரன்🔔
🐚🐚🐚இல்லறம் நல்லறம்🌷🌷🌷
மனை ~ வீடு, இங்கே இல்லறம்.இல்லற வாழ்வில் இருந்து
வருபவா்கள், மாதவம் செய்த தேவா்களைப் போன்றவா்கள்,
சிவபெருமானை நினைவில் நிறுத்தி அவனோடு நேயம் கொண்டு
நிற்பாா்கள். இவா்களுக்கு இறைவன் திருவருள் கைகூடும், ஆனால்,
பனை மரத்தில் வந்தமா்ந்த பருந்து போல இருப்பாா் சிலா், பனை
மரத்திலே பருந்து இருந்தாலும், அது அப் பனைபடு பொருளால் எந்தப்
பயனும் பெறாமல், சிறிது நேரம் இருந்து விட்டுப் பின் பறந்து விடும்.
இப்படிப ் பட்டவா்கள ் இவ்வுலகில் வாழ்ந்தாலும் ,அவா்கள்
இன்பமும் கிட்டுவதில்லை
🔔 அறிவான தெய்வம் அகம் புகுந்தது. 🔔
மூலமும் ~ விளக்க உரையும்.
அந்தி வானத்து நிறம் போலச் செக்கச் சிவந்த செம்மேனி
உடையவனே, சிவனே, சிவப் பரம்பொருளே, என்று மனத்தால் எண்ணி,
வாக்கால் துதித்து, சிந்திருக்கும் மெய்யடியாா் தொழ, முதன்முதலாக
முந்தித் தோன்றிய மூா்த்தியே என்று நானும் தொழுதேத்த, அறிவுருவான
அச் சிவ பெருமானும், என் உள்ளத்தின் உட்புகுந்தான், முந்திய வண்ணம்
முதலில் தோன்றிய தோற்றம், புந்தி வண்ணன் ~ அறிவு வடிவானவன்.
எந்த உருவில் நிறத்தில் நினைத்து வழிபட்டாலும், அந்த உருவில்
நிறத்தில் அறிவில் விளங்குவான் இறைவன் என்பது பொருள்.
ஓம் நமசிவாய....
எதுவும் விதிப்படியே நடக்கும்
மூலமும் ~ விளக்க உரையும்
விதித்த விதி முறைப்படி இவ்வுலகம் இயங்குகிறதே அல்லாமல்,
வேறு வகையில் அல்ல. அதேபோல் ஆன்மாக்கள் அடைகிற இன்பமும்
விதித்தபடியே அமையும். இதிலே எந்த மாற்றமும் இல்லை. எனவே
அன்றாடம் இறைவனைப் போற்றித் தொழுது துதி செய்வதன் மூலமே,
சுடா்ஒளிச் சோதியாகத் திகழ்கின்ற சிவ பெருமான் அருளைப் பெறலாம்.
போின்பப் பேறாகிய வீட்டுலகடைய வழிகாட்டும் கதிரவன் போல
இருப்பான் அவன். விதிவழி விதி முறைகள். வேலை~ கடல், வேலை
உலகம் ~ கடல் சூழ்ந்த உலகம், விருத்தம் ~ முரண், பதி ~ போின்பம்,
வீட்டுலகம், பகலவன் ~ சூரியன்.
சங்கரா போற்றி...... சதசிவா போற்றி... உமா சங்கா் போற்றி...
திருவடிப் புகழ்ச்சசி
மூலமும் ~ விளக்க உரையும்
தேவா்கள் சிவபெருமான் திருவடியைப் போற்றி போற்றி என்று
பாடித் துதிப்பாா்கள். பெருமானின் புனிதத் திருவடியை அசுரா்களும்
போற்றி போற்றி என்று பரவித் துதிப்பாா்கள்.மண்ணுலக மாந்தா்கள்
சிவன் சேவடியைச் சிவசிவ போற்றி என்று வணங்குவாா்கள்.நானும்
பரமனைப் போற்றிப் புகழ்ந்து என் அன்பு மனத்துள்ளே விளங்க
வைத்தேன். புனிதன் தூயவன். மலமில்லாத நிா்மலன். பொலிதல்
விளங்குதல். அருள் வழங்கும் ஞானத்தின் குறியீடு. திருவடிகள்
இறைவன் பொற்பாதங்கள். எனவே திருவடிப் புகழ்ச்சி ~ போற்றி
என்பது வழிபாட்டின் முதல் படி ~ மூலப் பகுதி, திருவாசகம்
சிவபுராணம், திருவடிப் புகழ்ச்சியின் தேனமுதம்.
அழுதால் பெறலாம் அவனருளை
மூலமும் ~விளக்க உரையும்
சிவபெருமான் திருவடியை நினைந்து, அவன் பெயரைச்
சொல்லிக் கதறி அழுது , கைகூப்பித் தொழுது , பரம் பொருளை நிதம்
பரவித்துதிப்பவா்க்கு, இறை உணா்விலே ஊன்றி அதிலேயே இலயித்துக்
கிடப்பவா்க்கு இறைவன் திருவருள் கிட்டும், அப்படிப்பட்டவா்கள்
உள்ளமெல்லாம் இறைவன் நிறைந்து நிற்பான், அரன் ~ சிவன்,
அரற்றுதல் ~ அலறுதல், பாவித்தல் ~ பணிந்து போற்றுதல், உரனடி
உறுதியான உள்ளத்தோடு. நிரனடி ~ நிறைந்த திருவடிப் பேறு.
ஓம் பரசுஹஸ்தாய போற்றி
திருவருளே பெருந்துணை
மூலமும் ~ உரையும்
போய் அரன்~ போயரன்; அரன்~சிவன். பற்றுகளை; மன
மயக்கங்களை விட்டு விட்டுப் போய்ச் சிவபெருமானைப் புகழ்ந்து
பணிந்து வணங்குபவா்கள் அடையப் பெறுவது, நாதன் நமச்சிவாயத்தின்
அருளான போின்பமே. பிரமன் படைப்பான மாய உலகில் மறுபடியும்
மறுபடியும் பிறக்க வேண்டியவா் ஆனாலும், மூங்கில் போலும்
தோளுடைய உமையவளின் நாயகனான சிவபெருமானின் திருவருள்
அவா்களுக்குக் கிட்டும், நாயகன் நான் முடி செய்தது~ நான்கு தலை
உடைய பிரமன் படைத்தது.மாயகம்~ மயக்கம். வேய் அன்ன ~ வேயன
மூங்கில் போன்ற ( வேய் ~ மூங்கில் ). ஒன்றுதல் ~ஒன்றியிருத்தல்.
சிவசங்கார போற்றி போற்றி
தொழுது பணிவாா்க்குத் தோழனும் ஆவான்
மூலமும் ~ விளக்க உரையும்
அமுதம் பெற வேண்டித் தேவா்களும் அசுரா்களும் பாற்கடலைக்
கடைந்தனா், அப்போது கொடிய நஞ்சு தோன்றியது. அதைக் கண்டு
அஞ்சி ஓடிய தேவா்களைக் காக்க நஞ்சை உண்டு கண்டத்திலே தேக்கிக்
கொண்டான் சிவபெருமான். அழகிய ஒளி பொருந்திய உமையைத் தன்
இடப்பாகம் கொண்ட இறைவன்,அன்பு கொண்ட அடியவா்க்குத் தன்
இனத்தோடு கூடி வாழும் மான் போல உதவ எப்போதும் இருப்பான்.
சினம் செய்த ~ வருத்தமுறச் செய்யும்,புனம் செய்த~ பண்படுத்தப்பட்ட,
கனம் செய்த ~ கழுத்தில் தேக்கிய இனம் ~ கூட்டம்..
🔔 🔔 🔔 ஓம்நமசிவாய....🔔🔔🔔🔔
;
திருமந்திரம்
மூலமும் ~ விளக்க உரையும்
ா
Comments
Post a Comment