🌍அஷ்டதிக் பாலகா்களைத் துதிப்பதால் பலன் 🌐
🏣 மூலமந்திரம் 🏤
அஷ்டதிக் பாலகர்கள் சிறப்பாம்சம்:
உலகெங்கிலும் காண முடியாத அஷ்டதிக் பாலகர்கள் உருவ சிலா பிரதிஷ்டையுடன் கூடிய சன்னிதியை ஸ்ரீ விஜய சித்ராம்பா சமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆலய தீர்த்தத்தில் தரிசித்திடலாம்.
இந்திரன்,அக்னி,யமன்,நிருதி,வருணன்,வாயு,குபேரன்,ஈசான்யன் ஆகிய எட்டு தேவமூர்த்தியும் எட்டு திக்கில் பூமியை தாங்கி ஆட்சி செய்கின்றனர்.
திசைகள் அஷ்டதிக் பாலகர்களின் ஆட்சியின் கீழ்:-
*கிழக்குதிசை - இந்திரன்
*தென்கிழக்கு - அக்னி
*தெற்கு - யமன்
*தென்மேற்கு - நிருதி
*மேற்கு - வருணன்
*வடமேற்கு - வாயு
*வடக்கு - குபேரன்
*வடகிழக்கு - ஈசான்யன்
இவர்களின் ஆட்சியின் கீழ் உள்ளதாலையே கிழக்கு திக்கை இந்திர திக்கு அல்லது இந்திர மூலை,அக்னி மூலை,ஈசான்ய மூலை என்று அழைக்கிறோம்.
அஷ்டதிக் பாலர்களின் வழிபாட்டு பலன்கள்:-
அஷ்டதிக் வழிபாடு என்பது உத்தம வாஸ்து வழிபாடு.இந்த திக்பாலர்கள் முன்பு தீபம் ஏற்றி, அந்த திக்பாலகர் முன்பு அவருக்குரிதான காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் திக்பாலகர்கள் அனுக்கிரஹத்தால் வீடு,நிலம்,மாளிகைகள் வாங்கும் பாக்கியம் கிட்டும்.வீடு,மாளிகை,தொழிற்சாலை உள்ளவர்கள் வழிபட்டால் வாஸ்து சக்தி பெருகி வீட்டில்,தொழிற்சாலையில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி மேலும் உயர வழி பிறக்கும்.
அஷ்டதிக் பாலகர்களின் காயத்ரி மந்திரங்கள்:-
1.இந்திர காயத்ரி மந்திரம்:
ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தன்னோ இந்திர ப்ரசோதயாத்.
2.அக்னி காயத்ரி மந்திரம்:
ஓம் மஹா ஜவாலாய வித்மஹே அக்னி தேவாய தீமஹி தன்னோ அக்னி ப்ரசோதயாத்.
3.யம காயத்ரி மந்திரம்:
ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மஹாகாளயே தீமஹி தன்னோ யம ப்ரசோதயாத்.
4.நிருதி காயத்ரி மந்திரம்:
ஓம் நிசாசராய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ நிருதி ப்ரசோதயாத்
5.வருண காயத்ரி மந்திரம்:
ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலப்புருஷாய தீமஹி தன்னோ வருண ப்ரசோதயாத்.
6.வாயு காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே ரகசிய சஞ்சாரய தீமஹி தன்னோ வாயு ப்ரசோதயாத்.
7.குபேர காயத்ரி மந்திரம்:
ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்.
8.ஈசான்ய காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே சிவ ரூபாய தீமஹி தன்னோ ரூத்ர ப்ரசோதயாத்.
இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது வீட்டிற்கு மட்டுமல்ல,நாட்டிற்கும் உள்ளது.இதை நாட்டிற்கு பார்க்கும்போது இதுவே பூம்ய ஜாதகம் என்று சொல்லவேண்டும்.இதற்கே மாமன்னர்கள் முக்கியத்துவம் அளித்தார்கள்.அதன் காரணமாகவே சிறப்பான ஆட்சியும்,மக்களும் செழிப்பாக வாழ்ந்தார்கள்.உலகம் போற்றத்தக்க வகையில் மன்னர்களுக்கு பேரும்,புகழும் கிட்டியது.
Comments
Post a Comment