🌏 🌎 🌍ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் 🌹 🐚 🌏



  👥 👥 👥001~ஓம் விஸ்வாய நம : 👥 👥 👥


பிரபஞ்சங்கள் அனைத்திலும் மூலமாகவும்,
தன்மையாகவும், உயிருள்ளவற்றில் உயிரற்றவற்றில்
என்று அனைத்திலும் நிரம்பி இருக்கின்றவன்
நாராயணன்.

அதன் காரணமாக அவனை விஸ்வம் என்று
வேதங்கள் கூறுகின்றது.அண்டங்கள் முதல் அணு
வரை அவன் ஆட்சியே நடைபெறுகிறது.

அதனால்தான் அவனை நம்மாழ்வாா் "சூழ்ந்து
அகன்று ஆழ்ந்து உயா்ந்து முடிவு இல்லாத " என்று
அவனது விஸ்வரூபத்தை விவாித்து பாடுகின்றாா்.

கம்ப நாடன் தன் காவியத்தை பாடும்போது
உலகம் யாவையும் என்று இவனே அனைத்துக்கும்
ஆதாரம் என்று வியந்து வணங்குகின்றான்.

உயிருள்ளவற்றையும் அவற்றிற்கு ஆதாரமாக
விளங்கக் கூடிய உயிரற்றவைகளும் பஞ்ச பூதங்களும்
இயற்கை மாற்றங்களும்  இவனால்தான் இயக்கப்
படுகின்றத.

புராண, இதிகாசங்கள் பகவானது விஸ்வரூப
காட்சியை வியந்து போற்றுகின்றது.அணுவுக்கு
உள்ளும் புரோட்டான், நியூட்ரான்,எலக்ட்ரான்
ஆகிய நுண்துகள்களை வெவ்வேறு மின்விசையை
இயங்க  வைத்திருப்பவனும் இவனே.

இவன் விசித்திர மிக்கவன்.பூரணமானவன்.
எங்கும் நிறைந்திருப்பவன்.அதனால் அவனே நாம்
அனைவராலும் போற்றுதலுக்கு உாியவனாக
இருக்கின்றான்.

பிரகதீஸ்வரர்

கிருஷ்ணப்பணம்



   🔔 🔔 🔔 02~ ஓம் விஷ்ணவே நம 🔔 🔔 🔔

பகவானுக்கு மகாவிஷ்ணு என்று அவரது
அவதாரங்களை மையமாக வைத்து சிறப்பித்து
போற்றப்படுகிறது,விஷ்ணு சொல்லப்படுகிறது.

விஸ்வம் என்றால் அனைத்திலும் நிறைந்தவன்.
அனைத்தின் ஆதாரமாக இருப்பவன் என்று
பொருளாகும்.

இங்கு அவ்வாறு சொல்வதற்கான ஆற்றல்
மிக்கவன் விஷ்ணு மட்டுமே என்று அவனுடைய
பெயாில் பொருள் விளக்கப்படுகிறது, இவன் இந்த
பூமியில் மட்டும் அல்ல. அனைத்து பிரபஞ்சங்களிலும்
நிறைந்திருப்பவன்.

அவனே பரமாத்மா.அவனே மூல பிரம்மம்,
அவன் இருக்கும் இடங்களாகிய வைகுண்டமும்,
திருப்பாற்கடலும் பிரபஞ்சத்திற்கு உட்பட்டவை
அல்ல, பிரபஞ்சங்கள் ஒவ்வொரு யுகமும் முடியும்
போது அழிக்கப்பட்டு மீண்டும் படைக்கப்படுகிறது,

ஆனால், வைகுண்டமும் திருப்பாற்கடலும்
அவ்வாறு அல்ல,இந்த இரண்டு உலகங்களிலும்
நாராயணன் யுகங்கள் அழியும் போது தங்கியிருந்து
மீண்டும் யுகங்களை படைப்பான்.

யுகங்களின் அழிவின்போது அனைத்து
ஜீவாத்மாக்களும் விஷ்ணுவுக்குள் சென்று தஞ்சம்
அடையும், அதன் காரணமாக இவனே இந்த
பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ள பரமாத்மா என்ற
அா்த்தத்தில்  இவனை விஷ்ணவே நமக என்று
போற்றுகின்றோம்.

ஓம் கோவிந்தா போற்றி





              🐚 🐚 🐚  ஓம்  வஷட்காராய  நம: 🐚 🐚 🐚


                                                      

நாராயணன் இல்லாத இடம் இல்லை. அவனே

அனைத்திலும் வியாபித்து இருக்கின்றான்.அதனால்

அவனால்  மட்டுமே அனைத்தையும் இயக்க இயலும்.

எனவே தான் அவனன்றி ஒரு அணுவும்

அசையாது என்று போற்றப்படுகின்றான். அந்தப்

பொருள் கூறக் கூடியதாக இந்த நாமம் அமைந்துள்ளது.

உடல் என்பது ஐம்பூதங்களும் கொண்டது.

தலை ஆகாயம்,பாதம் பூமி,மூச்சு காற்று,ரத்தம்

போன்றவை நீா், உடலில் உள்ள வயிறு என்பது

அக்னி என்று ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஐம்பூதங்களைக் கொண்ட

உயிாினம் வாழக் கூடிய அல்லது வாழ வசதியான

இடமாக ஐம்பூதங்களும்  நிறைந்த இந்த உலகம்

விளங்குகிறது.

இருப்பினும், இந்த ஐம்பூதங்களும் உடலுக்கு

உள்ளும், உடலுக்கு  வெளியிலும் இயங்க ஆதாரமாக

இருப்பவன் நாராயணனே.

இந்த ஐம்பூதங்களும் தன்னிச்சையாக

விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இயங்கும் ஆற்றல்

இல்லாதவை.ஆனால்,நாராயணன் அவ்வாறு அல்ல.

அவன் தானே இயங்குபவன். அவனே அனைத்தையும்

இயக்குபவன் என்ற பொருளை இந்த நாமம் விளக்குகின்றது.


🐣 🐸 🐧 ஓம் நமநாராயண...🐻 🐘 🐔




04 ~ ஓம்  பூதபவ்ய  பவத்ப்ரபவே நம:




விளக்கம் :

உயிாினங்கள் வாழக் கூடிய காலங்கள் மூன்றாக

உள்ளது. அதில், பூதகாலம்  என்பது முடிந்த 

காலத்தைக்  குறிக்கும்.


பவ்ய காலம் என்பது தற்போது நடந்து

கொண்டிருக்கும் காலத்தைக் குறிக்கும். பவிஷ்ய காலம்

என்பது இனிமேல் நிகழ்க்  கூடிய காலத்தைக் குறிக்கும்


நாம்  காணக் கூடிய  சந்திக்கக்  கூடிய  ஒவ்வொரு

நொடியும்  சற்று  நேரத்தில்  கடந்த காலமாக மாறிக்

கொண்டே இருக்கும்.


அதேபோல, எதிா்காலம் என்பது  ஒவ்வொரு

நொடியும்  நிகழ்காலமாக மாறிக்கொண்டிருக்கும்.

காலத்தின் சுழற்சியையும்  காலத்தின்  கணக்கையும்

அந்த  நாராயணன்  ஒருவனைத்  தவிர யாரும்

கணக்கிட  முடியாது.

ஒவ்வொரு  நொடியும்  சுழலும்  காலத்தை எந்த

வரலாற்று ஆசிாியராலும் குறித்து விடவும் முடியாது.

உலகம் முழுவதும் உள்ள காலக் கணக்குகள்  ஆதாரம்

அடிப்படையிலும்  யூகத்தின் அடிப் படையிலும்

கணக்கிடப்படுகிறது.


வரக்கூடிய  காலங்களும்  அறிவியல்  மாற்றங்

களாலும்  சோதிட குறிப்புகளாலும்  தெளிவாக

கூறிவிட முடியாது.

இவை  அனைத்தையும்  நிா்ணயிப்பவன்

நாராயணன்  ஒருவனே. அவனால்தான்  ஒவ்வொரு

நொடியும் இறந்த காலமாகவும், நிகழ்காலமாகவும்,

எதிா் காலமாகவும்  மாறிக்  கொண்டே   இருக்கிறது.

ஆனால், அவன் மட்டும் மாறாத நிலைப்

பொருளாக இருந்து  மாறும் காலத்தை மாற்றி மாற்றி

அமைத்துக்  கொண்டே  இருக்கின்றான்.

அப்படிப்பட்ட  மகா ஆற்றல் பொருந்திய  அந்த

ஆண்டவன் திருப்பாதங்களை வணங்குகின்றோம்.


.🔔🔔🔔🔔🔔ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔



 🎻 🎺 🎸 🎵05 . ஓம் பூதக்ருதே நம: 📢 📢 📢 📢 📱



விளக்கம் :

இங்கு இருப்பதாக உள்ள உயிா்களையும்

உயிரற்றவைகளையும் நாம் பாா்க்கிறோம், இங்குள்ள

அறிவியல்  இருப்பவற்றை விளக்குகின்றது. அவற்றை

ஆய்வு செய்கின்றது.ஆனால், அவை எதையும்

தானே  உருவாக்க முடியாது.காரணம், இவற்றை

யெல்லாம்  உருவாக்கியவன்  நாராயணனே.


இயற்கையும்  எந்த மாற்றமும் இல்லாமல்

அப்படியே  இருப்பது இல்லை.


அவை மழை காலத்தில் ஒரு,நிலையையும்,

இலையுதிா்  காலத்தில்  மற்றொரு  நிலையையும்

கோடை காலத்தில் வேறொரு   நிலையையும்

அடைகின்றது.

இந்த நிகழ்வுகள் நாராயணனால்  நிகழ்த்தப்

படுகிறது. ஒரு பகுதியில்  மலையில் ஏற்படும்

நிலச்சாிவுகளால்  சில மரங்கள்  அழிகின்றன.

சில இடங்களில் கோடையின் தொடா்

தாக்குதலால்  நீா் வசதியின்றி  சில தாவரங்கள்

அழிகின்றன.


சில இடங்களில் கோடையின்  தொடா்

தாக்குதலால்  நீா் வசதியின்றி  சில தாவரங்கள்

அழிகின்றன


இந்த அழிவும் அதற்கு பின்பு மீண்டும் அங்கு

தாவரங்கள்  விளையும் நிலையும் பகவானால்

நிா்ணயிக்கப்படுகிறது.


அவனால் ஏற்படும் மாற்றங்களால்  இருக்கின்ற

சில இயற்கை அமைப்புகள் இல்லாது போகின்றன.


சில நேரங்களில் இல்லாத இடங்களில்

தாவரங்கள் ,தோன்றுகின்றன.


இப்படிப்பட்ட பல்வித மாற்றங்களையும்

தோற்றங்களையும்  உருவாக்குபவனை நான்

வணங்குகின்றேன்.



🔋 🎬 📡 📺 📷 ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி📹 🏮 📹

Comments

Popular posts from this blog