🌎#ஆரோக்கியத்திற்காகவழிமுறைகள் 




🍓#மனிதன்உண்ணும்உணவு


ஒவ்வொருவரும் உண்ணும் உணவானது முதல் நாளில் ஜீரணமாகி, இரண்டாம் நாளில்

அன்னரசமாகி, மூன்றாம் நாளில் இரத்தமாகி, நாலம் நாளில் மாமிசமாகி, ஐந்தாம் நாளில்

கொழுப்பாகி, ஆறாம் நாளில் மஜ்ஜையாகி, ஏழாம் நாளில் அஸ்தியாகி, எட்டாம் நாளில்

சுக்கிலமாகி, நாற்பதாம் நாளில் அமிர்தமாகும். இந்த அமிர்தத்திலிருந்து தான் ஓஜஸ்

எனப்படும் சக்தி உண்டாகின்றது என்று மருத்துவப் பெரியோர் சொல்லுகின்றனர்.


அருந்தும் ஆகாரங்கள் சீரணமாகும் காலங்கள்

பதார்த்தங்கள் காலங்கள்


காய்ந்த நீர் 1.15 மணி நேரம்

பாகஞ்செய்த பதார்த்தங்கள் 2 மணி நேரம்

அன்னம், வெண்ணெய் 2 மணி நேரம்

கனியிரசங்கள் 2.30 மணி நேரம்

உயர்ந்த பழவர்க்கங்கள் 3 மணி நேரம்

தயிர் அன்னம் 4.30 மணி நேரம்

தேன் 5 மணி நேரம்

மோர் அன்னம் 5.30 மணி நேரம்

நீர் அன்னம் 7 மணி நேரம்

பால் 8 மணி நேரம்


குடிக்குத் தண்ணீரின் அளவு


ஒவ்வொருவரும் உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 6 அவுன்சு தண்ணீர் குடிப்பது

நல்லது. உண்டபின்னும். நீர் குடித்தல் அவசியமாகும். ஊண்ணுஙக் hல், இடையிடையே,

நீர்குடித்தலானது ஜீரண சக்திக்குப் பங்கத்தை உண்டுபண்ணும். “இடையிற் குடியேல்,

கடையில் மறவேல்”

என்றும் பழமொழியை நினைவில் வைத்துக் கொள்க.


சுத்த ஜலத்தின் குணம்


விழித்தவுடன் சுத்த ஜலம் அருந்தி வருவதாயின் பைத்திய தோ~ம் விலகும், மலசலபந்தம்

நீங்கும், வாதம் முதலிய முத்தோ~ங்களும் தன் தன் நிலையில ; நடமாடும்.

வெயிலில் காய்தலால் உண்டாகும் பலன்

உதயகால வெயிலில் காய்ந்தவர்களுடைய சரீரத்தில் வியாதிகள் எல்லாம் உக்கிரமமாகச்

சேரும், மாலைக் கால வெயிலில் காய்ந்தவர்களுடைய சரீரத்தின் கண் பொருந்திய நோய்கள்

நீங்கிவிடும் என்பர்.


புகைகளின் குணம்


வேள்விப் புகையானது தீர்க்காயுளைக் கொடுக்கும், சுடுகாட்டுப ; புகையானது உள்ள

ஆயுளைக் கெடுக்கும், மகா தைலப் புகையானது வாதரோகத்தைத் தனக்கு விருந்தாக

உண்டு விடும் என்பர்.


ஸ்நானஞ் செய்யும் முறைகள்


1.ஸ்நானஞ் செய்யும் காலத்தில், இரண்டொரு எலுமிச்சம் பழத்தின் ரசத்தை நீரில் விட்டு

ஸ்நானஞ் செய்தால், அது சருமத்தில் அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்கைப் போக்கி,

சருமத்தை மிருதுவாகவும், சுத்தமாகவும் செய்வதுமன்றி, தேகத்திற்கு ஆரோக்கியத்தையும்

உண்டு பண்ணும்.


2.ஸ்நானஞ் செய்வதற்குரிய நீரில் அரை இறத்தால் மிளகைப் பொட்டணங் கட்டிப் போட்டு,

நீரைச் சூடாக்கல் வேண்டும். அந்த நீரில் ஸ்நானஞ் செய்யின் நெஞ்சுநோவு, சரீர உளைவ

முதலியன நீங்கப் போகும்.


மருந்துண்ணும் காலம்


சனி, புதன், திங்கள் ஆகிய இந்நாள்களில் மருந்து உட்கொளள் ல் ஆகாது,

வெள்ளிக்கிழமையில் உட்கொள்ளின் பிணி மிகுதிப்படும். வியாழன், செவ்வாய் என்னும் இத்

தினங்களில் அருந்துவது நன்றேயாகும். ஞாயிற்றுக்கிழமை எல்லாவற்றினுஞ் சிறந்ததென்க.


👏நன்றி ஷாலினி🌎


🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.

 நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


🌎https://www.facebook.com/om14422019/


பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ


இது குடும்பமாக இருந்தாலும் சரி,


உறவுகளாக இருந்தாலும் சரி,


நட்பாக இருந்தாலும் சரி,


தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,


பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!


🌎நன்றி ஓம்🍓

Comments

Popular posts from this blog