🍓பெண் பக்தர்களுக்கு என் பணிவான வணக்கத்துடன் ஒரு சிறு பதிவை பதிவிடுகிறேன்🍓
பூலோக சொர்க்கத்தில் ருதுகாலம் முடியாத பெண்கள் செல்ல கூடாது என்பதற்க்கு காரணங்கள் உண்டு என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்...
குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?
யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும். இதை தவிர்த்து தலைப்பகுதியில் செயல்கள் இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.m
கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?m
இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை செயல்படும் நிலையில் அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா?
கேரளத்தில் மன்னார்சாலை என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் அபாணா என்ற ப்ராணனுக்கானது. அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது. இப்படியாக ஒவ்வொரு கோவிலின் சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும் ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என உளருவது முட்டாள் தனம்.
இக்காரணத்தை தவிர காட்டில் மிருகம் இரத்த வாசனை உணர்ந்து வந்து தாக்கும் என்பதெல்லாம் ஏதோ ஒரு ராக்கெட் விஞ்ஞானி வெளியிட்ட புரளி என்பதை உணருங்கள். அந்தகாலத்திலிருந்தே பெண்கள் சபரிமலை சென்றதற்கான சான்றுகள் உண்டு. இன்றும் கூட கருப்பை அறுவை சிகிச்சை நடந்துவிட்டது என்ற சான்றிதழ் இருந்தால் இளம் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் புரியாமல் சென்று பாதிக்கப்பட கூடாது என்பதே இந்த கட்டுப்பாட்டின் நோக்கம்.
சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான ப்ராணன் கொண்ட பகுதி. அதனால் தான் அதற்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள் கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் ப்ராணன் செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். இதையே நியதியாக்கினார் பகவான் ...
இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதினெட்டாம் படியை தொட அனுமதியில்லை. அந்த படிகள் அவ்வளவு உயர்ந்ததா என யோசியுங்கள் நான் முன்பு சொன்ன வரிகள் புரியும்.m
இவ்வாறு சபரிமலையில் பின்பற்றும் அனேக விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு. அதாவது மெய்ஞ்ஞானம் என்று நாம் சொல்லிகொள்ளும் நமது முன்னோர்களின் விஞ்ஞான நுட்பமே ஆகும்.
ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் காலத்தில் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில் சபரிமலை பற்றி இளம்பெண்கள் மட்டும் இங்கே தரிசனதிற்கு வருவதில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். பெண்கள் அனுமதி இல்லை என்று அந்த புத்தகத்தில் இல்லை , இளம் பெண்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.m
இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது என்று கூறுவது தவறானது.
அன்பு சகோதரிகளே 50 வயது வரை காத்திருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி கருமாரி
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment