🌍#குடும்பம்நன்றாகவும்அமைதியாகவும்

#நல்வாழ்வுவாழ🌏🌍🌍




🌍அன்பு ஓம் வலைப்பூ தளம் பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அமெரிக்கவாழ் மக்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் உங்களால் ஒரு சிறு உதவி ஆக வேண்டும் ஆகையால் 

இந்த வாட்ஸ்அப் நம்பரை 


தொடர்பு கொள்ளவும் 75 50 33 43 50 


சர்வம் சிவார்ப்பணம்..🌏


சீர்காழி


திருஞானாம்பந்தர் அருளியது


பண்-கொல்லி 


3-ஆம் திருமுறை


திருச்சிற்றம்பலம்


மண்ணில் நல் லவண்ணம் வாழலாம் வைகலும்


 எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை 


கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் 


பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.


1


உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினத்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முத்தியின்பமும் பெறலாம் இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் வரில் பெண்ணின் நல்லாளாகிய க.மாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றான்.


போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்


 தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்


 காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 


பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.


2


பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து 'யார் தந்த அடிசிலை உண்டனை?' என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுககின்றார்


ஓம்..


தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம் 


வண்டனை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் 


கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப் 


பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே


3)


தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்க உய்விக்கும் பொருட்டு, வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களை சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாக கொண்டும் பெருந்தகை யாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளு கின்றான்.


அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே 


நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும் 


சுயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப் 


பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே


நெஞ்சமே! வினையால் இத்துள்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, கயல் மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர் வளமும், நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வள நகரில் பல பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளு கின்றான்


அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே 


விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும் 


கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்


 பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே


5


நெஞ்சமே! நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக! இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுது போற்றும்படி, கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளை உடைய சுழுமலம் என்னும் வளநகரில் பெண் அன்னம் போன்ற நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்


ஓம்..


மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல


கற்றதல் வேதியர் கழுமல வளநகர்ச்


சிற்றிடைப் போல்குல் திருந்திழை யவளொடும்


 பெற்றெளை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே


6


நெஞ்சமே! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை நான்கு வேதங்களையும் தங்கு கற்று, கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்றும் வளநகரில் சிற்றிடையும், பெரிய அல்குலும் உடைய, அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு, என்னை ஆட்கொண்ட பெருத்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்


குறைவளை வதுமொழி குறைவொழி தெஞ்சமே 


திறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்


 கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் 


பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே


 7


நெஞ்சமே! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக நிறைந்த வளையல்களை முல்கையில் அணிந்து, சிறந்த ஆபரணங்களை அணித்த உமாதேவியோடு, இருண்ட சோலை களையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில், பிறைச்சந்திரனை. சடைமுடியில் குடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றார்


அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட 


நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே 


சுருக்குவா ளருள் செய்தான் கழுமல வளநகர்ப் 


பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.


8


பெருமை உடைய கயிலைமலையை எடுத்த அரக்களான இராவணன் அலறும்படி தம் காற்பொருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின் கீழ் அவனை நெருக்கினார். பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட காமையான வானை அருளினார் திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


ஓம்..


நெடியவன் பிரமனும் திளைப்பரி தாய் அவர் 


அடியொடு முடியறி யா அழல் உருவினன்


 கடிகமழ் பொழில் அணி கழுமல வளநகர்ப்


 பிடி நடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே


 9


நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும், பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்க நின்றால் நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்றும் வளநகரில் பெண்யானையின் தடை போன்று விளங்கும் தடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்


தாருறு தட்டுடைச் சமனர்சாக் கியர்கள் தம் 


ஆருறு சொற்களைத் தடியிணை அடைந்துய்ம்மின்


காகுறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்


 பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.


10


மாலை போல்று, பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை எடுத்துரைக்காது. தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால், அவற்றை விடுத்து இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக பசுமைவாய்ந்த அழகிய சோலைகள் வளர்த்துள்ள திருக்கழுமலம் என்னும் வளதகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்


கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்


பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை


 அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்


 விரும்புவர் ரவர்கள் போய் விண்ணுல காள்வரே


11


நீர்வளமும், தேன்வளமும் பெருகிய திருக்கழுமல வளநகரில், மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவ பெருமானை, அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந் தமிழில் அருளிய இத் திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர்


சர்வம் சிவார்ப்பணம் இந்த சர்வம் சிவார்ப்பணம் அதற்கு அர்த்தம் எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உமக்கே


சர்வம் சிவார்ப்பணம்..

Comments

Popular posts from this blog