🌷#சித்தர்கள்வழலைவாங்கல்🌺




வழலை வாங்கல்


இன்றைய மருத்துவ அறிவியலானது, உடலைப் புதுப்பித்தல் (Theory of rejuvenation) என்னும் கோட்பாடு தொடர்பான ஆய்வுக்குப் பெரும்பொருளைச் செலவு செய்கிறது. அதில் ஒரு பகுதி செல்களில் உள்ள விஷத்தைப் போக்குதல் (Removal of junk or toxin materials from the cells) ஆகும். இதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. ஆனால், சித்தர்கள் செல்களில் உள்ள விஷத்தைப் போக்க மூன்று கல்ப மருந்துகளைக் கொண்டு ஒரு செய்முறையினை (procedure) வகுத்துள்ளனர். அதன் பெயர் வழலை வாங்கல் என்பதாகும்.


108 கல்பங்களில் முக்கியமான மூன்று கல்பங்கள், கரிசாலை, கற்றாழை, கடுக்காய் ஆகியன. இவற்றின் தயாரிப்பு, பிரயோகம், செயல்படும் விதம் ஆகியவற்றைப் பார்ப்போம். இம்மூன்றையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பயன்படுத்தும் முறைக்கு வழலை வாங்கல் என்று பெயர். இந்த முறையால் உடல் செல்களில் தேங்கி உள்ள விஷம் கோழையாக, மலமாக, சிறுநீராக வெளியேறும். இதுவே வாசியோகத்தில் உடல்சுத்தி எனப்படுகிறது. இதுபற்றி கொங்கணர் விளக்குவதைக் காண்போம்.


சுகமாக காயத்தில் வழலை வாங்கப்

பேணப்பா ஆவின் நெய்படிகாலுக்குள்

பேரான கையான்சார் அரைப்படிதான்

நானப்பா மெழுகுபதம் தன்னிலேதான்

நறுநெய்வடிகலசத்துட் சொல்லக்கேளே

கொங்கணர், கற்பம் 100/௧௦௦, பாடல் 57/௫௭.

வெல்லுகிறேன் என்ற மிளகு தானே

மீறாமல் அரைக்களஞ்சி பொடித்துக்கொண்டு

செல்லும்பூவழலை பணவெடையும் கூட்டி

சிறப்பாக வடிகலசம் தன்னில் போடு

கொங்கணர், கற்பம் 100/௧௦௦, பாடல் 58/௫௮.

நாட்டமுடன் சுழினையிலே மனதை நாட்டி

நலமாக மேலவாசல் கண்டத்து ஊதி

மாட்டடா பெருவிரலை நெய்யில் தோய்த்து

வலஞ்சுத்தி உள்ளேற்றுவாசி ஊதி

காட்டடா கருவழலை வழலை வாங்கு

கொங்கணர், கற்பம் 100/௧௦௦, பாடல் 59/௫௯.

தாங்கியபின் இகவேன்னீர் விட்டு விட்டு

சலக்கட்டை யுறிஞ்சிக் கொப்பளிப்பாய்

பாங்குடனே மண்டலந்தான் செய்யும்போது

படுபாவி கண்டநஞ்சு கொல்லப் பார்க்கும்

ஓங்கியே கத்தலழன் சாறுதன்னை

ஓகோகோ கருவிட்டுச் சொல்லக்கேளு

கொங்கணர், கற்பம் 100/௧௦௦, பாடல் 60/௬௦.

கேளப்பா தரிசனையும் மத்திமையும் கூட்டி

கேடியான தத்துவங்கள் தளரப் போட்டு

வாளப்பா பாவைபோல் இருந்து கொண்டு

வாகாகக் கண்டத்தை அசைத்து வாட்டு

நாளப்பா தினந்தோறும் இதுபோல்செய்து

நலமாக பின்னங்கே வழலை வாங்கே

கொங்கணர், கற்பம் 100/௧௦௦, பாடல் 61/௬௧.

பேணுநீ இந்நீரில் கடுக்காய் மையை

பிதற்றாமல் கரைத்துடனே உள்ளே கொள்ளு

வேணுநீ கொண்டபின்பு பற்பமெல்லாம்

விரேசிக்க லச்சியத்தில் மேவியூது

கொங்கணர், கற்பம் 100/௧௦௦, பாடல் 62/௬௨.

ஆட்டையிலே கண்டநஞ்சு கூமுட்டை போல்

அப்பனே அகன்று ஆரோக்கியமாகும்

கொங்கணர், கற்பம் 100/௧௦௦, பாடல் 64/௬௪.

பாடல்களின் பொருள் மற்றும் வழலை வாங்கல் செய்முறை


கரிசாலை நெய் கல்பம்


கரிசாலை நெய் கல்பமானது உடலுக்குள் இருக்கும் கபத்தை, விசத்தை எடுக்கக் கூடியது. கரிசாலை நெய் கல்பமானது வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமப்படுத்தக் கூடியது. இதனால் சளித் தொல்லை, ஆஸ்துமா, ஈசனோபிலியா, ஜலதோசம், சைனஸ் போன்ற கபம் சார்ந்த அனைத்துத் தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம்.


தேவையானவை:


வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலைச்சாறு அரை லிட்டர்


மிளகுத்தூள் 20 கிராம்


நெய் கால் கிலோ


இதே விகிதாச்சாரத்தில் தேவைக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ செய்து கொள்ளவும்.


செய்முறை:


வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணியின் இலைகளை மட்டும் (பூ, காம்புகள் நீக்கி) எடுத்துக் கொள்ளவும். அதனை நன்கு கழுவவும். இலைகளின் மேலிருக்கும் கழுவிய நீர் உலர்ந்தபின், மிக்சியில் அரைக்கவும். அரைத்துப் பெற்ற விழுது ஒரு பங்குடன், அரைப்பங்கு நெய் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைக்கவும். சிறு தீயில் காய்ச்சவும். சிறிது நேரத்தில் தண்ணீர் வற்றி மெழுகுபோல் வரும். முருக விடக்கூடாது. மெழுகுப் பதம் வந்ததும் 5 கிராம் மிளகுத்தூளை இட்டுக் கலந்து இறக்கி ஆற வைக்கவும். இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும். நன்கு ஆறியபின் ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். குளிர்சாதனப்பெட்டி இல்லையேல் மண்பாண்டத்திற்குள் வைத்துப் பயன்படுத்தவும்.

Comments

Popular posts from this blog