🔥27 #நட்சத்திரகோயில்கள்மூன்றாவது #நட்சத்திரம்கார்த்திகை🔥
🔥27 நட்சத்திரகோயில்கள்மூன்றாவது நட்சத்திரம்கார்த்திகை🔥
அதற்காகக் கடுந்தவம் மேற்கொண்டான். அவ்வாறு அவன் தவமிருந்த திருத்தலம் 'புஷ்கரம்' என்பதாகும். நீண்ட காலம் அப்படி அவன் மேற்கொண்ட தவத்தின் விளைவாக, பகவான் பிரசன்னமானார் எப்படி? ஒரு நதியாக, தீர்த்தரூபியாகக் காட்சி அளித்தார். எனினும் அந்த தரிசனம் பிரம்மனுக்குத் திருப்தி தரவில்லை .)
தான் எதிர்பார்த்த தோற்றம் அதுவல்ல என்ற விரக்தியோடு, மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான் பிரம்மன். அவனுடைய மனத் திண்மையைச் சோதிக்க விரும்பிய பகவான், இந்த முறை நைமிசாரண்யம்' என்ற பெருங்காடாகக் காட்சி தந்தார். செழிப்பும் வனப்பும் மிகுந்த வனமாக வைகுந்தவாசன் காட்சி அருளிய போதும் பிரம்மனின் மனம் அமைதி பெறவில்லை. எங்கும் நிறைந்த பரம்பொருள் தான் பரந்தாமன். அவர் நீராக, நிலமாகத் தனக்குக் காட்சி தந்தபோதிலும் அந்த இயற்கைப் பொலிவில் திருப்தியடையாத அவன், தாராயணனிடம் வெளிப்படையாகவே தனது ஆசையைச் சொல்லிவிட்டான்.
ஓம்..
அக்னியும் முருகனும்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிதேவதை, அஷ்ட திக்கு பாலகர்களில் ஒருவரான அக்னிதேவன் ஆவான். 'அக்னிமூலை என்று சொல்லப்படும் தென்கிழக்கு மூலையே, அவனது இருப்பிடம் அதனால்தான் திருக்கோயிலின் மடைப்பள்ளி மற்றும் வீட்டின் சமையலறை ஆகியவற்றை இந்த மூலையிலேயே அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது
பிரஜாபதிக்கும். சாண்டிலிக்கும் பிறந்தவன் அக்னிதேவன் குமரனது கொடியில் கோழியாக நின்றவன். இவனது வாகனம் செம்மறி ஆடு, வேள்விகளில் அக்னிதேவன் மூலமாகவே அவிர்பாகம் சமர்ப்பிக்கப்படுகிறது. வேள்விகளில் பயன்படுத்தப்படும் 'ஸ்ருக் ஸ்ருவம் தான் இவனது ஆயுதம், உற்சவமூர்த்திகளில், தீச்சுடர்களை மகுடமாகக் கொண்டு இரண்டு முகங்களோடும் மூன்று கால்களோடும் ஏழு தீச்சுடர்கள் ஏந்திய ஏழு கரங்களோடும் காட்சி தருகிறான். திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் அக்னீசுவரர் திருக்கோயிலிலும், கீரனூர் சிவலோகநாதர் திருக்கோயிலிலும் அக்னிதேவனின் அழகிய பஞ்சலோக உற்சவத் திருமேனிகளைக் காணலாம். அக்னிபகவான் ஈசுவரனை வழிபட்ட தலங்களில் எம்பெருமான் அக்னீசுவரர் என்று திருநாமம் கொண்டுள்ளார்
கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தெய்வம் முருகப் பெருமான் ஆகவே. முருகன் உறையும் தலங்கள் எல்லாமே இந்த நட்சத்திரக்காரர்களுக்குப் பரிகாரத் தலங்கள்தான். குறிப்பாக திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வது, இவர்களுக்கு அபரிமிதமான, அபூர்வ பலன்கள் கிடைக்க வழி காட்டும்
ஓம்..
அனந்தசாஸ் புஷ்கரணி
சங்கு சக்கரதாரியாக, திவ்விய மங்கள ஸ்வரூபனாசு. அரச்சாருபத்தில் எம்பெருமான் எனக்குக் காட்சி தரவேண்டும்!"
பரந்தாமன் சிரித்தார் "நூறு அசுவமேத யாகங்களைச் செய்து முடி நீ விரும்பியபடியே தரிசனம் தந்து, நேரடியாக அவிர்பாகம் பெற்றிட வருகிறேன். என்றார்
அப்படியே பிரமித்துப்போய் நின்றுவிட்டான் பிரம்மன் நூறு அசுவமேத யாகங்களா? அதைச் செய்து முடிக்க எத்தனை வருடங்கள் ஆகும் அது தன்னால் சாத்தியமா? சற்றே சோர்ந்து போனான் என்னவானாலும் சரி, தான் விரும்பிய தரிசனத்தைக் கண்டே தீரவேண்டும். ஆனால் இனியும் காலதாமதம் செய்திடவும் மனதில்லை வேறு எளிமையான வழி இருக்கிறதா?' நாராயணனிடமே பிரம்மன் கேட்டான்
இதைத்தானே நாராயணனும் எதிர்பார்த்தார். கலியுலசு மக்களின் துயர் துடைக்க, பூவுலகில் அர்ச்சாவதாரம் எடுத்து ஓரிடத்தில் நிலை கொள்ளவேண்டும் என்ற அவரது விருப்பமும் பிரம்மனின் முயற்சியால் சாத்தியமாகப் போகிறதே. ஆகவே அவர் பிரம்மனிடம் சொன்னார். சத்யவிரத க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஒரேயொரு அசுவமேத யாகம் செய். காஞ்சியில் செய்யும் புண்ணியம் எதுவாயினும் அது நூறு மடங்கு அதிகப் பலனைத் தர வல்லது!"
அதன்படி பிரம்மதேவனும் அத்தி மரங்கள் நிறைந்த வனத்தில் யாகம் செய்தான். எம்பெருமானும் மகிழ்ந்து, அத்திகிரிநாதனாக, அர்ச்சாவதார மூர்த்தியாக, வரதராஜப் பெருமாளாகக் காட்சி தந்தருளினார்
ஓம்..
யாக அக்னியில் தோன்றிய வெப்பத்தால், வரதராஜப் பெருமாள் உற்சவமூர்த்தியின் திருமுகத்தில் ஏற்பட்ட வெப்ப வடுக்களை இன்றும் காண முடிகிறது. பிரம்மாவின் யாகத்தில் அர்ச்சாவதார ரூபியாக எழுந்தருளி அனைவரையும் ஆட்கொண்டதால் பேரருளாளன் என்றும் ஆராதிக்கப்படுகிறார் இந்த வரதராஜன் பாவணதார்த்திஹான், அத்திவாதன் என்றும் ஆழ்வார்களாலும் -ஆசார்யர்களாலும் ஆராதிக்கப்பட்டுள்ளார் இவர்
யாக குண்டத்தில் தோன்றிய உற்சவமூர்த்திக்குத் திருக்கோயில் அமைத்து, அவர் எழுந்தருளியுள்ள மலைக்கு 21 படிக்கட்டுகளையும் புண்ணியகோடி விமானத்தையும் அமைத்தான் பிரம்மதேவன் தேவசிறபி விஸ்வகர்மாவைக் கொண்டு, அத்தி மரத்தால் மூலவிக்கிரகத்தை செய்வித்து பிரதிஷ்டை செய்து, உற்சவமூர்த்தியை திவ்ய மங்கள ஸ்வரூபியாக, சர்வ அலங்காரத்துடன், சாவாபரணதாரியாக, உலகோர் அனைவருக்கும் காட்சி அளித்து அருள் புரியும் வண்ணம், உற்சவமும் நடத்தி அகமகிழ்ந்தான் பிரம்மதேவன், பிரம்மனால் முதன்முதலில் செய்விக்கப்பட்ட உற்சவம் ஆனதால், அது பிரம்மோற்சவம்' என்று அழைக்கப்படலாயிற்று.
ஓம்..
பரிகாரம் தரும் அத்தி மரம்
பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆதி அத்தி வரதன் முற்றிலும் அத்தி மாத்தாலானவர். எம்பெருமானின் ஆணைப்படி, இந்த அத்தி வரதரை அனந்தசரஸ் புஷ்கரணியில் எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். அனந்தசரஸ் திருக்குளத்துக்குள் அமிழ்ந்திருக்கும் ஆதி அத்தி வாதர். இப்போதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து, வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார் இங்கே 18 நாட்கள் வைத்திருந்து -ஆராதிப்பார்கள். ஆமாம் ஆதி அத்தி வரதரை தரிசிக்க, நாற்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கான பரிகார தல விருட்சம் அத்தி, அதனால், ஆதி அத்தி வரதரை காஞ்சி சென்று வணங்குவது நற்பலன்களை அள்ளித் தரும்.
திருக்கோயில்களில் கற்சிலைகள் உருவாவதற்கு முன்னர் தெய்வத் திருமேனிகளை அத்தி மரத்தால் செய்து வழிபட்டனர் ஆண்டுகள் நூற்றுக்கணக்காயினும், அந்த சிலை வடிவம் கெட்டுப் போகாதிருப்பது அத்தி மரத்தின் சிறப்பு. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோழிகுத்தி, வானமுட்டிப் பெருமாள் மூலவர் சிலை அத்தி மரத்தாலானதே. பொதுவாகத் திருக்கோயில் திருப்பணி துவங்கும்போது, அத்திக் கட்டையில் அருட்சக்தியை ஈர்க்கச் செய்து, அதற்கே வழிபாடுகளை நடத்துவர்
ஓம்..
அத்தி இருக்கும் ஆலயங்கள்
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தரும் ஆதி அத்தி வரதர்
சென்னைக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருவொற்றியூர் இங்கு புற்றையே இடமாகக் கொண்டு, தீண்டாத்திருமேனியாக சுயம்புமுர்த்தியாக விளங்குகிறார் வன்மீகநாதர் இக்கோயிலின் தல மரமும் அத்திதான்.
அத்தி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மற்றொரு திருத்தலம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடிக்கு அருகில் ள்ள கானாட்டுமுள்ளூர் ஆகும். கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலம் இது. பதஞ்சலி முனிவருக்கு இந்தத் தலத்தில் இறைவன் அருள் செய்ததால், பதஞ்சலி ஈசுவரர் என்ற திருநாமங் கொண்டுள்ளார்
இது போல அத்தி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டிருக்கும் கோயில்களுக்குச் சென்று கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபடலாம். அல்லது எங்கேனும் தனியே அத்தி மரம் காணப்பெற்றால், அந்த மரத்தை வலம் வந்தும் வழிபடலாம்
பிரம்மாவுக்கு மிகவும் உகந்த அத்தி மரத்தை, பிரம்ம விருட்சம் என்பார்கள், நவக்கிரகங்களில் சுக்கிரனுக்குப் பிடித்தமான சமித்து (மாச்சுள்ளி), அத்தி மூதாதையருக்குச் செய்யும் நேர்த்திக்கடன்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது இது அத்தி சமித்து கொண்டு செய்யப்படும் வேள்வியால் சத்ருநாசம் ஏற்படும்; பில்லி, சூன்யம், ஏவல் போன்ற கெடுதல்கள் நீங்கும், மனோபலம் பெறலாம். பால் வடியும் மரம் என்பதால், கார்மேகங்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி டையது. அத்தி மரச்சுள் ளிகளால் மேற்கொள்ளப்படும் வேள்வியில் வெளிப்படும் புகை, கருமேகங்களை ஈர்த்து மழைபொழியச் செய்யும்
அத்திப் பழங்கள், கண்பார்வைக்கு அருமருந்து ஆகும். அத்தி இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை , குச்சி, வேர் எல்லாமே
ஓம்..
#இதுமந்திரம்
கிருத்திகா அக்னிதேவத்யா:
மேஷ வாகன சமஸ்திதா |
ஸ்ருக் ஸ்ருவாவபீ திவரத்ரு
சதுர்ஹஸ்தா நமாம்யஹம்.
🔥#அக்னிகாயத்ரிமந்திரம்🔥🔥🔥
ஓம் மஜாஜ்வாலாய விதமஹே
அக்னிமக்னாய திமஹி
தந்நோ அக்னி ப்ரசோதயாத்
மருத்துவ குணம் படைத்தவை. அத்தி விதைகள் சர்க்கரை நோய்க்குச் சிறந்தது. பெண்களின் கருப்பை பலவீனமாக இருப்பின், அத்திப் பழத்தோடு பலாப் பழத்தையும், பால், தேன் இவற்றைச் சேர்த்து அரைத்து வயிற்றின் கீழ்ப் பகுதியில் தடவி வந்தால் குணமாகும் என்று ஆயுர்வேத சிகிச்சை முறை கூறுகிறது.
👍#கார்த்திகைநட்சத்திரகுணங்கள்👍
இந்த நட்சத்திரக்காரர்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது: பொதுவாக அறிவாற்றலும், திறனும் மிக்கவர்கள். தூக்கத்துக்கான நேரம் இவர்களைப் பொறுத்த வரை குறைவாகவே இருக்கும். திடபுத்தி உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், உறவினர்களும் நண்பர்களும், சந்தாப்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் மீது விரோதம் காட்டுவார்கள், இவர்கள் பெரும்பாலும் நேர்மையும் நாணயமும் உள்ளவர்களாக இருப்பார்கள்
அதே சமயம் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிந்தால் தவறான வழியில் நடப்பதற்கும் தயாராக இருப்பார்கள் அரசியல் செல்வாக்கும், அதனால் ஆதாயமும் பெறக் கூடியவர்கள் அனுசரித்துப் போக விரும்பாததால், கருத்து வேற்றுமையும் அதனால் சண்டை சச்சரவுகளும் இருந்தவண்ணம் இருக்கும் இனிமையான வார்த்தைகளால் அனைவரையும் கவர்வார்கள் சுற்றத்தாரை விரும்பி வரவேற்கும் குணம் இவர்களுக்கு உண்டு எப்போதும் மகிழ்ச்சியாகக் காணப்படுவர்
ஓம்..
Comments
Post a Comment