🐚🐚🐚ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம் 🐚🐚🐚
விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்து இருப்பவன் என்று பொருள் நாராயணன் என்ற பெயரும் அவருக்கு உண்டு நாரம் என்றால் வெண்ணிற நீர் என்று பொருள் அயனம் என்றால் இடம் என்று பொருள் வெண்மை நிற பாற்கடலில் அவன் இருப்பதால் நாராயணன் அல்லது நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார்
அனைத்து உலகங்களையும் சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என மகாவிஷ்ணு சிறப்பு பெயர் பெற்றுள்ளார் மச்ச அவதாரம் கூர்ம அவதாரம் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் வாமன அவதாரம் பரசுராம அவதாரம் ராம அவதாரம் பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம் ஆகிய ஒன்பது அவதாரங்களை எடுத்துள்ளார் இக்கலியுகத்தில் பத்தாவது அவதாரத்தை எடுக்க உள்ளார்.
மகாவிஷ்ணு சைவ சமயத்தின் நாதனாக விளங்குபவர் அவர் நீல நிற மேனி உடையவர்.சங்கு சக்கரம் இவைகளை கரங்களில் ஏந்தி இருக்கிறார் மார்பில் மாலை மணிகள் ஆகியவற்றை அணிந்துள்ளார் மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை உடையவர்.
வைணவ சம்பிரதாயத்தின் அடிப்படைத் தத்துவம், நாயக-நாயகி பாவமேயாகும் ஸ்ரீமத் நாராயணனை நாராயணனாகக் கொண்டு நம்மை நாயகியராக மெய்மறந்து வழிபாடு செய்வது தான் அவனைச் சேவிக்கக் கற்றுக்கொண்டால் அவனை அடையலாம் பக்தி மார்க்கத்தை விரதமாகக் கொண்டது வைணவமாகும்
வைஷ்ணவ மதத்தின் பரந்தாமா அவை எட்டுவது எளிதான முறையாகக் கூறப்பட்டுள்ளது இதில் விக்ரக ஆராதனைக்கு முக்கியத்துவம் அதிகம். பரிசுத்தமான பக்தியுடன் பெருமாளிடம் சரணாகதி அடைந்து விட்டால் அகங்காரம் அழிந்து ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றி விடுவது சாத்தியம் இவையே வைணவ சமய தத்துவம் ஆகும்
"தேசிகப் பிரபந்தம்" என்ற நூல் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
"இன்னருளால் இனி எனக்கோா் பரமேற்றாமல்
என்திருமால் ! அடைக்கலங்கொள் என்னைன நீயே "
சைவ சமயத்தில் மந்திரங்கள் அஷ்டாச்சரம் எட்டு எழுத்துக்கள் துவய மந்திரம் சரணாகதி சரம ஸ்லோகம் ஆகியவை 3 வகையாக உள்ளன.
ஆனால் "ஓம் நமோ நாராயணா "என்ற எட்டெழுத்து மந்திரம் மிக முக்கியமானது விஷ்ணு காயத்ரி மந்திரத்தில் "நாராயணா" என்ற மந்திரம் வருகிறது தினமும் இறைவழிபாடு செய்யும் பொழுது விஷ்ணுவின் பல மந்திரங்களை சொல்லி பிறகு 108 அர்ச்சனை மந்திரம் சொல்ல வேண்டும் பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது விஷ்ணு காயத்திரி மந்திரத்தை சொல்ல வேண்டும் இனி விஷ்ணு காயத்ரி மந்திரத்தையும் அதன் பொருளையும் பலன்களையும் பார்க்கலாம்.
பொருள்:
நாராயணனை அறிவோமாக . வாசுதேவன் மீது தியானம் செய்கிறோம் .விஷ்ணுவாகிய அவன் நம்மை ஊக்கிச் செயலாற்றச் செய்வானாக.
Comments
Post a Comment