.              

               🎈🎈🎈கடுவெளி சித்தர்🎈🎈🎈


பரந்த வெற்றிடத்தையே தியானம் செய்து சித்தர் ஆனவர் என்பதால் இவர் கடுவெளிச்சித்தர் எனப்பட்டனர்.


இவர் பிறந்த ஊர் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் இடையூா் சங்கேதியில் இருந்து ஒரு கிலோ மீட்டாில் உள்ள கடுவெளியே ஆகும் .இதற்கு பிரம்மமுனி பாடல் சான்றுகள் உண்டு என்றார் "சித்தர் களஞ்சியம் ""சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும் போன்ற நூல்களை இயக்கிய ஆசிரியரான யோகி கைலாஷ்நாத் அவர்கள்.




இவர் பாடல்கள் எளிமையாகவும் இனிமையாகவும், பொருள் நிறைந்து இருப்பதால் காலம் காலமாக  மக்களிடையே நிலைத்து நிற்கின்றன.

முதல் கண்ணியப் பல்லவியாகவும் மற்றவற்றைச் சரணமாக்வும்  கொண்டு ஒரு பாடலாக மட்டுமே இதுாின் 35 கன்னிகளையும் கூறலாம் .இவருடைய பாடல்கள் "ஆனந்தக்களிப்பு "என்ற வகையைச் சேர்ந்தவை. இது பாடி ஆடும் இசை நயம் கொண்டது.



"நந்தவனத்தில் ஓர் ஆண்டி ~அவன்

 நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி 

கொண்டு வந் தான் ஒரு தோண்டி~ மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுஉடைத் தாண்டி"

என்னும் புகழ் பெற்ற பாடல் இவர் இயற்றியதே ஆகும் இவர் காஞ்சிபுரத்தில் சமாதி ஆனார் என்று கூறுவார் இவருடைய பாடல்கள் ஒருவருடன் பெற்றுப் பேரின்பம் அடைவோமே.




                    🔔🔔🔔  ஆனந்தக் களிப்பு 🔔🔔🔔

                               🎻🎹📣  பல்லவி🎵🎤🎧








பொருளுரை :

🌍 என் மனமே ! நீ ஒருவருக்குமே எந்த ஒரு சிறு பாவமும் செய்யா

திருப்பாயாக . ஏனெனில்,நீ பாவம் செய்தால் இயமன் கோபம் அடைவான்.

அவன் அவ்வாறு கோபப்பட்டு உடனே உன் உயிரைப் பறித்துக் கொண்டு

சென்று விடுவான்.அதனால் நீ சிறிதும் பாவம் செய்யாதிருப்பாயாக. 🌏


சொற்பொருள் :

🎈பாபம் ~மனதாலும், உடலாலும், சொல்லாலும் பிறா்க்குத் தீங்கு

விளைவிக்கும் செயல்.⛺


⚽ பிரகதீஸ்வரர்🔔 ☎ 📱




                            







Comments

Popular posts from this blog