🌷  கடன் பிரச்சனையை தீர்க்கும் 

ஸ்ரீதோரண கணபதி பிரசன்ன ஸ்துதி🌷🌷🌷



பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி பிரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்சனைகள் யாவும் நீங்கும்.


ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்rனைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.


சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்


 முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்

காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!

தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)


திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்

திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்

கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே

உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!


பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்

கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே

கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்

விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக


மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்

காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்

சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்

தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!


பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா

தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே

சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!

எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே! 


சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்

இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!

குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்

கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!

தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!





Comments

Popular posts from this blog