🔔🔔🔔உயர்நிலை ஆன்மிக பாச முத்திரை 🔔🔔




இது ஒரு உயர் நிலை ஆன்மீக முத்திரை." பாசம் "என்ற சொல்லுக்கு" கயிறு "என்று பொருள் உண்டு யானையும் கயிற்றால் கட்ட முடியும்.

" யானை" என்பது தந்திர யோகத்தில் கீழ்கண்டவற்றை குறிக்கும் ஒரு குறியீடு.


 💰   பருவுடல் 

📑    தான் என்னும் அகங்காரம்

 🔔   நிலம் எனும் பூதம்

🍓.  மூலாதாரச் சக்கரம்


இவை அனைத்துமே நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கட்டி வைக்கும்" பாசம் "எனும் சக்தியை இந்த முத்திரை வசீகரிக்கும்.

 இவை தவிர, நாம் அனைவருமே பந்தபாசங்கள் எனும் கட்டுகளுக்குள் (பாசம்) சிக்கித் தவிர்க்கின்றோம். இந்த பாசக் கட்டுகள் அறு பட்டால் மட்டுமே ஆன்மீகப் பயிற்சிகளின் மேல் நிலைக்கு செல்ல முடியும் .

மேலும் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளவை மாயையின் கட்டுகளே  இந்த மாயையின் கட்டு களிலிருந்து (பாசத்தில் இருந்து) விடுபடும் போது தான் ஞானமும் ,பூரண ஞானமும் உருவாகும்.

 ஆன்மீகப் பாதையில் உயர்நிலையில் செல்ல விரும்புபவர்கள் இந்த பாச முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் பந்தபாசங்கள் அறுபடும் மாயையின் கட்டுகள் அவிழும் !


செய்முறை கிழே உள்ள படம் பாா்க்கவும்


🍓இரண்டு கை விரல்களையும் மடக்கி ,முஷ்டி உருவாக்குங்கள்.

🍉ஆள்காட்டி விரல்களை (கட்டு விரல்கள்) மட்டும் நிமிர்த்தி,வளைத்து , வலது கட்டு விரலின் நுனியோடு இடது சுட்டு விரலின் நுனியை இணையுங்கள்.

 🍅அடுத்ததாக ,இரண்டு பெருவிரல்களையும் நிமிர்த்தி, இணைந்த கட்டு விரல்களோடு இணையுங்கள்.( படம் காண்க).

🍇 கைகள் இரண்டும் மணிக்கட்டுப் பகுதியில் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டிருக்கட்டும் .

🌰முஷ்டியில் இருக்கும் பிற மூன்று விரல்களையும் வலது-இடது இணைய வேண்டாம்.

 🍄முத்திரையில் இருக்கும் கைகளை மார்புக்கு அருகில் வைத்துக் கொள்ளவும்

🍟 முழு கவனமும் ,சிந்தனையும் வழிபாட்டிலும் முத்திரையிலும் குவிந்து இருக்கட்டும்.

🍓🍓🍓 அமரும் முறை 🍅🍅🍅

🌰தந்த முத்திரைக்கு உள்ளபடி


 🍞சுவாசம்🍎🍎🍎


📢 இயல்பான நடையில் இருக்கட்டும்

 📣சீராகவும் ஆழமாகவும், இருப்பது அவசியம்.

🎈 கும்பகம் மூச்சை உள்ளே அடக்குதல் கூடாது .


              🎈🎈🎈பலன்கள்🎧🎧🎧


📕இந்த முத்திரையைச் செய்யும்போது, காற்று ,நெருப்பு ஆகிய இரு பூதங்கள் இணைந்து செயல்படத் துவங்கும் .(பெருவிரலில் நெருப்பு எனும் பூதத்தையும், கட்டுவிரல்களில் காற்று எனும் பூதத்தையும் கட்டுப்படுத்துகின்றன.)

 📔இதனால் உடலின் சக்தி நிலை அதிகரிக்கும். பிராண சக்தியின் அளவு அதிகரிக்கும்.

☎ உடலில் மனதிலும் தேங்கி நிற்கும் கழிவுகளும், எதிர்மறை எண்ணங்களும் படிப்படியாக அழியும்.

💰 மனம் பண்பாடும் உடல் உறுதியாகும்.

💡 நேர்  சிந்தனைகளும், உயர் சிந்தனைகளும் ,மனதில் நிறையும் .

🏮பந்தபாசங்கள் அகலும்.

 📱மாயையின் கட்டுகள் அறுபடும்.

🚪 ஆன்மீகப் பயணத்தின் அடுத்த கட்டத்தை எட்ட முடியும்.



                💸📦குறிப்பு📬📬📮



தங்களது உலகக் கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் 48 நிமிடங்கள் வரை செய்யலாம்.

 துறவறத்தில் இருப்பவர்கள் தாராளமாக செய்யலாம் .(கட்டாயம் செய்ய வேண்டும் )

சம்சாரிகள் தங்களது உலகக் கடமைகளை எல்லாம் முழுமையாகச்செய்து முடிக்கும் வரையில் இந்த முத்திரை அதிக நேரம் செய்யக் கூடாது .

தினமும் 3 முதல் 16 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும்.


அடுத்த பதிப்பு அங்குச முத்திரை




                    🔔🔔🔔 தேவ வசிய முத்திரைகள்🔔🔔🔔

Comments

Popular posts from this blog