m🐘🐘🐘தந்த முத்திரை 🐘🐘🐘
தந்தங்களுடன் கூடிய யானை முகத்தான் நம் கணேசன் இங்கே" தந்தம்" என்பது வினைகளை அகற்றும் ஒரு சக்தியின் குறியீடு.
எந்த ஒரு செயலைப் புதிதாக புதிதாகத் தொடங்குவதாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டுத் தொடங்குவதே இந்திய மரபு நாம் ஈடுபட போகும் தொழில் அல்லது செயலில் தடைகள் எதுவும் வராமல் இருக்க கணேசன கருணை புரிய வேண்டும்.
ஒரு யானை காட்டில் நடந்து செல்லும் போது எதிர்ப்படும் இடையூறுகளை அகற்றி ,முன்னே செல்ல தந்தங்களே அதற்கு உதவியாக உள்ளன. ஆக இடையூறுகளையும் தடைகளையும் அகற்றும் சக்தியே "தந்தம்" என உருவகம் செய்தனர். அந்த சக்தியை வசீகரிக்கும் முத்திரையே தந்த முத்திரை ஆகும்.
செய்முறை
1 பெருவிரல் தவிர ,பிற நான்கு விரல்களையும் மடக்கி,
உள்ளங்கையைத் தொடவும்
2 ,பெரு விரலை மடித்து மோதிர விரலின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். (முஷ்டி)
அடுத்ததாக, நடுவிரலை மட்டும் மேல் நோக்கி நிமிா்த்துங்கள் இதுவே தந்த முத்திரையாகும்.
பெருவிரலால் அதிக அழுத்தம் தர வேண்டாம் சற்று தொட்டுக்கொண்டு இருந்தால் போதும்.
மனமும் ,கவனமும் உங்களது வழிபாட்டிலும், முத்திரையிலும் குவிந்திருக்க வேண்டும்.
அமரும் முறை
நீங்கள் வழிபடும் முறையை பொறுத்து நின்று கொண்டோ அல்லது அமர்ந்து செய்யலாம்
அமர்ந்து செய்வதனால் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யவும்
ஆசனங்களில் பாிச்சயம் இல்லாதவர்கள் சுகாசனத்தில் செய்யவும்.
படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் படுத்துக்கொண்டே இந்த தந்த முத்திரையை செய்தபடி யானை முகத்தானை மனதிற்குள் வழிபடலாம் ;;தவறில்லை..
சுவாசம்
சுவாசம் உங்களது இயல்பான நடையில் இருந்தால் போதும்
ஆழ்ந்த சீரான சுவாசம் அவசியம் மனம் ஒருமுகப் பட இது உதவும்.
பலன்கள்
தங்களது முன்னேற்றப் பாதையில் குறுக்கே வரும் அனைத்து தடைகளும் அகற்றும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு.
எதிரிகளும் எதிர்ப்புகளும் காணாமல் போகும்.
நீங்கள் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியைத் தேடித் தரும்.
எவ்வளவு நேரம் செய்யலாம்?
💥உங்களது வழிபாடு முடியும் வரையில் இந்த முத்திரையை தொடர்ந்து செய்யுங்கள்
🙌குறைந்தபட்சமாக 8 நிமிடங்களும் செய்தால் மட்டும் நிறைவான பலனை எதிர்பார்க்க முடியும்
🐚அதிகபட்சமாக ஒரு நாளில் 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம் அதற்கு மேல் வேண்டாம்.
🔥🔥🔥இதுபோன்று தேவ வசிய முத்திரைகள் பற்றி நீங்கள் உடனுக்குடன் பார்த்து மகிழ பிரகதீஸ்வரர் முகநூல் பிரவுசர் ஷேர் சாட் whatsapp பார்த்து மகிழுங்கள் சர்வம் சிவார்ப்பணம்🌷🌷🌷
Comments
Post a Comment