🌀சுவீட்சர்லாந்தில் வீற்றிருக்கும் பாவம் தீர்க்கும் துர்க்கை அம்மன்🐚




தலவரலாறு : சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பகுதியில் அமைந்துள்ள அழகிய அம்மன் ஆலயம் துர்க்கை அம்மன் ஆலயமாகும். உலகில் ஏராளமான பக்தர்களால் வணங்கப்படும் தெய்மான துர்க்கையை வழிபடுபவர்கள் சக்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். சிவனின் துணைவியாக கருதப்படும் துர்க்கா தேவி சக்தர்களாலும் சைவர்களாலும் வழங்கப்படுகிறார். இவரே பார்வதி அல்லது உமாமகேஸ்வரியின் அவதாரமாக கருதப்படுகிறார். தீயசக்திகளை அழிப்பதற்காக அனைத்து தெய்வங்களின் சக்திகளையும் ஒன்றிணைத்து பூமியின் பாகங்களைக் கொண்டு உடல் அமைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட மகாசக்தியே துர்க்கை ஆவாள். மேலும் விஷ்ணுவின் சக்கரம், சிவனின் திரிசூலம் போன்ற மகா ஆயுதங்களையும் பெற்றவளாவாள். இத்தகைய ஆற்றல் மிகுந்த துர்க்கை அம்மனின் ஆலயம் 1991-ம் ஆண்டு வழிபாடு நடத்துவதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள இந்து தமிழர்களால் லுசர்ன் பகுதியில் அமைக்கப்பட்டது. மிகச்சிறிய பரப்பளவில் புனித கர்லி பகுதியில் அமைக்கப்பட்ட இக்கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் இந்துக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது. நாளடைவில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானதால் 400 இந்துக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இக்கோயிலை பெரிய அளவில் கட்ட முடிவு செய்தனர்.2000-ம் ஆண்டு அதற்கான இடம் பெறப்பட்டு, மிகப் பெரிய கோயிலும் கட்டப்பட்டது. நிர்வாக குழுவினர், புரோகிதர்கள் மற்றும் ஏராளமான பக்தர்களின் ஒத்துழைப்பால் இக்கோயில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலுக்கான தெய்வங்களின் சிலைகள் இந்தியாவிலிருந்து செய்து கொண்டு வரப்பட்டன. இப்புதிய கோயிலின் மகாகும்பாபிஷேக விழா 2000-ம் ஆண்டு ஜுன் மாதம் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களும் பூஜைகள் நடத்தப்படுகிறது. 

கோயில் நேரங்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி கோயில் திறக்கப்படுகிறது. இதில் மாலை 6.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சயராட்சி பூஜை மற்றும் ஆராதணைகளும், இரவு 8 மணிக்கு அர்ச்சனைகளும் நடத்தப்படுகின்றன. 

கோயில் முகவரி : The Durga amman temple,

Bahnhofstrasse 19a 

6037 Gisikon-Root, 

Luzern,Switzerland.

இணையதள முகவரி : http://durga.bhakthi.net/?web=en


Download for free from the Store »




Comments

Popular posts from this blog