
🌹ஜீவ சமாதி 🌹 💥ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர்💥 🔥திருவண்ணாமலை🔥 ஸ்ரீ ஈசானிய ஞான தேசிகர் ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் சித்தர் ஆழ்ந்த தவம் இருக்கத் தொடங்கி விட்டால்.... நாள் கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார். பசி, உறக்கம் எதுவும் இடையூறாக இல்லாமல் அவரது தவம் நீடிக்கும். எப்போது நினைவுக்கு திரும்புவார் என்பதை சொல்ல முடியாது. அந்த சமயத்தில் இரண்டு புலிகள் காட்டுக்குள் இருந்து வரும். ஈசான்ய ஞான தேசிகரின் தவம் கலைந்து விடாமல் இருக்கும் வகையில் அந்த புலிகள் காவல் காக்கும். நல்லவர்கள் வருகிறார்கள் என்றால் அவருக்கு பாதுகாவலர்கள் போல இருக்கும் இரு புலிகளும் தாமாகவே எழுந்து சென்று விடும் தீய எண்ணம் உடையவர்கள் வந்தால் புலிகள் கர்ஜித்து, பாய்ந்து பயம் காட்டி அவர்களை விரட்டி விடும். அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனுமே இருபுலிகளாக வந்து ஈசான்ய ஞானதேசிகருக்கு காவல் காத்தனர் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவுக்கு அண்ணாமலையார் மனதில் ஸ்ரீஈசான்ய ஞானதேசிகர் இடம் பிடித்திருந்தார். ஒரு புலி இடது புறமும், மற்றொரு புலி வலது புறமும் படுத்திருக்க மத்தியில் ஈசான்ய ஞானதேசிகர் தவம் இருப்பார். சுமார் 230 ஆண்டுகளுக்கு மு...