🌹.பிரணவச் சக்கரம்🌹

🌹.பிரணவச் சக்கரம்🌹 'ஓம்' என்ற பிரணவ மந்திரம் அகார, உகார, மகார, நாத, ஆகிய இவைகளின் கூட்டுறவால் விளைந்ததாகும். சிவபெருமானும் பிரணவ வடிவமானவன். 'ஓ' என்னும் ஓரெழுத்தாலேயே உலகெங்கும் நிறைந்து நின்று; அகாரமும் உகாரமும் ஆகிய ஈரெழுத்தாலே சிவமும், சக்தியுமாகிய இருவராகப் பொருந்தி நின்று; அகார உகார மகாரமாகிய மூவெழுத்தாலே சிருஷ்டியின் முகமாய் காட்சியளிக்கின்ற ஒளிப்பிழம்பாகிய சிவத்தை ஓங்கார பிரணவச் சக்கரமாக அமைத்து அறிமுகப்படுத்துகின்றார் திருமூலர். நாடும் பிரணவ நடுவிரு பக்கமும் ஆடு மவர்வாய் அமர்ந்தங்கு நின்றது நாடு நடுவுண் முகநம சிவாய வாடுஞ் சிவாயநம புறவட்டத் தாயதே. -திருமந்திரம் 902 ஓம்.. பிரணவத்தை நடுவாகக் கொண்டு இரு பக்கமும் சிவசக்திகளாய்ப் பிரிந்து நின்று தோற்றம் தந்து, 'வ', 'ய' என்னும் எழுத்துக்களை மேலும் கீழுமாகப் பொருந்தி, 'நம' என்பதைப் பாத எழுத்தாக உருக்கொண்டு, நடுவில் ஓங்கார நிலையும் 'நமசிவய' என்பது உள்வட்டமாயும் 'சிவயநம என்பது புறவட்டமாயும் கொண்டு பிரணவ சக்கரம் அமைக்கப் படுகின்றது. இதன்கண் ஓங்கார நடுவில் சிவமும், நடுவட்டத்தில் ...