🌹கலியுகப் பெருமாள் பற்றிய அறிய சிறப்பு தகவல்கள்!🌹
🌹கலியுகப் பெருமாள் பற்றியஅறிய சிறப்பு தகவல்கள்!🌹
இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்.🌎🌍
🌹சர்வம் சிவார்ப்பணம்..
🌹ஓம்..
🌹இன்று! சுபகிருது வருடம், கார்த்திகை 12, திங்கள் கிழமை 28.11.2022,...
வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 6:24 மணி வரை, அதன்பின் சஷ்டி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 3:24 மணி...
நல்ல நேரம்: காலை 6:00 - 7:30 மணி. ராகு காலம்: காலை 7:30 - 9:00 மணி. எமகண்டம்: காலை 10:30 - 12:00 மணி...
பரிகாரம்: தயிர் சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம். பொது: திருவோண விரதம், சிவபெருமான் வழிபாடு...
ஓம் நமோ நாராயணா
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு
என பெருமாளிடம் நமக்கு வேண்டிய மங்களங்களைப் பிரார்த்தித்துப் பெறவேண்டும்.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் 9அவதாரம் எடுத்து முடித்து 10வது அவதாரம் எடுக்கஇருக்கிறார். அவரது திருவுருவம் ஒவ்வொரு அவதாரத்திலும்ஒவ்வொரு தோற்றத்துடன் இருக்கும்.
இங்கு நாம் காண இருப்பது வித்தியாசமான அபூர்வ காட்சிகளைத்தான்.
12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெருமானின் பெருமையை பறை சாற்றுகிறது. நம்மாழ்வார் அதிகமாக 1296 பாசுரங்களையும், திருப்பாணாழ்வார். குறைவான 10 பாசுரங்களையும் பாடியுள்ளனர். 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 82 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த 108 திவ்ய தேசங்களில் நாம் 106 திவ்ய தேசத்தைக் காணமுடியும். மற்ற இரண்டும் இந்த தில உலகில் இல்லை. அவை 1. திருப்பாற்கடல் 2 திருப்பரமபதம் ஆகியவை. சோழநாட்டில் 40 திவ்ய தசங்களும் பாண்டிய நாட்டில் 18-ம், மலை நாட்டில் 13-ம், டுநாட்டில் 2-ம், தொண்டை நாட்டில் 22-ம் வடநாட்டில் --ம், நில உலகில் பார்க்க முடியாதவை 2-ம் ஆகிய 108 வ்ய தேசங்கள் உள்ளன.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைப்போர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
என எம்பெருமானை வணங்கி அருள் பெறுவோம்.
பெருமாளை நாம் பள்ளிகொண்ட பெருமாளாகவோ அல்லது ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் பெருமாளாகவோ அல்லது வெங்கடாசலபதியாக தனித்து நிற்கும் பெருமாளாகவோ நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கோவை அருகே உள்ள காரமடை என்னும் ஊரில் பெருமாள் லிஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
என எம்பெருமானை வணங்கி அருள் பெறுவோம்.ங்க வடிவில் சுயம்புவாக காட்சி தருகிறார். இந்த அரிய காட்சியை நாம் இங்குதான் காணமுடியும். 221. பெருமாளுக்கு வில்வ இலையில் அர்ச்சனை
வில்வ இலை கொண்டு சிவனுக்கும் துளசியைக் கொண்டு பெருமாளுக்கும் அர்ச்சனை செய்வது மரபு. இந்தியாவில் ஒரே ஒரு கோயிலில்தான் பெருமாளுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அந்தக் கோயில் திருப்பதி-திருமலை. திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நாம் அரியும் சிவனும் ஒன்று என்று தெரிந்து கொள்ளலாம்.
222. நான்கு திருக்கோலங்களில் பெருமாள்
திருநீர்மலையில் பெருமாளை நாம் நான்கு திருக்கோலங்களில் காணலாம். நின்றான். இருந்தான், கிடந்தான், நடந்தான் என காட்சியளிக்கிறார்.
நின்றான் கோலத்தில் ஸ்ரீநீர்வண்ணராகவும் இருந்தான் கோலத்தில் ஸ்ரீசாந்த நரசிம்மராகவும் கிடந்தான் கோலத்தில் ரெங்கநாதராகவும் நடந்தான் கோலத்தில் உலகளந்த பெருமாளாகவும் அருள் தருகிறார்
ஓம்..
.223. ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் தரும் பெருமாள்வைகாசி ஆந்திராவில் உள்ள சிம்மாசலத்தில் உள்ள நரசிங்கப் பெருமாளை ஆண்டுக்கு ஒருமுறை விசாகத்தன்றுதான் முழுமையாகப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் சந்தனக் காப்பால் மறைத்து விடுவார்கள்.
224. மிகவும் பெரிய பள்ளி கொண்ட பெருமாள்
பொன்னேரிக்கும் மீஞ்சூருக்கும் நடுவே உள்ள தேவதானம் பெருமாள்தான் மிகவும் பெரிய திருவுருவத்தை உடைய பள்ளி கொண்ட பெருமாள்.
225. பெருமாள் கோயிலில் அல்லா பூஜை நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடைபெறுகிறது.
226. பெருமாளின் மார்பில் சிவலிங்கம்
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் உள்ள உற்சவ பெருமாளின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது. இவரது கையில் திருமணத்தின் பொழுது தாரை வார்த்துத் தரும் பாத்திரம் இருக்கிறது.
227. ஆவுடையார் மீது பெருமாள்
பொதுவாக கோயில்களில் ஆவுடையார் மீது லிங்கம்தான் அமைந்திருக்கும். திருபாற்கடல் என்ற ஊரில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்குப் பதிலாக பெருமாள் நின்று கொண்டிருக்கிறார்.
228. தன் கரத்திலே சயனம் கொண்ட பெருமாள்பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மீதுதான் சயனக் கோலம் கொண்டிருப்பார். ஆனால் மாமல்லபுரம் ஸ்தல சயனம் பெருமாள் கோவிலில் பெருமாள் தரையில் கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு சாய்வாக நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
229. மகாவிஷ்ணுவின் மடியில் மகாலெட்சுமி
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் உள்ள அக்கூர் என்னும் ஸ்தலத்தில் உள்ள அம்புஜவல்லி நாயகி சமேத லெட்சுமி நாராயணன் கோவிலில் மகாவிஷ்ணு கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்க அவரது இடதுபக்க மடியில் மகாலெட்சுமி அமர்ந்திருக்கிறார். இது எங்கும் காணமுடியாத அரிய காட்சி இந்த கோயில் திருமலைக்கு நிகரான கோயில் எனப் போற்றப்படுகிறது.
230. பெருமாளுக்கு அருகில் கருடாழ்வார்
பொதுவாக பெருமாள் கோயில்களில் கருடாழ்வார் சன்னதி பெருமாளுக்கு எதிர்புறம் இருக்கும். கருடாழ்வாரும் பெருமாளை வணங்கியபடி இருப்பார். ஆனால் தேரழுந்தூரில் பெருமாளின் இடதுபுறம் கருடாழ்வாரும் வலதுபுறம் பிரகலாதரும் நின்று கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னாரின் இடதுபுறம் கருடாழ்வாரும் வலதுபுறம் ஆண்டாளும் நின்ற கோலத்தில் சுட்சி தருகிறார்கள். அதுபோல ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள பெருங்குளத்தில் கருடாழ்வார் உற்சவப் பெருமாளுக்கு அருகில் இருக்கிறார்.
231. மூன்றுவாசல் வழியே பெருமாளின் தரிசனம்
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், திருவட்டாறு ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் பெருமாளை சிரசு, உடல், திருவடி ஆகிய மூன்றையும் மூன்று வாசல் வழியாக சேவிக்கலாம்.
232. சந்தனக் கட்டை வடிவில் பெருமாள்
கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக் கட்டை வடிவில் வைத்து அபிஷேக அராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு சக்கரம் இருக்கிறது.
ஓம்..
233. பெருமாள் கோயிலில் பெரிய கார்த்திகை
விழா காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் வைணவர்கள் பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள். இங்கு பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம்.
234.எட்டுவகை சயனங்களில் எம்பெருமாளின் கோலம்
புஜங்க சயனம்
ஸ்ரீரங்கம், அன்பில், திருஆதனூர்,
திருவள்ளூர், கபிஸ்தலம்,
திருவரம்பனூர்
உத்தான சயனம்
கும்பகோணம்
திருப்புல்லாணி
தர்ப்ப சயனம்
மாமல்லபுரம்
திருச்சித்திர கூடம்
தல சயனம்
போக சயனம்
மாணிக்க சயனம் வடபத்ர சயனம்
திருநீர்மலை
வீரசயனம்
ஸ்ரீவல்லிபுத்தூர்
திரு இந்தளூர்
235. சமுத்திரராஜனுக்கு தரிசனம் தந்த ஊர்
திருமாலையும் திருமகளையும் நீரில் தரிசித்த சமுத்திர ராஜனுக்கு நிலத்தில் பெருமாள் காட்சி தந்த ஊர் திருநின்றவூர்.
236. தாமாகத் தோன்றிய எட்டு சுயம்பு பெருமாள் ஸ்தலங்கள்
1.நாங்கு நேரி
2. பத்ரி நாராயணம்
3.முக்தி நாராயணம்
4. நைமி சாரண்யம்
5.புஷ்கரம்
6.திருவேங்கடம் 7. ஸ்ரீமுஷ்ணம்
8. திருவராகம்
237. நவதிருப்பதிகளும் நவக்கிரகங்களும்
நவதிருப்பதிகளும் அவற்றிற்கு உரிய நவக்கிரகங்களும் பின்வருமாறு:
1.ஸ்ரீவைகுண்டம்
2. திருவரகுணமங்கை (நத்தம்)
சுக்கிரன்
3. திருப்புளிக்குடி
சூரியன்
சந்திரன்
4. திருக்குளந்தை (பெருங்குளம்)
செவ்வாய்
(ஆழ்வார் திருநகரி) புதன்
5.திருக்குருகூர் 6.திருக்கோளூர்
குரு
7.திருப்பேரை
சனி
8. திருத்தொலை வில்லிமங்கலம்
(இரண்டைத் திருப்பதி) ராகு, கேது
238. ஆதிசேசன் குடை பிடிக்க நின்ற பெருமாள்
பொதுவாக பெருமாள் ஆதிசேசன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேசன் குடை பிடிக்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
239. கர்ப்பகிரகத்தில் கருடாழ்வார்
திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம் அல்ல) பெருமாள் ஆதிசேசன் மேல் சயனித்தபடி இருக்க அவருடைய கை ஆதிசேசனுக்கு வெளியே வர அந்தக்கையை கருடாழ்வார் தாங்கிக் கொண்டிருக்கும் காட்சியை காணலாம். கருடாழ்வார், ஆதிசேசன், பெருமாள் மூவரும் கர்ப்பக் கிரகத்தில் உள்ள ஸ்தலம் திருவரங்கம் ஆகும்.
ஓம்..
240. ஏழுதலை நாகத்தில் ஸ்ரீரங்கநாதர்
கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் ஸ்ரீரங்கநாதர் ஏழுதலை நாகத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். இவரை திப்பு சுல்தான் தன்னுடைய அரண்மனையில் இருந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள்.
241. தாயார் சன்னதி இல்லாத பெருமாள் கோவில்
திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோவில் குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவிலிலும் தாயாருக்கு சன்னதி இல்லை. இங்கு பெருமாளின் பெயர் வெங்கடாசலபதி.
242. கல்கருடன் வாகனமாக உள்ள பெருமாள்
நாச்சியார் கோவிலில் உள்ள பெருமாளின் வாகனம் கல் கருடன். இந்த கல் கருடனே உற்சவத்தும் வருவார். இதுபோல கல் கருடன் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கல் கருடனுக்கு மூக்கில் வேர்க்கும். கல் கருடனை கோவிலில் இருந்து வெளியே தூக்கிக் கொண்டு வர அதன் எடை அதிகரிக்குமாம். முதலில் 4 போர், பிறகு 8 பேர் பிறகு 16 பேர் என தூக்கிக் கொண்டு வருவார்கள்.
243. இலுப்பை மரத்தால் ஆன பெருமாள்
திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி. இவரது வலது கையில் சங்கு உள்ளது.
244. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. டது கையில் சங்கு வைத்திருக்கிறார். சக்கரம் கிடையாது. இங்கு உள்ள வரதராசர் சன்னதியில் மூலவர் கருடன் மேல் அமர்ந்தகோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எல்லாமே இரண்டுதான். ஆண்டுக்கு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். கோபுரம் இரண்டு, கொடிமரம் இரண்டு, பலிபீடம் இரண்டு.
245. ஒரே சன்னதியில் பெருமாளும் தாயாரும் நாச்சியார் கோவிலில் ஒரே சன்னதியில் பெருமாளும் தாயாரும் எழுந்தருளியிருக்கிறார்கள். பெருமாள் பெயர்
ஸ்ரீவாசுதேவன். தாயார் பெயர் ஸ்ரீவஞ்சுள வள்ளித் தாயார். 246. சிம்ம மூர்த்தியாக நரசிம்மர்
தஞ்சாவூர் மாமணிக் கோவிலில் உள்ள பெருமாள் நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி தருகிறார். சாதாரணமாக யாளி முகத்துடன் திகழும் நரசிம்மர் இங்கு சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார்.
247.18 கருடச் சேவை நடைபெறும் பெருமாள் கோவில் பொதுவாக பெருமாள் கோவிலில் 12 கருட சேவைகள் தான் நடைபெறும். ஆனால் தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீநீலமேகப் பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று 18 கருட சேவைகள் நடைபெறும்.
248. சிவாலயங்களில் உள்ள பெருமாள் சன்னதி
பின்வரும் சிவாலயங்களில் பெருமாளுக்கு சன்னதி உள்ளது. 1. கச்சி ஏகம்பம், 2. சிதம்பரம், 3. சிக்கல், 4. கொடிமாடச் செங்குன்னூர், 5. செய்யாறு, 6. திருநெல்வேலி, 7, திருநாவலூர், 8.பவானி, 9. திருப்பழனம், 10. திருப்பத்தூர், 11. கொடுமுடி, 12.திருவக்கரை.
கூடிய ஆதிசேஷன் தனி சன்னதி
திருநின்றவூரில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் ஆதிசேஷனுக்கு என உருவோடு கூடிய தனிசன்னதி உள்ள ஒரே ஸ்தலம் ஆகும். திருவாகிய திருமகள் வந்து நின்று தவம் புரிந்த ஸ்தலம் ஆதலால் திருநின்றவூர் என்று பெயர்
ஓம்..
பெற்றது. வருண பகவான் இலக்குமி தேவியை "என்னைப் பெற்ற தாயே" என அழைத்ததால் தாயாரின் திருநாமம் என்னைப் பெற்ற தாயார். 250. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும்
அத்திவரதர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர் இத்திருக்கோயிலின் அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் தனியே ஒரு அறையில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தருவார். இதற்கு முன்பு 1979ஆம் ஆண்டு அத்திவரதர் எழுந்தருளி இவ்வாலயத்தின் வசந்த மண்டபத்தில் ஒரு மண்டல காலம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இனி இவரது தரிசனம் 2019ஆம் ஆண்டு கிடைக்கும். இவர் அத்தி மரத்தால் ஆனவர்.
251.மூன்று நிலைகளில் பெருமாள்
காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் திருக்கோவிலில் பெருமாள் நின்றான், கிடந்தான், இருந்தான் என மூன்று நிலைகளில் காட்சி தருகிறார். இதுபோல திருநெல்வேலியில் உள்ள கரிய மாணிக்கம் பெருமாள் கோயிலிலும் பெருமாளை காணலாம்.
252. நான்கு திவ்ய தேசங்கள் உள்ள ஒரே பெருமாள் கோயில்
காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் மட்டும் தான் நான்கு திவ்ய தேசங்கள் உள்ளது. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு சன்னதிகளும் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னனாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்களும் உள்ளன. இங்கு ஊரகம் என்னும் சன்னதியில் 5 அடி உயரமும் அகலமும் உடைய புடைப்புச் சிற்பமாக பாம்பு உள்ளது.
253. பெருமாள் கோயிலில் சிம்ம வாகனம்
திருப்பதி பெருமாள் கோயில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாக இருந்தாலும் இங்கு மதில் சுவர் மேல் சிம்ம வாகனம்தான் உள்ளது. கருடன் இல்லை.
254. வேதங்களை தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் பெருமாள்
திருச்சி முசிறி சாலையில் உள்ள வேத நாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். இதனால் இவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.
255. பிரார்த்தனை மூர்த்தியாக கருடாழ்வார்
108 திவ்ய தேசங்களில் பிரார்த்தனை மூர்த்தியாக கருடாழ்வார் விளங்குவது கும்பகோணம் நாச்சியார் கோவிலில் மட்டும்தான். விவாகம் நடக்கவும் குழந்தைபேறு கிடைக்கவும் பூர்வ ஜென்ம பாவம் தொலையவும், வேலை கிடைக்கவும், தொழில் அபிவிருத்தியடையவும், சரீர நோய் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
256. அட்சய திருதியை அன்று அருள் தரும் 16 பெருமாள்
கும்பகோணமும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 பெருமாள் கோயில்களில் இருந்து 16 பெருமாள் கருட வாகனத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை அன்று பெரிய கடைவீதியில் அருள் தருகிறார்கள்.
257. ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்டபெருமாள்ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமெய்யம் (திருமயம்). ஒரே மலையை குடைந்த சிவன் திருமாலின் குடவரைக் கோயில் இதுதான். இங்குப் பெருமாளின் பெயர் சத்யமூர்த்தி.
ஓம்..
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடுக்கு அருகே உள்ளது திருவிடந்தை, திருவாகிய இலக்குமியை இடதுபக்கத்தில் எந்தையாகிய பெருமாள் கொண்டு இருப்பதால் திருவிடந்ததை எனப் பெயர் பெற்றது. இங்கு உள்ள நித்ய கல்யாணப் பெருமாளின் உற்சவர் திருமுகத்தில் இயற்கையாகவே திருஷ்டிப்பொட்டு உள்ளது. தந்தத்தில் பல்லக்கு உள்ள ஒரே வைணவத் திருத்தலம் இது ஒன்றுதான். (வரலாற்றுத் தொன்மை கருதி இதை இப்பொழுது உபயோகிப்பது இல்லை) தினசரி இங்குப் பெருமாளுக்கு திருமணம் நடைபெறுவதாக வழக்கு. 108 திவ்ய தேசங்களில் ஒன்று மூலவர் பெயர் ஆதிவராகர்.
259. மூன்று தலங்களில் மூன்று கருவறை உள்ள பெருமாள் கோயில் உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாள் மற்றும்
ஸ்ரீவைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ஒன்றின் மீது
ஒன்றாக மூன்று தளங்களில் மூன்று கருவறை உள்ளது. இந்த
கோயில் விமானம் அஷ்டாங்க விமானமாக உள்ளது.
260.லெட்சுமியை ஆதரவாக அணைத்த பெருமாள்
திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வரகூர். இங்கு வேங்கடேசப்பெருமாள் லெட்சுமி நாராயணனாக காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் பெருமாள் லட்சுமியை ஆதரவாக அணைத்திருக்கிறார். தாயாரும் பெருமாளை அன்புடன் கொண்டிருக்கிறாள். பிரிக்க முடியாத சக்தியாக லட்சுமி நாராயணப் பெருமாள் இங்கு அருள் தருகிறார். தழுவிக்
261.அப்பக்குடத்தான் பெருமாள்
திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கோவிலடி. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இங்குக் கருவறையில் பெருமாள்பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கிறார். இடது கரம் உபரிசரவசு என்ற பாண்டிய மன்னனை ஆசீர்வதித்தபடி உள்ளது. வலது கரம் பாண்டிய மன்னன் தரும் அப்பம்' நிறைந்த குடத்தின் மீது உள்ளது. எனவே இவருக்கு அப்பக்குடத்தான் என்று பெயர். 262. கவசத்துடன் உற்சவப் பெருமாள்
கல்யாணபுரம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் உற்சவப் பெருமாளுக்கு கவசம் உள்ளது. இந்தக் கவசத்தை வருடத்திற்கு ஒருமுறை அகற்றி திருமஞ்சனம் நடைபெறுகிறது.
263. நான்கு தேவியருடன் நம்பெருமாள்
திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் ஆகிய நான்கு தேவியருடன் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். 264. பெருமாளின் பாதத்தில் சூரிய வணக்கம்
நவதிருப்பதிகளில் ஒன்றான திருவைகுண்டத்தில் வைகுந்தநாதரின் பாதத்தை ஆண்டுக்கு இருமுறை சூரியபகவான் தன் கதிர்களால் வணக்கம் செய்து செல்லுகிறான். சித்திரை 6, ஐப்பசி 6 ஆகிய நாட்கள் அவை. இதற்காகவே கொடிமரம் சற்று விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவருடன் தாயார் இல்லை.
265. அப்பர் புகழ்ந்து பாடிய பெருமாள்
சைவ சமய நால்வரில் அப்பர் வெங்கடேசப் பெருமாளைப் பாடியுள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து செங்கற்பட்டு செல்லும் வழியில் பாலாற்றை கடந்தால் திருமுக்கூடல் என்ற ஊரை அடையலாம். இங்குப் பெருமாள், விஷ்ணு, சிவன், பிரம்மா என்ற மும்மூர்த்தியின் ஸ்வரூபனாக இருக்கிறார். தேவாரம் பாடிய அப்பர் இப்பெருமாளைப் புகழ்ந்து பாடியதால் இவருக்கு 'அப்பர் வெங்கடேசப் பெருமாள்' என்ற பெயர் வந்தது.
ஓம்..
266. முக்கண் உடைய பெருமாள்
சிவனைப் போல் முக்கண் உடைய பெருமாளை நாம் காண சிங்கப்பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இது ஒரு குடவறைக் கோயிலாகும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன. விலை மதிப்புள்ள கற்களால் செய்யப்பட்டவர் என்பதால் வஸ்திர கவசம் சாத்திய நிலையில் அருளுகிறார். தாயார் பெயர் அகோபில வல்லித் தாயார். இங்குப் பன்னிரெண்டு ஆழ்வார்களுக்கும் தனி சன்னதி உள்ளது. உற்சவர் பெயர் பிரகலாத வரதன்.
267. தேர் வடிவத்தில் கர்ப்பகிரகம் அமைந்த பெருமாள்
கோயில்
கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலின் கர்ப்பகிரகம் தேர்வடிவத்தில் நான்கு சக்கரங்களுடன் கூடிய பெரிய தேர் போல கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. சாரங்கம் என்றால் வில். ராமாவதாரத்தை நினைவுப்படுத்தும் கோயில் பெருமாள் இங்குக் கிடந்த கோலத்தில் அருள் தருகிறார்.
268. விஷ்ணுவே மூலவர்
பகவான் விஷ்ணுவே உருவாக்கிய மூலவர் மூவர். 1. குருவாயூர் கிருஷ்ணன், 2. அம்பலப்புழா கிருஷ்ணன், 3. திருப்பணித்துரா (கொச்சின் அருகே) ஸ்ரீவேணுகோபால சுவாமி இந்த மூன்று கோயில்களிலும் பால்பாயசமே சிறப்பான பிரசாதம்.
269. காலை மடித்து அமர்ந்த நிலையில் பெருமாள்
திருச்சி மாவட்டம் வேம்பத்தூரில் வெற்றி பெருமாள் கோயிலில் பெருமாள் ஒற்றைக் காலை மடித்து உட்கார்ந்த நிலையில் அருள் தருகிறார். இதுபோல பெருமாள் அமர்ந்த கோலத்தை வேறு வைணவத் தலங்களில் காண இயலாது.
270. ஒரே கருவறையில் பெருமாளும் சிவனும்
திண்டுக்கல் அருகே உள்ள அம்மைய நாயக்கனூரில் உள்ள கோயிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் உள்ளனர். பெருமாள் தேவியர் இருவருடன் நிற்கிறார். இங்குச் சிவன் பெயர் 'கதலீஸ்வரர்' பெருமாள் பெயர் 'கதிர் நரசிங்கப் பெருமாள் கோயிலின் பெயர் 'கதலி நரசிங்கப்பெருமாள் 'கோயில்' தமிழ்நாட்டில் அரியும் அரனும் ஒரே கருவறையில் அமர்ந்திருக்கும் கோயில் இது ஒன்றுதான்.
271. பிரகலாதனை ஆசிர்வதிக்கும் பெருமாள் நாகப்பட்டிணம் நீலமேகப் பெருமாள் ரங்கநாதன் கோயிலில் அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கல விக்கிரகம் உள்ளது. ஒரு கை பிரகலாதனின் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹத்தமாகவும் ஏனைய இரண்யவதம் செய்தபடியும் இருக்கின்றன. கைகள்
272. திருப்புளியங்குடி பெருமாள்
நவதிருப்பதிகளில் ஒன்று திருப்புளியங்குடி இங்கு மூலவர் பெயர் காய்சின வேந்தன். இவருக்கு எண்ணெய் காப்பு செய்ய 250 லிட்டர் தேவைப்படுகிறது. இலக்குமியும் பூமாதேவியும் பெரிய உருவத்துடன் பெருமாளின் பாதத்தின் அருகில் அமர்ந்துள்ளார்கள். ஆதிசேஷன் மீது 12 அடியில் பெருமாள் பள்ளி கொண்டுள்ளார்.
273. பெருமாளது வித்தியாசமான சயனங்கள்
108 வைணவ தேசங்களிலும் பெருமாள் ஒவ்வொரு கோலத்தில் காட்சியளிக்கிறார். பெரும்பாலும் நின்ற திருக்கோலம், புஜங்க சயனம் வீற்றிருந்த திருக்கோலம் ஆகியவற்றில்தான் காட்சியளிப்பார், சில தேசங்களில் மட்டும் வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். அவை:
ஓம்..
திவ்யதேசத்தின் பெயர்
காட்சிதரும் கோலம்
ஆதிசேஷ சயனம்
1.திருக்குடந்தை
2.திருஇந்தளூர் (மாயவரம்)
வீரசயனம்
3. சிதம்பரம் சித்திரகூடம்
போகசயனம்
உலகளந்த கோலம்
4.காஞ்சிபுரம்
தர்ப்ப சயனம்
5.திருப்புல்லாணி
வ்யூக நிலை ஆதிசேஷ சயனம்
6.திருப்பாற்கடல்
62 தேசங்களில் நின்ற திருக்கோலத்திலும் 21 தேசங்களில் புஜங்க சயனத்திலும் 19 திவ்ய தேசங்களில் வீற்றிருந்த திருக்கோலத்திலும் காட்சி தருகிறார்.
274. ஒரே தலத்தில் ஒன்பதுவகை திருக்கோலம் ஆந்திரா மாநிலம் கடப்பா அருகில் உள்ள அகோபிலம் மலைக்குடவரைக் கோயிலில் பெருமாள் ஒன்பது வகைத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அவை அகோபில நரசிம்மர், வராஹ நரசிம்மர், மாலோல நரசிம்மர்,
யோகானந்த நரசிம்மர், பாவந நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர், சக்கர வட நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜூவாலா நரசிம்மர் ஆகும்.
275. தினசரி எண்ணெய் குளியல் செய்யும் பெருமாள்
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினசரி லிட்டர் எண்ணெய் 3 சாத்தப்படுகிறது. பிறகு இது பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது ஒரு சுயம்பு வைணவத்தலம். பெருமாளின் பெயர் வானமாமலைப் பெருமாள். இவரது பாதுகையில் நம்மாழ்வரின் திருஉருவம் உள்ளது.
276. திருக்கோஷ்டியூர் பெருமாள் சிவகெங்கை அருகே உள்ள திருக்கோஷ்டியூரில்
பெருமாள் ஐந்து நிலைகளில் அருள் தருகிறார் தரைத்தளத்தில் நர்த்தன கிருஷ்ணன் ஆகவும் முதல் தளத்தில் சயனக் கோலத்திலும் இரண்டாம் தளத்தில் நின்ற கோலத்திலும் மூன்றாம் தளத்தில் அமர்ந்த கோலத்திலும் நடந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் விமான நிழல் தரையில் விழுவதில்லை. இங்கு உள்ள உற்சவர் பெயர் சௌமிய நாராயணப் பெருமாள். இவர் தானம் வாங்கும் நிலையில் கையை வைத்திருக்கிறார்.
திருக்குறுங்குடியிலும் பெருமாள் 5 கோலங்களில் காட்சி தருகிறார். நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, பாற்கடல் நம்பி, திருமலை நம்பி என 5 கோலங்கள்.
277. பள்ளி கொண்ட ராமர்
சுவாமிமலைக்கு அருகே உள்ள திருப்புள்ளம் பூதங்குடி
என்னும் ஸ்தலத்தில் சங்கு சக்கரம் மற்றும் நான்கு
கரங்களுடன் ராமர் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
பள்ளிகொண்ட ராமர் வேறு எங்கும் இருப்பதாகத்
தெரியவில்லை. 278. பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர் சீதை
இந்தியாவிலேயே இராமர் இரண்டு இடங்களில் மட்டும்தான் பட்டாபிஷேகக் கோலத்துடன் காட்சி தருகிறார். ஒன்று அவர் பிறந்த பூமியான அயோத்தி. மற்றொன்று நமது தமிழகத்தில் உள்ள கும்பகோணம் ஆகும்.
279. சீதையின் கைபிடித்த ராமர்
மதுராந்தகத்தில் இராமபிரான் சீதையின் கையைப் பிடித்தபடி காட்சி தருகிறார். இடது பக்கம் இலக்குமணன் நிற்கிறார். இதுபோல சிக்மகளூர் அருகே உள்ள ஹிரேமகளுரிலும் காணலாம்.
ஓம்..
280. கதையுடன் ராமர்
திருச்சூர் வடக்குநாதர் சுவாமிகோயிலில் ராமர் சங்கு, சக்கரம் இவற்றுடன் 'கதை'யையும் கையில் பிடித்தபடி காட்சி தருகிறார். தனது சீடன் ஆஞ்சநேயரின் கதையை வைத்திருக்கிராரோ என்னவோ தெரியவில்லை.
281. சங்கு சக்கரத்துடன் ராமர்
ஆந்திராவில் பத்ராச்சலத்தில் உள்ள ராமர் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
282. சங்கு சக்கரத்துடன் கிருஷ்ணர்
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் பகவான்உள்ள அக்கூரில்கிருஷ்ணன்நான்குதிருக்கரங்களுடன் ருக்மணி, சத்யபாமா இருவருடன் காட்சி தருகிறார். இவரது இரண்டு கரங்களில் சங்கும், சக்கரமும் உள்ளது.
283. ராமர், லட்சுமணர், பரதன், சத்ருகனன் - தனித்தனிகோயில்கள்கேரளாவில் மட்டும்தான் ராமர், லட்சுமணர்,பத்ரன், சத்ருகனன் ஆகியோருக்குத் தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. ராமருக்கு திருபிரியாரிலும், லட்சுமணனுக்கு மொழிக்குளத்திலும் பரதனுக்கு இரிஞ்சாலாக்குடாவிலும் சத்ருகனனுக்கு பாயம்மாலிலும் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் திருச்சூர் அருகே இரிஞ்சாலாகுடி என்றால் மும்மூர்த்திகளும் உள்ள இடம் என்று பொருள். இங்கு உள்ள குளிப்பினி தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமமாக கருதப்படுகிறது. இந்த குளிப்பினி தீர்த்தத்தில் மீன்கள் மட்டுமே உள்ளன. தவளைகளோ, பாம்போ கிடையாது. இங்கு கடவுளுக்கு கத்தரிக்காய் தான் காணிக்கையாகத் தரப்படுகிறது.
284. மணிக்கொருமுறைஉடைமாற்றும் கிருஷ்ணர் உள்ள கிருஷ்ணருக்கு மோட்சதுவாரகையில் மணிக்கொருமுறை உடை மாற்றுவதும், ஒரு நாளைக்கு 17
முறை நைவேத்தியமும் செய்யப்படுகிறது. 285.கிருஷ்ணருக்குப் புடவை
உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரியில் ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள். இவை மைசூர் மகாராஜா தந்தவை.
286. ராமர் மடியில் சீதை
செங்கற்பட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பொன்வளைந்த களத்தூர் கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் பட்டாபிராமர் சீதாபிராட்டியை இடது மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்த கோலத்தில் வலதுபுறம் இலக்குவனுடனும் காட்சி தருகிறார்.
287.சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயர்
பெருமாளுக்கு உரிய சங்கு சக்கரங்களை ஆஞ்சநேயர் தம் கரங்களில் வைத்துக் கொண்டு யோக ஆஞ்சநேயராக சோளிங்கரில் அமர்ந்திருக்கிறார்.
288. பத்துக் கை ஆஞ்சநேயர்
அனந்த மங்கலத்தில் ஆஞ்சநேயர் பத்துக் கைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். திரிநேத்ர தசபுஜங்க வீர ஆஞ்சநேயர். இவருக்கு நெற்றிக் கண் உண்டு.
289. ஆஞ்சநேயருக்கு தாழம்பூ மாலை இறைவனிடம் பொய் சொன்ன காரணத்திற்காக தாழம்பூ இறைவனுக்கு அணிவிக்கப்படுவது இல்லை. ஆனால் கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள 'மூலுபாகுல்" இடத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு தாழம்பூ மாலை அணிவிக்கப்படுகிறது.
290. தாராபுரம் காடு அனுமந்தராயன்
தாராபுரம் காடு அனுமந்தராயன் கோயிலுக்கு மேற்கூரையே கிடையாது. கட்ட முயற்சித்தாலும் முடிவதில்லை
291.திருவனந்தபுரம் ஆஞ்சநேயர்
கேரளாவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி சன்னதிக்கு முன்புறம் உள்ள ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்கள் ஆனாலும் உருகுவதும் இல்லை. கெட்டுப் போவதும் இல்லை.
292. வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்
கும்பகோணத்தில் உள்ள இராமசுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் வீணை வாசித்துக் கொண்டு இருக்கிறார்.
293. விநாயகருடன் ஆஞ்சநேயர்
திருநெல்வேலிக்கு அருகே உள்ள Getwell ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே சன்னதியில் ஆஞ்சநேயரும் விநாயகரும் காட்சி தருகிறார்கள்.
294. மிகவும்
உயரமான ஆஞ்சநேயர்
மிகவும் உயரமான ஆஞ்சநேயர் 6 இடங்களில்
இருக்கிறார்கள். 1. நாமக்கல், 2. நங்கநல்லூர், 3. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெய்வச் செயல்புரம் 4. அகிஸ்திரபுரம், 5.சுசீந்திரம், 6. பெங்களூர் மகாலக்ஷ்மிபுரம்.
295. புத்தகத்துடன் ஆஞ்சநேயர்
திருவையாறுக்கு அருகே உள்ள புதுஅக்ரஹாரம் என்ற ஊரில் ஆஞ்சநேயர் இடது கையில் புத்தகத்துடனும் வலது கையில் வீணையுடனும் காட்சி தருகிறார்.
296. ஒரே சன்னதியில் கருடாழ்வாரும் ஆஞ்சநேயரும்ஆந்திராவில் குண்டூர் அருகே உள்ள பொன்னூரில் ஒரே சன்னதியில் கருடாழ்வாரும் ஆஞ்சநேயரும் உள்ளனர்.
297. ராமரிடம் பாடம் படிக்கும் ஆஞ்சநேயர்
வேலூரிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ள படவேட்டில் ஆஞ்சநேயர் ராமபிரானிடம் பாடம் படிக்கும் கோலத்தில் அமர்ந்தபடி, கையில் சுவடி வைத்துக் கொண்டிருக்கிறார். ராமரும் சீதையும்யோக நிலையில் அமர்ந்தபடி பாடம் சொல்லிக் கொண்டிருப்பதுபோல இருக்கிறார்கள். லட்சுமணர் வலதுபுறம் நிற்கிறார்.
Comments
Post a Comment