🔥அஷ்டம தோஷம் நீங்க....🔥
🔥அஷ்டம தோஷம் நீங்க....🔥
🌹பலன் தரும் பரிகாரங்கள் 59🌹
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6, 7, 8-ஆம் இடங்கள் கிரகங்கள் ஏதுமின்றி சுத்தமாக இருப்பது நல்லது. குறிப்பாக எட்டாம் இடத்தில் பாப கிரகங்களான ராகு- கேது இருக்கக் கூடாது. 8-ல் மற்ற கிரகங்களும் இருக்கக்கூடாது. எட்டா மிடத்தில் கிரகங்கள் அமையப் பெற்றவர்கள் அஷ்டம தோஷத்தைப் பெறுகிறார்கள்.
எட்டாம் வீட்டில் ராகு- கேது இருந்தால் அதன் தசை வரும் போதும் மற்ற தசைகளில் அதன் புக்தி வரும்போதும் விஷம் மற்றும் விஷ ஜந்துகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 8-ஆம் வீட்டில் சனி பகவான் இருந்தால் அதன் தசை வரும்போது வம்பு வழக்குகள் உண்டாகும். எட்டில் செவ்வாய் இருந்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும். வெட்டு காயம், தீயினால் பாதிப்பு போன்றவை வரக்கூடும்.
வாழ்நாளில் அட்டம கிரகங்களால் ஏற்படும் தோஷம் விலக கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து கிரகத்தின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். பரிகாரம்-1
8-ஆம் வீட்டில் ராகு- கேது உள்ள ஜாதகர்கள் தசை வரும்போது அல்லது அதற்கு முன்னர் புதுக்கோட்டை அருகே யுள்ள நமணசமுத்திரத்திற்கு அருகில் உள்ள பேரையூர் சென்று, அங்கு அமைந்துள்ள நாகநாத சுவாமிக்கு சர்ப்ப தோஷப் பரிகாரம் செய்து வந்தால் விஷம் மற்றும் விஷ ஜந்துகள் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
எட்டில் சனி கிரகம் இருக்கப் பிறவி எடுத்தவர்கள்,தங்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதல், தினசரி காலையில் எழுந்ததும் காக்கைக்கு சாதம் (பழைய சாதம்) வைத்து வந்தால் சனியின் தாக்கம் வராது.
பரிகாரம்-3
எட்டில் செவ்வாய் கிரகம் இருக்கப் பிறந்த ஜாதகர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் திருச்செந்தூர் முருகனை நீராடி தரிசித்து வர வேண்டும்.
மேலும் கீழ்க்கண்ட செவ்வாய் துதியை தினசரி காலையில் ஒரே நேரத்தில் பதினாறு முறை சொல்லி வணங்கி வந்தால் செவ்வாயின் தாக்கம் ஏற்படாது. வாழ்வில் வறுமை, பிணி, பகை நீங்கி மேன்மையுறலாம்.
செவ்வாய் துதி
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்களன் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.'
Comments
Post a Comment