🌹 அன்னதானத்தின் மகிமை🌹

🌹 அன்னதானத்தின் மகிமை🌹 அன்னதானத்தின் மகிமை சத்தியபுரி என்பது அந்தப் பட்டணத்தின் பெயர். அந்தப் பட்டணத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பாக, முன்னோர் கட்டி வைத்த பிரம்மாண்டமான ஒரு சிவன் கோயில் இருந்தது.அதை நிர்வகித்து வந்த விசுவநாதர் பக்தியும் ஒழுக்கமும் நிரம்பியவர். அவருக்கு வாய்த்த மனைவியும் கணவ னுக்கு இணையாக நல்லொழுக்கங்களுடன் திகழ்ந்தாள். விசுவநாதர் பிறந்தபோது, 'இந்தக் குழந்தைக்கு இதுவே கடைசிப் பிறவி. இவர் ஒரு குழந்தைக்குத் தந்தையானதும் துறவறம் மேற்கொள்வார். அந்த வாழ்க் கையின் மூலம் பிரம்மஞானம் அவருக்கு வாய்க்கும். அவர் மேற்கொள்ள விரும்பும்பொழுது உறவினர் யாரும் அவரைத் தடுக்க வேண்டாம். அவ்விதம் தடுப்பதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. அவருடைய போக்கிற்கு விட்டுவிடுங்கள்' என்று அவருடைய ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் குறிப்பிட்டிருந்தனர். விசுவநாதர் பசிப்பிணி போக்கும் மருத்துவர் போல் விளங்கினார். தம்மை அண்டிய ஏழை எளியவர்களுக்கு 190 அருள்நெறிக் கதைகள் அவர் அயராமல் உணவளித்தார். இறைவன் திருவருளால் அவருக்குப் போதிய செல்வம் இருந்தது. அவருடைய அன்னதானப் பணிக்கு எந்தக் காலத்தி...