👥சித்தர்கள் அருளிய சித்தமருத்துவம்☝








👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

https://www.facebook.com/om14422019/

☝ கருப்பு முடியாக மாற்ற:

அவுரி இலை ,மருதாணி இலை இந்த இரண்டையும் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும் .இந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருப்பாக மாறும்.

👥 பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:

ஆலமரத்தின் விழுதுகள் களைக் கொண்டு வந்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து பின் அத்துடன் சிறிது படிகாரம் சேர்த்து இடித்து சலித்து எடுக்க வேண்டும். இந்தத் தூளினால் தினசரி பல் துலக்கி வந்தால்
 பல் சம்பந்தப்பட்ட நோய் வராது.

💥 தொழுநோய் குணமாக:

ஆரம்பத்தில் தொழு நோய் உள்ளவர்கள் மருதாணி கொழுந்து இலையையும் பூவையும் பறித்து எடுத்து வந்து சுத்தம் பார்த்து சாறு எடுத்து காலை மாலை இருவேளையும் அரை டீ ஸ்பூன் தேனும் அரை டீஸ்பூன் சாறும் கலந்து உள்ளுக்கு சாப்பிட்டு வரத் தொழுநோய் தடுக்கப்படும்.

🐘சதை போடுவது குறைக்க

உடல் பருமன் உள்ளவர்கள் தினசரி உணவில் பப்பாளிக் காயை சேர்த்து வர
 நாளடைவில் உடல் பருமன் குறையும்.

🌏 தூக்கம் வர

மருதாணிப் பூக்களை கொண்டு வந்து இரவு படுக்கும்முன் தலையணையின் கீழ் வைத்துப் படுத்துக் கொண்டால் நல்ல தூக்கம் வரும்.

ஓம்

🍎 உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற

 உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சேர்த்து வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

🍘 கல்லீரல் மண்ணீரலில் நோய் குணமாக

மருதாணிச் செடியின பட்டைகளை
 எடுத்து வந்து நீரில் ஊறவைத்து அந்த
 நீரை தேன் கலந்து காலை மாலை
 இருவேளை சாப்பிட்டு வர கல்லீரல்
 மற்றும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட
 நோய்கள் குணமாகும்.

🍇 முடி உதிர்வதற்கும் கண்கள் குளிர்ச்சிக்கும்

நெல்லிக்காய் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது நின்று விடும் கண்கள் குளிர்ச்சி அடையும்.

🍉 பித்த வாந்தியை நிறுத்த

 நாத்த மர இலைகளை கொண்டு வந்து
 சுத்தம் செய்து உணவோடு சேர்த்து
 சாப்பிட்டு வர பித்தம் தணிந்து வாந்தி
 வருவது நின்றுவிடும்.

🍓 தோல் சுருக்கம் நீங்க

 பச்சைப்பயறுடன் நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் இதனை உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர தோல் சுருக்கம் நீங்கும்.

ஓம்

🍄 உடல் உஷ்ணத்தை குறைக்க

 வாரம் இருமுறை நார்த்தம் பழம் வாங்கி வந்து பிழிந்து சாறு எடுத்து சர்பத் செய்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

🐥 வயிற்றுக் கடுப்பு நீங்க

நெல்லிக்காய் சாறு பிழிந்து சாப்பிட்டு வர ஆசனவாய் கடுப்பு மற்றும் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

🐞 மந்தம் அஜீரணம் குணமாக

நார்த்தம் மரத்தின் பூவினுடைய இதழ்களைப் பறித்து சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி காலையில் கால் ஸ்பூன் தூளுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வர மந்தம் மற்றும் அஜீரணம் குணமடையும்.

🐧 சிறுநீர் எரிச்சல் குணமாக

சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் தினசரி ஒரு நெல்லிக்காய் சாறு பிழிந்து சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

🐦 வாய் நாற்றம் போக

 எலுமிச்சம் பழச்சாறை தினசரி சாப்பிட்டு வந்தால் வாய் நாற்றம் போகும்.

🐸 சர்க்கரை வியாதி நீங்க

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினசரி 3 நெல்லிக்காய் சாப்பிட்டு வர அதிலிருந்து விடுபடலாம்.

ஓம்

🐂 தோள் வலிமை பெற

 தினசரி எலுமிச்சம் பழம் சாப்பிட்டு வர உடலில் உள்ள தோள்கள் வளவளப்பாக பொலிவுடன் தோற்றமளிக்கும்.

🐮 செம்பட்டை முடி கருப்பாக மாற

 நெல்லிக்கனிகளை தண்ணீரில் போட்டு ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் அந்த நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து பின் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் சிறிது நாட்களிலேயே செம்பட்டை முடி கருப்பாக மாறும்.

🐴 வரட்டு இருமல் தனிய

 எலுமிச்சம் பழச் சாறுடன் சம அளவு தேன் எடுத்து வறட்டு இருமல் உள்ள காலங்களில் சாப்பிட்டு வர குணமாகும்.

🐯 கர்ப்பப்பை கோளாறு நீங்க

 கர்ப்பபை கோளாறு உள்ளவர்கள் நெல்லிக்காயை தினசரி சிறிது சேர்த்து வர கர்ப்பப்பை நோய் குணமடைய தோடு தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

🐙 மாதவிடாய் வயிற்றுவலி தீர

 பெண்கள் மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலி ஏற்படும் அந்நாளில் எலுமிச்சம்பழ சாறு சாப்பிட்டுவர வலி  நின்று விடும் .

🐉 குடல் புண் குணமாக

 நெல்லிக்கனியின் சாறுடன் சிறிது கோமியம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும்.

🐬தலைவலி குணமாக

 எலுமிச்சம் பழச் சாற்றில் மிளகை மைய தேய்த்து எடுத்து அதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

🐮 கண்நோய் குணமாக

 நெல்லிக்கனியை ஊசியினால் குத்தி நாள் ஒரு துளி நீர் வெளிவரும் அந்த நீரை கண்களில் போட்டு வர கண் நோய் குணமாகும்.

🍄வயிற்றுவலி குணமாக

200 மில்லி குளிர்ந்த நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் 10 மில்லி கிராம் ஆப்ப சோடாவையும் கலந்து குடிக்க வயிற்று வலி குறையும்.

நன்றி :ஷர்மிளா ரவிக்குமாா்

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

.

Comments

Popular posts from this blog