🌱நல்வேளைக்கீரை சிறப்புகள் 🌱




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாதை ஓரங்களில் மழைக்காலம் முடிந்ததும் நல்ல செழிப்பாக வளர்ந்து இருக்கும்.


ரெண்டு அடி உயரம் வரை நடுத்தண்டில் இருந்து 4 அங்குல துடப்பம் குச்சி அளவு காம்புடன் ஐந்து இதழ்கள் வட்ட வட்டமாக உள்ளங்கை அளவு இலை கரும்பச்சை நிறத்தில் இருக்கும் சிறிய மூக்குத்தி போன்று வெள்ளைப்பூ பூக்கும் துடைப்பங்குச்சி அளவு காய் 3 அங்குல

 நீளத்தில் காய்ந்து முற்றிய பின் வெடித்து

 செடிக்கு அருகில் தரையில் விழுந்து

 முளைக்கும் கோடையில் இக்கீரை கோடையில் இக்கீரை

 அரிதாக கிடைக்கும் இக்கீரையை தைவேளை என்றும் வேளைக் கீரை என்றும் கூறுவார் .இக்கீரையை அடிக்கடி பரித்து சமைத்து உண்பது இல்லை.

 என்றாலும் உடல் நலத்திற்கு தேவையான போது கைப்பிடி அளவு கீரையை பறித்து காரக் குழம்பாக செய்து சோற்றில் பிசைந்து உண்பது வழக்கமாக இருக்கிறது.


இக்கீரை பல நோய்கள் குணமாகும் மூலிகையாக பயன்படுகிறது அவைகளில் கீழே விரிவாக்கப்பட்டுள்ளது.


காது வலி

காது இரைச்சல்

 காதில் சீழ்


அரை கைப்பிடி கீரையை பறித்து நல்ல நீரில் அலசி ஒரு சட்டியில் போட்டு 5 ஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு இளந்தீயில் வேகவைத்து வினைகள் தீரும் வரை இலைகளை புரட்டி இறக்கி எண்ணெய் ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி சிறிய பாட்டிலில் இருப்பு வைத்து காதில் 2 சொட்டுவிட மேற்கண்ட மூன்று நோய்களும் குணமாகும்.


கழுத்து வலி


இக் கீரையை கைப்பிடி அளவு பறித்து சுத்தம் செய்து பருப்புடன் வேக வைத்து குழம்பு வைத்து அல்லது சூடாக செய்து மதிய உணவுடன் மூன்று நாட்கள் உண்டால் கழுத்து வலி தீரும் கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை வைத்து படுக்காமல் வேஷ்டியை மடித்து தலைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும் இவ் வலி உள்ளவர்கள் தலையணையை வைத்து படுக்கவே கூடாது.


வாத நோய்க்கு


இக் கீரையை கைப்பிடி அளவு பறித்து நல்ல நீரில் அலசி புளிக்குழம்பு செய்து ஒளி குறைவாக அதாவது காரமாக சமைத்து சோற்றில் போட்டு பிசைந்து உன்ன வேண்டும் இருபத்தோரு நாட்கள் தினமும் சமைத்து சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.


முதுகு வலி


மேலே கழுத்து வலிக்கு கூறியபடியே இக்கீரையை சமைத்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுகு வலி தீரும் முதுகுவலி உள்ளவர்கள் சாய்வு நாற்காலியை பயன்படுத்தக் கூடாது என்று எண்ணிய மடக்கு கட்டில் அல்லது கயிற்றுக் கட்டிலில் படுக்க கூடாது கோடிகளில் வெறும் தரையில் சிலர் கூட போடாமல் படுப்பார்கள் தரையில் அழுக்கு முதுகில் படிந்து அவ்வப்போது அரிப்பு எடுக்கும் எனவே வெறும் தரையில் படுக்கக் கூடாது.


வயிற்றுப்போக்கு


நல்லவேளை இலைகள் 10 பூண்டு பற்கள் மற்றும் வசம்பு ஒரு சிறு துண்டு எடுத்து அம்மியில் நசுக்கி ஒரு மெல்லிய துணியில் வைத்து முறுக்கினால் வரும் சாறு ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு ஸ்பூன் தேனில் கலந்து காலை மாலை 2 வேளை சாப்பிட சரியாகும்.


நெஞ்சுவலி


நல்வேளை கீரை இலைகள் 20ம் வெள்ளைத் தாமரை பூ இதழ்கள் பத்தும் ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி ஆறியதும் வடிகட்டி கசாயத்தை இரண்டு பங்காக்கி காலையில் எட்டு மணிக்கு ஒரு பங்கும் மாலை 2 மணிக்கு ஒரு பங்கும் பருக வேண்டும் இரண்டு நாள் தயாரித்த கசாயம் பருக நெஞ்சுவலி குணமாகும்.


குடற் பூச்சிகள் ஒழிய


கைப்பிடி அளவு கீரை இலைகளை பறித்து நல்ல நீரில் அலசி 5 மிளகு ஒரு துண்டு மஞ்சள் மூன்றும் அம்மியில் நீர் விட்டு நைஸாக அரைத்து தினமும் காலை காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு சாந்தை விழுங்கவேண்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் தயாரித்து விழுங்க எந்த பூச்சி நாடாப்புழு இருந்தாலும் இழந்து மலத்துடன் வெளியேறும்.


ஒற்றைத் தலைவலி


கைப்பிடி அளவு கீரையைப் பறித்து சுத்தம் செய்து அம்மியில் நீர் விட்டு நைஸாக அரைத்து தலையில் முடி மீது பற்று போட்டு ஒரு மணி நேரம் கழித்து எடுத்து விட்டு குளிக்க வேண்டும் மூன்று நாட்கள் செய்ய ஒற்றைத் தலைவலி தீரும்.


குளிர் காய்ச்சல்


கைப்பிடி அளவு கீரையை சுத்தம் செய்து அதனுடன் சுக்கு ஒரு துண்டு 6 மிளகு சீரகம் அரை ஸ்பூன் இந்த மூன்றையும் அம்மியில் நீர்விட்டு நசித்து ஒரு சட்டியில் போட்டு 500 மில்லி நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து நூறு மில்லியாக சுண்டியதும் வடிகட்டி காலை மதியம் மாலை வேளை 50 மில்லி கசாயமாக பருக மூன்று நாட்கள் செய்ய குளிர் காய்ச்சல் குணமாகும்.


குழந்தை சளி தீர


நல்வேளை பூக்கள் 50 ஐ பறித்து கசக்கிசாறு எடுத்து அதில் 10 துளி எடுத்து தாய்ப்பால் கலக்கி குழந்தைக்கு காலை மாலை இரண்டு வேளை புகட்ட சளி காய்ச்சல் குணமாகும்.


கட்டிகள்


 நல் வேளை இலைகள் 10 ஐபரீட்சை நீரில் அலசி அம்மியில் நைசாக அரைத்து சாந்தை வழித்து கட்டி மீது பரப்பி கட்டு கட்ட வேண்டும் இரண்டு நாட்கள் செய்ய கட்டில் அமுங்கும் பழுத்து உடைந்து விட்டால் சீழ் முழுவதும் வெளியேறிய பின் மீண்டும் வந்து தயாரித்து ஒருநாள் கட்டு கட்ட புண் ஆறும்.


பசி மந்தம்


இக்கீரை இலைகள் 10 அரை ஸ்பூன் சீரகம் ஒரு துண்டு மஞ்சள் மூன்றையும் நீர் விட்டு நைஸாக அரைத்து கோலி அளவு சரியாக செரிமானமாகி பசி எடுக்கும்.


பருத்த உடல் இளைக்க


தினமும் 20 இலைகள் ஐந்து பூண்டு தக்காளி சேர்த்து வதக்கி அம்மியில் நைசாக அரைத்து வழித்து காலையில் வெறும் வயிற்றில் கோடி அளவு சாந்தை விழுங்கவேண்டும் தொடர்ந்து 40 நாட்கள் விழுங்கி உடல் இளைத்து விடும்.


என்ன அன்பு முகநூல் நண்பர்களே இன்று கீரையைப் பற்றி கூறி உள்ளேன் உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தால் அவசியம் கருத்து தெரிவிக்கவும் இல்லை என்றால் இது மாதிரியான கீரைகளை பற்றி கொடுக்க மாட்டேன். கொடுக்க வேண்டும் என்றால் அவசியம் கருத்துக் கூறவும்.


🌷நன்றி மிர்த்திகா


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog