✋ வர முத்திரை ☝





🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/



மிக மிக எளிய முத்திரை வலது கையில் மட்டுமே இந்த முத்திரையைச் செய்ய வேண்டும் . "தான்" எனும் அகங்காரத்தை இறைவனின் காலடியில் சமர்ப்பித்து,  "நான் ஒன்றுமில்லாதவன் " உனது பாதங்களே எனக்கு சரணாகதி" என்பதை குறிக்கும் முத்திரை இது.


           🍀செய்முறை🌻


🍁வலது உள்ளங்கையை மலர்த்தி விரல்களை வளைவின்றி நேராக வைத்துக் கொள்ளவும்.


🐘விரல்கள் ஐந்தும்  இடைவெளியின்றி  ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்க  வேண்டும்.


🐚விரல்கள் கீழ்நோக்கி (பூமி பாா்த்து )இருப்பது அவசியம்.


              🍂அமரும் முறை🌷


⚽இந்த முத்திரையை அமர்ந்த நிலையில் செய்வது சற்றே கடினமாக இருக்கும் (முடிந்தால் செய்யலாம் ;தவறில்லை.)


🚘நின்று கொண்டுசெய்வது எளிதாக இருக்கும்.


🏉முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.


❄முழு கவனமும் முத்திரையின் மீது பதிந்து இருக்கட்டும்.


              🌎எவ்வளவு நேரம்?🌏


💜இந்த முத்திரையை 8 முதல் 15 நிமிடங்கள் வரை செய்தால் போதும்.



💙ஒரு நாளில் மூன்று முறை வரையிலும் செய்யலாம்.


               💯சுவாசம்🔥🔥


💦சவாசம் அதன் இயல்பான நடையில் இருந்தால் போதும் .


👎சிரமப்பட்டு மூச்சை உள்ளே இழுப்பதோ வெளியே விடுவதோ கூடாது .


👐சற்றே ஆழமாகவும் சீராகவும் இருந்தால் போதும் .


👊கும்பகம் கூடாது..


            🏃பலன்கள்🏃🚶


🏇தான் எனும் அகங்காரம் (ஆணவம்) அழியும் .இதுவே ஞானப் பாதையின் முதல் படியாகும் .


🏄உலக இச்சைகளிலிருந்து மனம் விடுபட்டு, இறை சிந்தனையும், ஆன்மீக நாட்டமும் மனதில் உருவாகும் .


🏃மனதில் தேங்கி இருக்கும் கழிவுகள் (எதிர்மறை எண்ணங்களும் ),தீய சிந்தனைகளும் வெளியேறும் .


⛹சக்தி உடல்களில் தேங்கியுள்ள எதிர்மறை எண்ண பதிப்புகளையும் வெளியே பூமிக்குள் சென்றுவிடும் .


👥பணிவு ,தன்னடக்கம் போன்ற நற்பண்புகள் உருவாகும்.


👤 சேவை மனப்பான்மை மனதில் துளிர் விடும்.


 🏂இறைவனே "சரண் "என்று அவன் பாதங்களை பற்றிக் கொள்ளும் போது இறைவனின் அருட்பார்வை உங்கள் மேல் விழும் .


⛷மனிதர்களால் தீர்க்க முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொண்டு அல்லல்படுபவர்கள் இந்த முத்திரையைச்

 செய்தபடி சிவனை தொடர்ந்து வழிபட்டு

 வந்தால் விரைவில் சிக்கல்கள்

 அனைத்தும் தீரும் .


🎅சிவகடாட்சத்தைப் பெற்றுத் தரும்  ஒரு எளிய முத்திரை இது.



                   ⛹குறிப்பு ⛹


🎅இந்த முத்திரை செய்யும்போது வலது கையில் மட்டும் செய்ய வேண்டும்.


👰 இடது கை இயல்பாக இருக்கட்டும்.


✋அடுத்து நாம் பார்க்க இருக்கும் முத்திரை அபய முத்திரை.☝


🎈நன்றி ஷர்மிளா ரவிக்குமார்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏



Comments

Popular posts from this blog