🌎 யோகம் என்பது...🌀
யோகம் என்ற சொல்லுக்கு இணைப்பு என்று பொருள் இது கடவுளை காண்பதற்கான சாதனம் சிலருக்கு வாழ்க்கையின் தேவை அல்லது குறிக்கோளை அடைவதற்கான சாதனம் பலருக்கு யோகத்தில் வெற்றி பெற முயற்சியும் ,பயிற்சியும் தேவை. யோகம் புரிந்தவர் தம்முடைய உடலையும், மனத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
யோக சாதனை (பயிற்சி)யை மேற்கொள்பவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்துவர வேண்டும் .அதிகம் பேசக்கூடாது .பேச்சு மன ஆற்றலை சிதறடித்துவிடும் .சோம்பியிருப்பதும் தவறு. கடுமையாய்
உழைப்பதும் தவறு .
யோகத்தின் மூலம் நீங்கள் செய்ய விரும்பும் எந்த செயலும் சாதித்து பிடிப்பதற்குரிய அறிவுத்திறனையும் செயலாற்றலையும்
பெறமுடியும் .
யோகத்தில் மனம் பக்குவமடையும் அது அலைகி்ற மனத்தை ஓரிடத்தில் நிலைப்படுத்தும் நிலைப்பட்ட மனம் அமைதி காணும். உடல் மன ஆரோக்கியம் வளரும் எதையும் தெளிவாக அறியவும், எதிலும் உறுதியாக இருக்கவும் இது உதவும் .
யோகிகள்உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் .மிதமாய் உண்பது நல்லது. சில மாதங்களுக்கு பால், பயறு ,பருப்பு வகைகள் மட்டுமே உண்டு வரலாம்.
முக் குணங்கள் பற்றி அறிவீர்கள் உணவிலும் அப்படியே சாத்விக, ராஜஸ ,தாமஸ உணவு கள் உண்டு. உணவில் சிறிது ஒழுங்கீனம் இருந்தாலும் அது மனத்தின் சமநிலையை கெடுத்துவிடும்.
யோகி மனம் தளர்ந்தால் தொடர்ந்து யோகம் பழக இயலாது. திடசித்தம் முக்கியம் .தடைகள் கடந்து யோகத்தை தொடர விடாமுயற்சி வேண்டும் .யோகி தா்க்கம் பண்ணுவதே இல்லை, அதனால் அவருடைய மனம் குழப்பத்திற்குள்ளாவதும் இல்லை.
யோகி விஷயங்களை ஊடுருவி பார்க்கிறான் ,உண்மை கண்டு தெளிகிறான்.
விஷயங்களை மேலோட்டமாய் பார்க்கி்ற பழக்கம் அவர்களிடம் கிடையாது .அவன் கண்டதி எல்லாம் மனதை ஓட விடவும் மாட்டான் உயாிய நோக்கம் கொண்டவன் அவன் அந்த நோக்கம் அவளுடைய மூளையில் மட்டுமல்ல உடம்பின் ஒவ்வொரு ரத்த நாளத்தில் பரவி இருக்கும்
சராசரி மனிதர்கள் ஆலயம் சென்று வழிபடுவார்கள். சித்தர்கள் தங்கள் தேகத்தை ஆலயமாக்கி அதில் தெய்வ பக்தி செலுத்தி வந்தார்கள் இது ஒரு மாறுபட்ட வழிபாட்டு முறை.
சித்தர்கள் தங்கள் உடம்பை உணர்ச்சியற்ற, உயிர்ப்பு கூட இல்லாத நிலைக்கு உள்ளாக்கி கொண்டு ,அந்த நிலையிலேயே இறைவனுடன் கலந்து நின்று ஈடற்ற இன்பத்தை அனுபவிப்பார்கள்.
சித்தர்கள் யோக சமாதி விரும்பி ஏற்றுவார்கள்.
திருமூலருடைய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் .அவருடைய திருமந்திரம் நூல் தோன்றியதே யோக சமாதியின் உள்ளிருந்து தான் அந்த தவயோகி ஒரு இடையனுடைய உடம்பில் தன்னுடைய உயிரைச் செலுத்தி ,பல்லாண்டு காலம் தவம் புரிந்தார.் அவருடைய வாழ்க்கை யோக சமாதியை விரும்பியேற்ற கதை தான் நாம் யோகத்தில் அனுபவித்த பேரின்பத்தை உலகோரும் பெற வேண்டும் என்கின்ற உயாிய நோக்கு அவரிடம் இருந்தது .அதன் விளைவாகவே திருமந்திரம் என்ற நூலை அவர் வழங்கினார்.
ஒழுக்கத்தை வாயால் சொன்னால் உபதேசம் .அதை காதில் கேட்கிற எல்லோருக்கும் ஒழுக்க சீலரகளாகி் விடுவதில்லை ஒழுக்கத்தைச் செயல்முறையில் கொண்டு வருவது யோகம் சித்தர்கள் செயல்முறையில் விளங்கினார்கள்.
🌷நன்றி சங்கரநாராயணன்
Comments
Post a Comment