🌲தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்🌷


🍂அனைத்து  தந்தையருக்கும் சமர்ப்பணம்🍁


🌺குறிப்பு:-


இதை படித்தவர்கள் எத்தனை பேர் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று பார்ப்போம்.



🌎முதுமை வந்திடில் முடிந்துவிடும் உறவுகள் 🌎




பணமும் பலமும் இருந்திடும் போது

சொந்தமும் பந்தமும் சூழ்ந்தே இருப்பார்

நரையும் திரையும் எய்திடும் போது

பரிந்துரையோடு பாிஜனம் எது ?


                         பதவுரை


யாவத்        ~ எதுவரையிலும்


வித்த உபாா்ஜன சக்த~  பொருள் ஈட்டும் சக்தி உள்ளதோ


தாவத்  ~ அதுவரையிலும் தான்


நிஜ பரிவார ~ நமது சுற்றத்தினர்


ரக்த ஃ ~ நம்மிடம் அன்புடன் இருப்பார்


பஸ்சாத் ~பிறகு


ஜா்ஜரதே ~ நரை ,திரை ,மூப்பு டன் கூடிய தேஹத்தில்


ஜீவதி ~ வாழும் போது


கேஹே ~ வீட்டில்


கோபி ~ யாருமே


வாா்த்தாம்  ~குசலம் விசாரிக்கும் வகையில்


ந  ப்ருச்சதி  ~ ஒரு வாா்த்தைகூடகேட்க மாட்டார்கள்.


கருத்துரை


ஒருவன் பணம் சம்பாதிக்கும் வரையில்தான் உற்றமும் சுற்றமும் அவனிடம் அன்பு காட்டுவார்கள். அவன் நரையும் திரையும் கூடி கிழப்பருவம் எய்துகாறபோது ( அதாவது அவன் பொருளீட்டுகின்றனர் சக்தியை இழந்து விட்ட போது )அவனது வீட்டில் உள்ள யாருமே அவனிடம் "எப்படி இருக்கிறாய்?" என்று குசலம் கூட விசாரிக்க மாட்டார்கள்.

 இதுதான் உலகத்தவா்  இயல்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


விரிவுரை


இல்லற வாழ்வில் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயத்தை இந்த சுலோகத்தில்  கூறியிருக்கிறார்.






ஒரு குடும்பத் தலைவன் அவனது சம்பாத்தியத்திற்கு தான் மதிக்கப்படுகின்றான் என்ற இயற் நிதர்சனமான உண்மையை கசப்பான உண்மையை நமக்கு புரியவைக்கிறது.


வேலையில் இருக்கும்போது ஒருவனுக்கு குடும்பத்தினரும் தரும் அதே மரியாதையை அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் read it or not been அவனுக்கு தருவதில்லை என்பது பல அனுபவத்திலேயே உணர்ந்திருப்பார்கள்.


வீட்டில் சும்மா தானே இருக்கிறார் என்று ஓய்வு பெற்றவர்களை கடைக்கு ஏறுவதையும் காய்கறி வாங்க அனுப்புவதும் மின்சார கட்டணம் செலுத்த அனுப்புவதையும்  நாம் பல வீடுகளில் பார்த்திருக்கிறோம்.


பணம் சம்பாதிக்கின்ற காலத்தில் ஒரு விதமான மரியாதை ஆதிக்க காலத்தில் ஒரு விதமான மரியாதை என்பது தான் பல குடும்பங்களில் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை சங்கரர் கூற்றால் அறிய முடிகிறது.


இதற்கு விதிவிலக்காக சில குடும்பங்கள் இருக்கலாம் இருக்கலாம் ஆனால் உலகத்தவர் இயல்பை வெட்ட வெளிச்சமாக்குகிறது சங்கரர்.


இல்லானை இல்லாளும் வேண்டாள்

ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.



என்று அவ்வையாரின் வாக்கும் இதனை உறுதிப்படுத்துகிறது.


பா்த்ருஹரியும் இதே விஷயத்தைக் கூறியிருக்கிறாா்.


மாதா நிந்ததி

பிதா குப்யதி; காந்தா ச ந ஆலிங்கதேஆலிங்கதே





ஒரு மனிதரிடம் பணம் இல்லையென்றால் சொன்னால் அவனுடைய தாய் அவனை நிந்திப்பாள .்தந்தை கோபித்துக்கொண்டு ஏசுவார் மனைவி கணவனை அன்போடு அணைத்துக் கொள்ள முன்வர மாட்டார் என்றார் பா்த்ருஹரி இவை வாழ்வில் கசப்பான உண்மைகள்.


பதவியில் இருக்கும்போது ஒருவனுக்கு தரப்படுகின்ற மரியாதை அவன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் கிடைப்பதில்லை.


கலெக்டர் வீட்டு நாய் சாகும்போது கூட ஆயிரம் பேர் துக்கம் கேட்க வருவார்கள் ஆனால் அதே கலெக்டர் ரிட்டையர்ட் ஆன சில ஆண்டுகளுக்குப் பின்னால் இருக்கிற போது துக்கம் கேட்க ஒரு சிலரே வருவார்.


ரிடையர் ஆன உடனே கிடைக்கின்ற மரியாதை கூட வயதாக வயதாக ஆக முதுமை வந்து அடைகிற போது உடல் பலவீனம் பற்றி பிறரது உதவியை எதிர் நோக்கி என்ற காலத்தில் கிடைக்காது.


அதனைத்தான் சங்கரரின் இங்கு ஜா்ஜர தேஹே ஜீவதி   என்ற சொறறொடரால் குறிக்கிறாா்.


ஒரு காலத்தில்தனது சம்பாத்தியத்தால் தான் காப்பாற்றிய குடும்பத்தினரை கூட முதுமையில் தன்னை புறக்கணிப்பதை பலர் அனுபவித்திருப்பார்கள்.


அந்த காலத்தில் தனது சம்பாத்தியம் எல்லாவற்றையுமே தனது பிள்ளைகளின் படிப்பு பெண்ணின்  சீா் செனத்தி என்று செலவழித்துவிட்டு முதுமையில் கஷ்டப்பட்டு பலரை நாம் பார்த்து இருப்போம்.


ஆதிசங்கரர் உபதேசத்தை கண்ணோட்டத்தில் செய்யப்படுகிறது ஒரு உபதேசமாகவும் கொள்ளலாம்.


சம்பாதிக்கிற எல்லா பணத்தையும் பெண்களுக்கும் பிள்ளைக்கும் கொடுத்துவிட்டு முதுமையில் ஓட்டாண்டியாக இருக்கக் கூடாது என்கின்ற உபதேசம் தான் அது.


தனது முதுமைக்கு என ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்துக் கொண்டிருந்தால் அந்தப் பணத்திற்கு பிள்ளையும் என்றாலும் கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்வார்கள்.


அத்யாத்மிகக் கண்ணோட்டத்தில் நாம் உலகாயத உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட்டுவிட்டு இறைவனையே சாா்ந்து வாழப் பழக வேண்டும் உலகப் பற்றுகளை ஒழிக்க இறைவன் திருவடியை பற்றிக் கொள்ள வேண்டும்.


 பற்றுக பற்றற்றான் பற்றினை 

பற்றுக பற்று விடற்கு.


என்று வள்ளுவர் வாய்மொழி என்று சித்திக்கற்பால


🌷தந்தையர்களின் கண்ணீர் கதை 🌺


நன்றி சர்மிளா ரவிக்குமார்.

Comments

Popular posts from this blog